ராட்சத சுறாவுடன் ஜாலியாக நீச்சலடித்து, நேரலையும் செய்த ‘தில்’ குழுவினர் மற்றும் பிற செய்திகள்

ராட்சத வெள்ளை சுறா படத்தின் காப்புரிமை Reuters

ராட்சத வெள்ளை சுறா ஒன்றை மிகவும் நெருக்கமாக கண்டுள்ள முக்குளிப்போர் அணியொன்று, அதனை நேரலையில் அனைவருக்கும் தெரிவித்திருக்கின்றனர்.

ஹவாய் கடலில் முக்குளிப்போரில் சிலர் அந்த ராட்சத பெண் சுறாவை தொடக்கூடிய அளவுக்கு மிகவும் நெருக்கமாக சென்றுள்ளனர்.

20 அடி நீளமும், சுமார் இரண்டரை டன் எடையுமுடைய இந்த ராட்சத சுறா 20 ஆண்டுகளுக்கு முன்னால் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்ட டீப் புளூ போன்ற சுறா என்று நம்பப்படுகிறது.

திமிங்கலங்கள் புலி சுறாக்களை சாப்பிட்டு கொண்டிருந்ததை படம்பிடித்தபோது, இந்த ராட்சத பெண் சுறா வந்ததாக முக்குளிப்போரில் ஒருவரான ஓசன் ராம்சே தெரிவித்திருக்கிறார்.

அதிபர் டிரம்பை சந்திக்க செல்லும் வட கொரிய அதிகாரி

படத்தின் காப்புரிமை EPA

அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்புக்கும், வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னுக்கும் இடையில் நடைபெற சாத்தியமுள்ள இரண்டாவது உச்சி மாநாட்டுக்கு முன்னால், வட கொரியாவின் பேச்சுவார்த்தையாளர்களில் ஒருவர் அமெரிக்கா செல்கிறார்.

கிம் ஜாங்-உன்னிடம் இருந்து அதிபர் டிரம்புக்கு இன்னொரு கடிதத்தை கொண்டு சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கிலிருந்து கிம் யோங்-சோல் செல்வதாக தென் கொரிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க வெளியுறவு செயலர் மைக் பாம்பேயோவை கிம் யோங்-சோல் வெள்ளிக்கிழமை சந்திக்க இருக்கிறார்.

மகாராஷ்டிராவில் பள்ளிகள், கல்லூரிகள் அருகே நடன பார்கள் நடத்த இருந்த தடையை நீக்கிய உச்ச நீதிமன்றம்

படத்தின் காப்புரிமை Getty Images

மகாராஷ்டிராவில் நடன பார்கள் நடத்த உரிமம் பெற அம்மாநில அரசு விதித்த கடுமையான விதிகளை உச்ச நீதிமன்றம் தளர்த்தியுள்ளது.

மகாராஷ்டிரா விடுதிகள், ஹோட்டல்கள் மற்றும் பார் அரைகளில் ஆபாச நடன தடை மற்றும் (அங்கு) பணிபுரியும் பெண்கள் மரியாதை பாதுகாப்பு சட்டம், 2016-இன் சில சரத்துகளில் மாற்றம் செய்து, பார்கள் மாலை 6 மணியில் இருந்து இரவு 11:30 மணி வரை செயல்படலாம் என நீதிபதி ஏ.கே. சிக்ரி தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

இந்த செய்தியை விரிவாக வாசிக்க:மகாராஷ்டிராவில் பெண்கள் நடன விடுதிகளுக்கு இருந்த தடை நீக்கம்

உணவளிக்க வந்த பெண்ணை கடித்து குதறிய வளர்ப்பு முதலை

படத்தின் காப்புரிமை AFP

இந்தோனீசிய பெண் ஒருவரை முதலை ஒன்று கடித்துக் குதறிக் கொன்றுள்ளது.

44 வயதாகும் டீசி டுவோ தான் வேலை செய்யும் முத்து பண்ணையில், சட்டத்துக்கு புறம்பான வகையில் வளர்க்கப்படும் முதலைக்கு உணவு கொடுக்கச் சென்றபோது கடித்து குதறப்பட்டதாக கூறப்படுகிறது.

700 கிலோ எடை கொண்டிருக்கும் மெரி எனப் பெயரிடப்பட்டுள்ள முதலை அப்பெண்ணின் கையை கடித்துள்ளது மேலும் வயிற்றின் பெரும்பாலான பகுதியைக் கடித்துக் குதறியுள்ளது.

இந்த செய்தியை விரிவாக வாசிக்க:உணவளிக்க வந்த பெண்ணை கடித்து குதறிய வளர்ப்பு முதலை

பெற்றோரால் கைவிடப்பட்ட பெண் சிசுவுக்கு பாலூட்டி உயிர்காத்த காவலர்

பெற்றோரால் கைவிடப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை ஒன்றுக்கு பெங்களூருவில் உள்ள அரசு மருத்துவமனையில், பணிக்கு வந்த பெண் காவலர் ஒருவர் பாலூட்டி, அதன் உயிரைக் காப்பாற்றியுள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தியை விரிவாக வாசிக்க:பெற்றோரால் கைவிடப்பட்ட பெண் சிசுவுக்கு பாலூட்டி உயிர்காத்த காவலர்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :