அணு உலை: ஃபுகுஷிமா நினைவு இருக்கிறதா, அதன் நிலை என்ன? மற்றும் பிற செய்திகள்

அணு உலை: ஃபுகுஷிமாவை மீட்க எத்தனை ஆண்டுகள் ஆகும்? படத்தின் காப்புரிமை Getty Images

ஜப்பானில் இரண்டாயிரத்து பதினோராம் ஆண்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் சேதம் அடைந்த ஃபுகுஷிமா அணு  உலையில், அணுக்கதிர் பொருட்களை கையாள, ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

படத்தின் காப்புரிமை Getty Images

அங்குள்ள பொருட்கள், அகற்றுவதற்கு உகந்தவையா என்பதை அறியும் முயற்சியில் இந்த வாய்ப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது.

அந்த தலத்தை சீர்படுத்த நாற்பது ஆண்டுகள் வரை ஆகலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

குடியுரிமை மசோதா

குடியுரிமை மசோதாவில் சர்ச்சைக்குரிய திருத்தங்களை மேற்கொள்ளும் முயற்சிகளில் இந்திய அரசு தோல்வியடைந்துள்ளது.

இஸ்லாமிய பெரும்பான்மை நாடுகளில் வசிக்கும் இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் இந்தியக் குடிமக்களாகும் வழிமுறைகளை அந்த சட்டத்திருத்தம் எளிதாக்கியிருந்தது.

வெளிநாடுகளில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் மத சிறுபான்மையினருக்கு இது உதவியாக இருக்கும் என இதன் ஆதரவாளர்கள் கூறினர்.

எனினும் புலம் பெயர்வோர் எண்ணிக்கை அதிகமாகும் என வடகிழக்கு இந்திய மாநிலங்களில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இந்த சட்டத்திருத்தம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்றும் கூறுகிறது.

சின்னத்தம்பி யானையை பிடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சின்னத்தம்பி யானையினை பிடித்து கட்டுப்பாட்டில் வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை தடாகம் பகுதிகளில் ஊருக்குள் வருவதாக புகார் அளிக்கப்பட்டு , டாப் ஸ்லிப் வனப்பகுதிகளில் கொண்டுவிடப்பட்ட யானை அங்கிருந்து நடந்து உடுமலைப்பேட்டை அருகில் உள்ள கண்ணாடிப் புத்தூர் கிராமத்தின் விவசாய விளை நிலங்களில் தங்கி இருக்கிறது.

வனத்துறை, சின்னத்தம்பி யானையை முகாம் யானையாக மாற்ற நடவடிக்கை எடுப்பதாக இருந்த பொழுது விலங்கு நல ஆர்வலர் அருண் பிரசன்னா என்பவர், சின்னத்தம்பி யானையினை கும்கியாக மாற்றக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

விரிவாக படிக்க:சின்னத்தம்பி யானையை பிடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு - கட்டுப்பாடுகள் என்ன?

கேமராவில் சிக்கிய கருஞ்சிறுத்தை

ஹாலிவுட் திரைப்படம் வெளியானபின் 'பிளாக் பேந்தர்' பற்றிய பேச்சு சமீபத்தில் அதிகமாகவே உள்ளது.

படத்தின் காப்புரிமை BURRARD-LUCAS PHOTOGRAPHY

ஆனால், பிளாக் பேந்தர் (கருஞ்சிறுத்தை) ஒன்றை படம் பிடிப்பது என்பது அரியதொரு நிகழ்வாக ஆப்பிரிக்க காட்டில் நிகழ்ந்துள்ளது.

இதனை வனவிலங்கு புகைப்படக் கலைஞர் வில் பர்ராட்-லூக்காஸ் சாதித்துள்ளார்.

விரிவாக படிக்க:நூறு ஆண்டுகளில் முதல் முறையாக கேமராவில் சிக்கிய கருஞ்சிறுத்தை

குஜராத்தில் ராஜபுத்திர யுவதியும், தலித் இளைஞரும் சாதியை காதலால் வென்ற கதை

படத்தின் காப்புரிமை RAVINDRA BHARTIYA

குஜராத்தின் செளராஷ்டிரா பகுதி கிராமம் ஒன்றில் வசிக்கும் ராஜபுத்திர குடும்பத்தை சேர்ந்த ஷில்பா, ஃபேஸ்புக் மூலமாக ரவீந்திராவுடன் நட்பு கொண்டார். நட்பு காதலாகக் கனிந்தபோது, அவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது பெரிய விஷயமாக தெரியவில்லை.

"எங்கள் குடும்பங்களில் பெண்களுக்கு அதிகக் கட்டுப்பாடுகள் உண்டு. வீட்டில் இருந்து கல்லூரியைத் தவிர வேறு எங்கும் செல்வதற்கு அனுமதி கிடையாது. வெளியுலகம் அதிகம் தெரியாது, எனக்கென்று பெரிய கற்பனைகள் எதுவும் இருந்ததில்லை, ஆனால் காதல் வருவதை கட்டுப்பாடுகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை," என்று சொல்கிறார் ஷில்பா.

ஆனால், தான் நினைப்பதை நிறைவேற்றுவது ஒன்றும் அவ்வளவு சுலபமானதல்ல என்பது விரைவிலேயே ஷில்பாவுக்குப் புரிந்துவிட்டது.

"நிதர்சனத்தை ஷில்பாவுக்குப் புரிய வைக்க வேண்டியிருந்தது. அது தேர்தல் சமயம். தலித் ஒருவர் கொல்லப்பட்டிருந்தார். ஷில்பா வசிக்கும் தெருவுக்குச் செல்வதற்கே எங்களுக்கு அனுமதி இல்லை. ஆனால் நானோ, ஷில்பாவைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினேன்," என்கிறார் ரவீந்த்ரா.

விரிவாக படிக்க:'வேறு சாதி நபரை திருமணம் செய்பவர்களை தீவிரவாதிகள் என்கிறார்கள்'

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :