சீனாவின் பொருளாதாரத் தேக்கம் இந்தியாவை எப்படி பாதிக்கும்?

சீனாவின் பொருளாதாரத் தேக்கம் இந்தியாவை எப்படி பாதிக்கும்? படத்தின் காப்புரிமை Getty Images

சீனாவில் பொருளாதார வளர்ச்சி குறைந்து வருகிறது என்பது தம்மளவில் செய்தி கிடையாது. வளர்ச்சியைப் பொருத்த வரையில் - அளவில் அல்லாமல் - தரத்தில் கவனம் செலுத்துவதாக பல ஆண்டுகளாக பெய்ஜிங் கூறிவருகிறது.

இருந்தாலும் நாம் கவலைப்பட்டாக வேண்டும்.

சீனாவில் மந்தமான வளர்ச்சி என்பது உலகின் மற்ற பகுதிகளுக்கும் வளர்ச்சியில் மந்த நிலையைக் கொண்டுவரும்.

உலக அளவிலான வளர்ச்சியில் மூன்றில் ஒரு பங்கு சீனாவைப் பொருத்து உள்ளது. வேலைகள், ஏற்றுமதிகள், பொருள்கள் உற்பத்தி செய்யும் நாடுகள் - எல்லாம் தம்மிடம் இருந்து பொருள்களை வாங்குவதற்கு சீனாவை நம்பியுள்ளன.

பொருளாதாரத்துக்கு அந்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சியின் சந்தேகத்துக்கு இடமில்லாத ஆதரவு இருந்தாலும், வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள மந்த நிலையால், பெருகிவரும் கடனை அடைப்பது அந்நாட்டுக்கு சிரமமாகியுள்ளது.

எண்களில் உழல்தல்

முக்கியமான ஒரு முன்னெச்சரிக்கை தகவல்: சீனாவின் வளர்ச்சி குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் சிறிது கசப்பாகத் தான் இருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டியது முக்கியம். பெய்ஜிங் சொல்வதைவிட, வளர்ச்சி அளவு மிகவும் குறைவாக இருப்பதாகக் கருதப்படுகிறது.

பொருளாதார நிலை எப்படி இருக்கிறது என்ற உண்மையை அறிவதற்கு, அரசு கூறும் தகவலில் இருந்து 100 புள்ளிகளைக் கழித்துக் கொள்வது நல்ல வழிகாட்டுதலாக இருக்கும் என்று எனக்குத் தெரிவித்தார்கள்.

சமீபத்திய தகவல்களின்படி சீனாவின் ஆண்டு வளர்ச்சி 5.6%-க்கும் குறைவாக இருக்காது என்றாலும், அது குறைவாகவே இருப்பதாகவே தெரிகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

ஆசியாவில் தாக்கம்

கடந்த தசாப்தத்தில், ஒருங்கிணைந்த சர்க்யூட்கள், கச்சா பெட்ரோலிய எண்ணெய், இரும்பு மற்றும் காப்பர் தாது ஆகியவற்றை வாங்குவதில், ஆசியாவின் பெரும் பகுதியில் மிகப் பெரிய வர்த்தகப் பங்காளராக சீனா மாறியுள்ளது.

எனவே சீனாவில் வளர்ச்சி குறைந்து இந்தப் பகுதியில் இருந்து இவற்றை அதிக அளவில் வாங்காமல் போனால், அதுவும் குறையும்.

உலக வங்கி அறிக்கையின்படி, ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் கடந்த ஆண்டு 6.3% ஆக இருந்த வளர்ச்சி அளவு 6% ஆகக் குறையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

மிகவும் சுயநலப் பார்வையில் பார்த்தால், சீனாவில் நிலவும் நிதி நெருக்கடி காரணமாக ஆசியாவில் வளர்ச்சி மோசமான நிலையில் இருக்கிறது என்றே தெரிகிறது.

அமெரிக்கா - சீனா வர்த்தகப் போட்டியும் உதவி செய்வதாகத் தெரியவில்லை. அது சீனா வளர்ச்சியை ஏற்படுத்தாமல் இருக்கலாம். அது இல்லாமல் சீனா இருக்க முடியும் என்றாலும், அது உணர்வு ரீதியாக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

தைவான், கொரியா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் வியட்நாம் - போன்ற சீனாவுக்குப் பொருள்களை விற்கும் ஆசியப் பொருளாதார நாடுகள் - அதிக அளவில் பாதிக்கப்படும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஏற்கெனவே புள்ளிவிவரங்கள் இதை உறுதி செய்கின்றன. சீனாவின் பொருளாதார வளர்ச்சி குறையும்போது, அங்குள்ள நுகர்வோரின் வாங்கும் சக்தியும் குறைகிறது என்பது உண்மை.

ஆசிய நிறுவனங்களில் நிலவும் நம்பிக்கை நிலையற்றதாக உள்ளது. சீனாவின் வளர்ச்சி குறைவு என்பது 2019ல் வளர்ச்சி பாதிப்பை ஏற்படுத்தும் இரண்டு காரணங்களில் ஒன்றாக இருக்கும் என்ற கவலை இருக்கிறது. அமெரிக்கா - சீனா வர்த்தகப் போர் இன்னொரு காரணமாக இருக்கிறது.

இருந்தாலும் இந்தியா தாக்குபிடிக்கிறது

இருந்தாலும் ஆசியாவில் சிறிது ஆறுதலுக்கான வாய்ப்புகளும் உள்ளன.

படத்தின் காப்புரிமை Getty Images

உலகில் வேகமாக வளரும் - இந்தியாவின் பொருளாதாரம் - ஆசியாவில் சில சிறிய நாடுகளைப் போல சீனாவுக்கு அதிகம் பொருள்களை விற்பதில்லை என்று ஆசிய வளர்ச்சி வங்கியின் இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

இந்தியா இந்த ஆண்டு 7.3% வருடாந்திர வளர்ச்சியை எட்டும் என்றும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் 7.5% வளர்ச்சியை எட்டும் என்றும் உலக வங்கி எதிர்பார்க்கிறது.

இந்தியாவில் நடுத்தர மக்களின் செலவழிக்கும் திறன் வளர்வது, நாட்டில் வளர்ச்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. நாட்டில் இந்த ஆண்டு தேர்தல் என்ற பெரிய அரசியல் நிகழ்வு வந்தாலும்கூட, நிலையான வளர்ச்சி தொடரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

பெய்ஜிங் ஆதரவு அளிக்கிறது

நிறைய பேரை வேலைக்கு அமர்த்தி, அதிக தொழிற்சாலைகளை அமைக்க உதவும் வகையில் கம்பெனிகளுக்கு வங்கிகள் கடன் தருவதை ஊக்குவிப்பதற்காக நிதித் துறையில் 80 பில்லியனுக்கும் அதிகமான டாலர்களை சீனா இறக்கியுள்ளது.

இது பயன்தருவதற்கான ஆதாரம் எதுவும் இப்போது இல்லை. ஆனால் இந்த ஆண்டு இறுதியில் பொருளாதார செயல்பாடுகள் வளர்ச்சி காணும் என்று பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

2019-ல் வரிக் குறைபுகள் எதிர்பார்க்கப் படுகின்றன. இது வளர்ச்சியை சுமார் அரை சதவீதம் அளவுக்கு அதிகரிக்கும் என்று ஜே.பி. மோர்கன் அமைப்பு கூறியுள்ளது.

ஜப்பானின் நோமுரா வங்கி இதை ஒப்புக்கொள்கிறது. இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் சீனா எழுந்து நிற்கும் என்று அது கூறியுள்ளது. அப்போது ஆசியா ``ஒளிரும்'' என்றும் குறிப்பிட்டுள்ளது. அப்போது ``உலகப் பொருளாதாரத்தின், விவாதத்துக்கு இடமில்லாத வகையில், என்ஜினாக சீனா கருதப்படும்'' என்றும் அந்த வங்கி தெரிவித்துள்ளது.

ஆனால் அமெரிக்கா - சீனா வர்த்தகப் போர் காரணமாக, உள்நோக்கம் இல்லாத, ஆனால் ஆக்கபூர்வமான தாக்கம் இருக்கிறது. வியட்நாம், மலேசியா, இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளின் தொழில் வளர்ந்திருப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விலைப் போட்டியில் இருந்து தப்புவதற்காக சீனாவுக்கான சப்ளை தொடரை இந்த நாடுகளின் நிறுவனங்கள் வேறு பகுதிகளுக்கு மாற்றிக் கொள்ளத் தொடங்கியுள்ளன.

படத்தின் காப்புரிமை Getty Images

இப்போதும்கூட, சீனாவின் குறைவான வளர்ச்சிக்கு, தொலைநோக்கில் உலக நாடுகள் பழகிக் கொள்ள வேண்டியிருக்கும் என்று கேபிடல் எகனாமிக்ஸ் -ஐ சேர்ந்த மார்க் வில்லியம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

``சீனா பணக்கார நாடாகும்போது, அதன் வளர்ச்சி குறைகிறது. வெற்றிகரமான பொருளாதார நாடுகள் அனைத்திலும் இது நடக்கும்'' என்கிறார் அவர். அடுத்த ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் வளர்ச்சி இன்னும் கணிசமாகக் குறையும்'' என்று அவர் கூறியுள்ளார்.

அதாவது, சீனாவின் வளர்ச்சி குறைகிறது என்று அடுத்த முறை தலைப்புச் செய்தியை நீங்கள் பார்த்தால், ஆச்சர்யப்பட வேண்டாம், தயாராக இருங்கள் என்பது இதன் அர்த்தமாக உள்ளது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :