பிறந்த குழந்தையை கழிவறையில் கொன்றதாக குற்றஞ்சாட்டிய பெண்ணின் நிலைமை தெரியுமா? - மற்றும் பிற செய்திகள்

9 வயதான டாஃப்னி மெக்பர்சனுக்கு படத்தின் காப்புரிமை AFP
Image caption மேல்முறையீட்டில், இந்த பெண் கூறிய கூற்றுக்கு சாதகமான அறிவியல் ஆய்வின் சாட்சியம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

பல்பொருள் அங்காடி ஒன்றில் பிறந்த குழந்தையை கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட பெண் 3 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

புதிதாக பிறந்த குழந்தையை கொன்றுவிட்டதாக குற்றம் உறுதி செய்யப்பட்ட 29 வயதான டாஃப்னி மெக்பர்சனுக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கருச்சிதைவு ஏற்பட்டதால் இவ்வாறு குழந்தை இறந்து விட்டது என்று அவர் சொன்னதை நீதிமன்றம் நம்பவில்லை.

குழந்தை பிறக்க வேண்டிய காலத்திற்கு முன்னதாகவே அதனை பெற்றெடுத்து, நீரில் மூழ்கடித்து கொன்று விட்டதாக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் கூறினர்.

ஆனால், இந்த வழக்கில் செய்யப்பட்ட மேல்முறையீட்டில், இந்த பெண் கூறிய கூற்றுக்கு சாதகமான அறிவியல் ஆய்வின் சாட்சியம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

2007ம் ஆண்டு கருக்கலைப்பு குற்றமல்ல என்ற சட்டம் மெக்ஸிகோ நகரில் இயற்றப்பட்டாலும், மெக்ஸிகோ நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் கருக்கலைப்பு இன்னும் குற்றமாகவே தொடர்கிறது.

பிரியங்கா அடுத்த இந்திரா காந்தியாக முடியுமா?

படத்தின் காப்புரிமை Getty Images

பிரியங்கா காந்தி அதிகாரபூர்வமாக இப்போது காங்கிரஸ் அரசியலில் இறங்கியுள்ளார். அவருக்கு ஒரு பகுதிக்கான பொதுச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

நரேந்திர மோடி மற்றும் பாஜக வலுவாக இருக்கும் பூர்வாஞ்சல் பகுதி - கிழக்கு உத்தரப்பிரதேசப் பகுதியின் பொறுப்பு அவருக்கு அளிக்கப் பட்டுள்ளது.

செய்தியை விரிவாக வாசிக்க: "அரசியல் தம்மை ஈர்க்காது" என்று கூறிய பிரியங்காவின் அரசியல் பிரவேசம்

வெனிசுவேலா சர்ச்சை: 'நிக்கோலஸ் மதுரோவுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்படலாம்'

படத்தின் காப்புரிமை Getty Images

தனது அதிபர் பதவியை விட்டுக்கொடுத்தால், வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவுக்கு பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பாக தான் கருத்தில் கொள்ள போவதாக அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரும், தேசிய சட்டமன்றத் தலைவருமான குவான் குவைடோ தெரிவித்துள்ளார்.

புதன்கிழமையன்று தன்னை வெனிசுவேலாவின் இடைக்கால அதிபராக அறிவித்துக்கொண்ட குவான் குவைடோ, நாட்டில் தற்போது நிலவிவரும் குழப்பம் மற்றும் நிலையில்லா தன்மையை முடிவுக்கு கொண்டுவர ராணுவம் உள்பட நாட்டின் அனைத்து துறைகள் மற்றும் அமைப்புகளையும் தான் அணுகவுள்ளதாக ஒரு நேர்காணலில் தெரிவித்தார்.

செய்தியை விரிவாக வாசிக்க: வெனிசுவேலா சர்ச்சை: 'நிக்கோலஸ் மதுரோவுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்படலாம்’

பங்காரு அடிகளார் உள்ளிட்ட 7 தமிழர்களுக்கு பத்மஸ்ரீ விருது

இந்தியாவில் தேசிய அளவில் வழங்கப்படும் விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது, பங்காரு அடிகளார் உள்ளிட்ட 7 பேருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அளவில் பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ தேசிய விருதுகள் பெறுவோரின் பெயர் பட்டியலை இந்திய அரச வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்டது.

பாரதரத்னா மட்டுமில்லாமல், பத்ம விபூஷன், பத்ம பூஷன் விருதுகள் தமிழ்நாட்டைச் சேர்ந்த யாருக்கும் வழங்கப்படவில்லை.

செய்தியை விரிவாக வாசிக்க: பங்காரு அடிகளார் உள்ளிட்ட 7 தமிழர்களுக்கு பத்மஸ்ரீ விருதுபிரணாப் முகர்ஜி உள்ளிட்ட மூவருக்கு பாரத ரத்னா

வாட்சாப் - இன்ஸ்டாகிராம் - ஃபேஸ்புக் மெசஞ்சர் இணைப்புக்கு திட்டம்

படத்தின் காப்புரிமை Reuters

வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மெசன்ஜர் ஆகிய அதன் சமூக வலையமைப்பு செய்தி சேவைகளை ஒருங்கிணைக்க ஃபேஸ்புக் திட்டமிட்டு வருவதாக நியூ யார்க் டைம்ஸ் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த 3 சேவைகளும் தனித்தனி செயலிகளாக செயல்படுவது தொடர்ந்தாலும், ஆழமான மட்டத்தில், செய்திகளோடு அவை தொடர்புடையதாக இருப்பதால் வேறுப்பட்ட சேவைகளுக்கு இடையில் செயல்படுவதாகவும் அமையும்.

இந்த மூன்று சேவைகளை மேலும் பயனுள்ள முறையில் வழங்கவும், இந்த செயலிகளில் மக்கள் செலவிடும் நேரத்தை அதிகரிக்கவும் சக்கர்பர்க் இந்த ஒருங்கிணைக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

செய்தியை விரிவாக வாசிக்க: வாட்சாப் - இன்ஸ்டாகிராம் - ஃபேஸ்புக் மெசஞ்சர் இணைப்புக்கு திட்டம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :