கால்பந்து மூலம் நூற்றுக்கணக்கான யூத குழந்தைகளை காப்பாற்றியவர் - நெகிழ்ச்சி கதை

சித்தரிப்புப் படம்

பட மூலாதாரம், Getty Images

யூத குழந்தைகளை காப்பாற்றியவர்

இரண்டாம் உலகப்போரின் போது கால்பந்து விளையாட்டு மூலம் நூற்றுக்கணக்கான யூத குழந்தைகளை காப்பாற்றிய பிரான்ஸ் வீரர் ஜார்ஜஸ் தன் 108ஆவது வயதில் இயற்கை எய்தினார். யூத குடும்பத்தில் பிறந்த அவர், 1940ஆம் ஆண்டு நாஜி படைகளால் பிடிக்கப்பட்டார். ஆனால், அதிலிருந்து அவர் தப்பினார்.

பட மூலாதாரம், AFP

எப்படி காப்பாற்றினார்?

அவர் விவரித்தது

"நான் யூத குழந்தைகளை சுவிஸ் எல்லையில் உள்ள கால்பந்து மைதானத்திற்கு அழைத்து செல்வேன். அந்த எல்லையின் வேலி 2.5 மீட்டர் உயரத்திற்குதான் இருந்தது. அங்கு காவலுக்கும் யரும் இல்லை. அந்த எல்லையில் பந்தை ஓங்கி அடிப்பேன். பந்தை துரத்துங்கள் என்றி சொல்லி... அப்படியே எல்லையை கடக்க வைப்பேன்." என்று கூறி உள்ளார்.

இதுவரை 350 குழந்தைகள் வரை காப்பாற்றி உள்ளதாக நினைவு கூர்ந்துள்ளார்.

எல்லை சுவர்

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்கா - மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டும் திட்டம் முன்னமே கைவிடப்பட்டதாக அண்மையில் தம் பணியை டிரம்பின் வெள்ளை மாளிகை தலைமை அலுவலர் ஜான் கெல்லி கூறி உள்ளார். 2015ஆம் ஆண்டு அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை முன்னெடுத்தபோது மெக்சிகோ எல்லையில் சுவர் என்பது டிரம்ப்பின் பிரதானமான வாக்குறுதியாக இருந்தது.

ஆனால், இந்த சுவர் திட்டம் கைவிடப்பட்டதாக கெல்லி கூறி இருப்பது முரணாக உள்ளது. அடுத்த முரண் என்ன வென்றால் இந்த வாரம் மட்டும் 59 முறை "சுவர்" குறித்த ட்வீட் செய்துள்ளார் டிரம்ப்

சுவர் கட்டும் டிரம்பின் இந்த திட்டத்திற்கு காங்கிரஸ் நிதி ஒதுக்க முன்பே மறுத்துவிட்டது. சுவர் கட்ட நிதி அனுமதி வழங்காவிட்டால், மெக்சிகோ எல்லையை இழுத்து மூடுவேன் என டிரம்ப் எச்சரித்து இருந்தார்.

இனப்படுகொலையில் இருந்து நூற்றுக்கணக்கானோரை காப்பாற்றிய மூதாட்டி

பட மூலாதாரம், JEAN PIERRE BUCYENSENGE

நூற்றுக்கும் மேற்பட்டவர்களை தனது வீட்டில் மறைத்து வைத்து அவர்களின் உயிரை காப்பாற்றிய 93 வயதான ஜுரா காரூஹிம்பி கடந்த வாரம் ருவாண்டா தலைநகர் கிகாலியில் இறந்தார்.

யார் அவர்?

கோடரிகளையும், ஆயுதங்களையும் கையில் ஏந்திய கும்பல், ஜுரா காரூஹிம்பியின் வீட்டில் அடைக்கலம் புகுந்திருந்த மக்களை வெளியே அனுப்புமாறு கூச்சலிட்டபோது, அவரிடம் ஆயுதங்கள் ஏதுமில்லை. ஆனால் நிராயுதபாணியான ஜுரா துணிச்சலுடன் அவர்களை எதிர்த்தார்.

அதற்கு காரணம் அவரிடம் மந்திர சக்திகள் இருப்பதாக வன்முறை கும்பல் கருதியதுதான். இல்லையென்றால், அடைக்கலமாக இருப்பவர்களை வெளியே அனுப்பு என்று கேட்டுக்கொண்டு வீட்டிற்கு வெளியே அவர்கள் நின்றிருக்கமாட்டார்கள். வெறியுடன் வீட்டினுள் புகுந்து ஜுரா காரூஹிம்பியை வெட்டித் தள்ளிவிட்டு அனைவரையும் கொன்று குவித்திருப்பார்கள்.

ஆரியர்கள் வருகை

பட மூலாதாரம், Getty Images

பழங்கால மரபணு ஆராய்ச்சியின் முடிவு ஒன்று இந்திய முற்கால வரலாற்றில் ஒரு புதிய வெளிச்சம் பாய்ச்சுகிறது. இந்து தேசியவாத கருத்தியலை அந்த முடிவு மறுத்தலிக்கிறது என்று எழுதுகிறார் டோனி ஜோசப். இந்தியர்கள் யார்? அவர்கள் எங்கிருந்து வந்து இந்து நிலப்பரப்பில் குடிபுகுந்தார்கள்? என்பது ஒரு பெருங்கேள்வியாக இருக்கிறது. கடந்து சில ஆண்டுகளாக இது தொடர்பான வாதங்கள் உஷ்ணமடைந்து வருகின்றன.

இந்த பழமையான மரபணு ஆராய்ச்சியின் முடிவானது மக்கள் எங்கிருந்து எங்கு குடிபுகுந்தார்கள் என்ற விவகாரத்தில் புரிதலை வழங்குகிறது.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மரபணுவியலாளர் டேவிட் ரெய்ச்சின் ஆய்வு முடிவானது 2018 மார்ச்சில் வெளியானது. அவருடன் உலகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த, , வரலாறு, தொல்லியல், மானுடவியல், மரபணுவில் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த 92 அறிஞர்கள் இந்த ஆய்வில் பணியாற்றினார்கள்.

அந்த ஆய்வானது கடந்த 10 ஆயிரம் ஆண்டுகளில் இரண்டு மிகப்பெரிய குடிப்பெயர்வு நடந்துள்ளது.

முதல் குடிப்பெயர்வானது தென்மேற்கு இரான் பகுதியில் உள்ள ஜக்ரோஸிலிருந்து நடந்திருக்கிறது. அதாவது, அங்கிருந்து இந்தியாவுக்கு விவசாயிகளாகவும், ஆடு மேய்ப்பவர்களாகவும் வந்திருக்கிறார்கள்.

இந்த குடிபெயர்வானது 7000 மற்றும் 3000 ஆண்டுகளுக்கு (இயேசு பிறப்பதற்கு முன்பு) இடையேயான காலக்கட்டத்தில் நடந்திருக்கிறது.

இந்த கால்நடை மேய்ப்பவர்கள், இதற்கு முன்பு இந்திய பகுதிக்கு வந்த அதாவது 65 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறி வந்த மக்களுடன் கலந்திருக்கிறார்கள். இவர்களே சிந்துவெளி நாகரிகத்தை உருவாக்கியவர்கள்.

பிரிட்டன் பெண் மீது இந்தியாவில் பாலியல் தாக்குதல்

பட மூலாதாரம், Getty Images

சண்டிகரில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைந்துள்ள பகுதியில் 50 வயதைக் கடந்த பிரிட்டன் நாட்டுப் பெண் ஒருவர், தான் தங்கியிருந்த ஆடம்பர விடுதியில் மசாஜ் செய்யச் சென்ற இடத்தில், இந்திய இளைஞர் ஒருவரால் பாலியல் தாக்குதல் செய்யபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் டிசம்பர் 20 அன்றே நடந்திருந்தாலும், பாதிக்கப்பட்ட பெண் காவல் புகார் அளித்தபின்னரே டிசம்பர் 28 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கோவாவுக்கு சுற்றுலா வந்த 48 வயதாகும் பிரிட்டன் பெண் ஒருவரை இளைஞர் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்து அவரிடம் கொள்ளையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இன்னும் பத்து நாட்கள் கூட முடியாத நிலையில் இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சுமார் 25 வயதாகும் அந்தக் குற்றவாளி தலைமறைவாக இருப்பதாகவும், அவரைத் தேடி வருவதாகவும் காவல் துறை பெண் அதிகாரி ஹர்ஜீத் கௌர் பிபிசியிடம் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: