வருடந்தோறும் நாற்பதாயிரம் பாலியல் வல்லுறவுகள் - இதுவொரு ‘தேசிய நெருக்கடி’

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் படத்தின் காப்புரிமை Getty Images

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு எதிராக ஆண்களை அணிதிரள கோரி இருக்கிறார் தென் ஆப்ரிக்கா அதிபர் சிரில் ராமபோசா.

இதனை 'தேசிய நெருக்கடி' என்றும் அவர் வர்ணித்துள்ளார்.

தொடர்ந்து பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்படுகிறார்கள். இதனை முடிவுக்கு கொண்டு வர வேண்டிய நேரமிது என்றும் அவர் கூறி உள்ளார்.

ஆளும் ஆப்ரிக்க தேசிய காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை வெளியிடும் போது ராமபோசா இத்தகைய உணர்ச்சிகரமான கோரிக்கையை முன்வைத்தார்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்

ஆண்டுதோறும் ஆப்ரிக்காவில் நாற்பதாயிரம் பாலியல் வல்லுறவு சம்பவங்கள் நடப்பதாக பதிவாகிறது. ஆனால், உண்மையில் அங்கு இதனைவிட அதிகமாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடக்கின்றன.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption சிரில் ராமபோசா

பத்தாயிரத்திற்கும் அதிகமான தொண்டர்கள் கூடி இருந்த டர்பன் மைதானத்தில் உரை நிகழ்த்தும் போது, அதிபர் சிரில் ஆப்ரிக்க ஆண்களிடம் இத்தகைய கோரிக்கையை முன்வைத்தார்.

பெண்களின் நிலையை மேம்படுத்துவதில் நாம் வியத்தகு முன்னேற்றங்களை அடைந்துள்ளோம். இருந்தபோதிலும், பாலியல் ரீதியான வன்முறைகள் ஒரு தேசிய நெருக்கடி. அதனை முடிவுக்கு கொண்டுவர நாம் உறுதி பூண வேண்டும் என்றார்.

மேலும் அவர், "குழந்தைகள் சிறுவயதிலேயே ஒருவரை ஒருவர் சமமாக மதிக்கவும், எந்த சூழ்நிலையிலும் வன்முறையை கட்டவிழ்த்துவிட கூடாது என்பதையும் கற்றுக்கொள்ள வேண்டும்." என்று உள்ளார்.

அதிகரிக்கும் குற்றங்கள்

படத்தின் காப்புரிமை Getty Images

2017- 18 இடையேயான காலகட்டத்தில் தென் ஆஃப்ரிக்காவில் 40,035 பாலியல் வல்லுறவு சம்பவங்கள் நிகழ்ந்ததாக காவல்துறை ஆவணத்தில் உள்ளது. அதாவது, ஒரு நாளுக்கு 110 குற்றங்கள். ஆனால், 2016 -17 காலகட்டத்தில் இது 39,828 என்ற கணக்கில் இருந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: