அமெரிக்கா - சீனா வர்த்தக ஒப்பந்தத்தில் நல்ல முன்னேற்றம்: அதிபர் டிரம்ப் மகிழ்ச்சி

Donald Trump

பட மூலாதாரம், AFP Contributor

அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான உறவு நல்ல முன்னேற்றம் கண்டு வருவதாக ஆண்டு முடியும் தருவாயில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தாண்டில், இருநாடுகளும் ஒன்றன் மீது ஒன்று வரிகளை விதித்து பழித்தீர்த்து கொண்டன.

பட மூலாதாரம், Twitter

இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தக சமநிலையை சீனா முறையாக அணுகவில்லை என்று அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு முன்வைத்ததை அடுத்து இருநாடுகளிடையே ஒரு வர்த்தக போர் தொடங்கியது.

அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று விதித்து கொண்ட புதிய வரிகளை விலக்கிக் கொண்டு பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொள்வதாக இந்த மாத தொடக்கத்தில் முடிவெடுத்தன.

பட மூலாதாரம், M Niyas Ahmed

கஜ புயலுக்கு அப்போதே தீர்வு சொன்ன நம்மாழ்வார்

பெருவாழ்வு என்பது தம் காலத்தை கடந்தும் மற்றவர்களுக்கு பயனாக வாழ்வது. அப்படியான பெரும் வாழ்வை வாழ்ந்திருக்கிறார் நம்மாழ்வார். காலத்தை கடந்தும் தீர்வுக்காக அவரையே தேடுகிறார்கள்.

எல்லாருக்கும் நன்மை பயக்க வாழ்ந்த அந்த வெண்தாடி கிழவனின் நினைவுதினம் இன்று.

தான் உயிரோடு இருந்த காலத்தில் கஜ புயல் ஏற்படுத்தியுள்ள சேதத்திற்கு அப்போதே தீர்வு சொல்லியிருக்கிறார் நம்மாழ்வார். அது என்ன?

பட மூலாதாரம், MARISHA CHAPLIN

ஃபேஸ்புக்கில் நிதி திரட்டி செயற்கை கருவூட்டல் மூலம் குழந்தை பெற்ற தம்பதி

தாங்கள் உறுப்பினராக இருக்கும் ஃபேஸ்புக் குழுவொன்றில் நிதி திரட்டி அதன் மூலம் கிடைத்த பணத்தை கொண்டு செயற்கை கருவூட்டல் மூலம் பிரிட்டனை சேர்ந்த தம்பதியினர் குழந்தை பெற்றுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் மூலம் திரட்டப்பட்ட நிதியின் மூலம் கர்ப்பம் தரித்த சாப்ளினுக்கு கடந்த சனிக்கிழமை அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தை பிறந்தது.

பா.ரஞ்சித்: 'கீழ் வெண்மணி, இம்மானுவேல் சேகரன் குறித்து படமெடுக்க விரும்புகிறேன்'

அட்டகத்தி, மெட்ராஸ், காலா படங்களின் இயக்குனர் பா.ரஞ்சித் தன்னுடைய சினிமாவுக்காக எந்த அளவுக்குப் பேசப்பட்டவரோ, அதே அளவுக்கு அவர் சினிமாவுக்கு வெளியில் பேசும் கருத்துகளுக்காகவும் செயல்பாடுகளுக்காகவும் கவனிக்கப்படுபவர், விமர்சிக்கப்படுபவர்.

சென்னை வானம் என்ற பெயரில் அவர் நடத்தும் மூன்று நாள் கலை நிகழ்வுக்கான ஏற்பாடுகளில் பரபரப்பாக இருந்த பா. ரஞ்சித், அரசியல் குறித்த கேள்விகள் வேண்டாமென்று மறுத்துவிடுகிறார்.

பா.ரஞ்சித்தின் முழு பேட்டியை படிக்க: பா.ரஞ்சித் நேர்காணல்

ஐந்து வயது சிறுமிக்கு தண்ணீர் கொடுக்காமல் கொன்ற பெண் தீவிரவாதி

குடிக்க தண்ணீர் கொடுக்காமல், கடும் வெயிலில் சங்கிலியால் கட்டி வைத்து ஐந்து வயது பெண் குழந்தையை உயிரிழக்க செய்த விவகாரத்தில் ஐ.எஸ் இயக்கத்தை சேர்ந்த பெண் உறுப்பினர் ஜெர்மனியில் போர்க்குற்ற விசாரணையை எதிர்கொண்டுள்ளார்.

ஜெர்மனியின் முனிச் நகரத்திலுள்ள தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று இதுகுறித்த விசாரணையில் ஜெனிஃபர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: