சீனாவில் 'ஐஸ்' விற்றவருக்கு மரண தண்டனை

'கிரிஸ்டல் மெத்' போதைப்பொருள் படத்தின் காப்புரிமை GUILLERMO ARIAS / getty
Image caption 'கிரிஸ்டல் மெத்' போதைப்பொருள் (கோப்புப்படம்)

சீனாவில் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டவர்களை பாதுகாப்பவராக அறியப்பட்ட நபர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இவர் அவரது கிராமத்தில் இருந்த சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைக்கு தலைவராக இருந்தவர்.

அந்த கிராமத்தில் இருந்த சுமார் 20% குடும்பங்கள் போதைப்பொருள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அங்கு போதைப் பொருள் தொழிலில் ஈடுபட்டிருந்த அனைவருக்கும் பாதுகாப்பு அளித்த சாய் டோங்ஜியா எனும் அவரை சீன ஊடகங்கள், 'அந்த கிராமத்தின் காட் ஃபாதர்' என் வர்ணித்தன.

சீனாவின் தெற்குப் பகுதியில் உள்ள குவாங்டாங் மாகாணத்தில் இருக்கும் போஷே எனும் அப்பகுதியில் இருந்துதான் சீனாவில் பயன்படுத்தப்படும் மூன்றில் ஒரு பங்கு 'கிரிஸ்டல் மெத்' போதைப்பொருள் விநியோகம் செய்யப்பட்டது.

மெத்தம்பெடமைன் எனும் எனும் வேதிப்பெயருடைய இந்த கிரிஸ்டல் மெத் போதைப்பொருள் சீனாவில் 'ஐஸ்' என்று அழைக்கப்படுகிறது.

படத்தின் காப்புரிமை Reuters

சாய் டோங்ஜியா டிசம்பர் 2013இல் நடந்த ஒரு சோதனையின்போது கைது செய்யப்பட்டார்.

ஒரு அதிகாலையில், 3,000க்கும் அதிகமான காவல் துறையினர் மேற்கொண்ட திடீர் சோதனையின்போது 180 பேரை கைது செய்த காவல் துறையினர், சுமார் 3,000 கிலோ கிரிஸ்டல் மெத் போதைப் பொருளைக் கைப்பற்றினர்.

கேட்டமைன் எனும் இன்னொரு போதைப் பொருளை சுமார் 500 கிலோ அளவுக்கு கைப்பற்றினர்.

கைது செய்யப்பட்ட அவரது சகாக்களை லஞ்சம் கொடுத்து விடுதலை செய்யவும் இவர் முயற்சித்துள்ளார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்