அமெரிக்கா செளதிக்கு அணு ஆயுதம் வழங்க முயற்சியா? மற்றும் பிற செய்திகள்

டொனல்ட் டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

செளதியிடம் அணு ஆயுதம் கொடுக்க முயற்சிக்கிறதா அமெரிக்கா

அமெரிக்க காங்கிரஸின் ஆய்வறிக்கை ஒன்று செளதிக்கு அமெரிக்கா அணு ஆயுத தொழில்நுட்பத்தை கொடுக்க அவசரப்படுவதாக கூறுகிறது. செளதி பகுதியில் அணு உலைகளை அமைக்க வெள்ளை மாளிகை திட்டமிட்டு வருவது குறித்து ஜானநாயகவாதிகள் நிறைந்திருக்கும் அவை விசாரணையை முடுக்கி உள்ளது. மத்திய கிழக்கில் அணு ஆயுதங்களை பெருக்குவது அந்தப் பகுதியை முழுக்க சீர்குலைக்குமென எச்சரிக்கப்படுகிறது.

தமிழக அதிகாரிகளுக்கு 20 கோடி லஞ்சம்

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிராவில் வெவ்வேறு காலக்கட்டங்களில் கட்டப்பட்ட தங்களது நிறுவனத்தின் கட்டடங்களுக்கு பல்வேறு அனுமதிகளை பெறுவதற்காக அரசு அதிகாரிகளுக்கு கிட்டத்தட்ட 26 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக பிரபல மென்பொருள் நிறுவனமான காக்னிசன்ட், அமெரிக்க பங்கு மற்றும் பரிவர்த்தனை அமைப்பில் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புனே நகரங்களில் 2012 முதல் 2016 -ம் ஆண்டு வரையிலான காலத்தில் தங்களது நிறுவனத்தில் அதிகாரப்பூர்வமாக மேற்கொள்ளப்பட்ட இந்த லஞ்ச பணப்பரிமாற்றம் குறித்து அமெரிக்காவின் பங்கு மற்றும் பரிவர்த்தனை அமைப்பிடம் காக்னிசன்ட் நிறுவனம் தானே முன்வந்து தெரிவித்துள்ளது.

'மோடியா லேடியா'

பட மூலாதாரம், Getty Images

தமிழக அரசியல் களம் தகிக்க தொடங்கிவிட்டது. அதிமுகவுடன் பா.ம.க கரம் கோர்த்துவிட்டது. இந்த கூட்டணியில் பாரதிய ஜனதாவும், தே.மு.தி.கவும் இணைவது முடிவாகி விட்டது. கடந்த (2014) பாராளுமன்ற தேர்தலில் உரக்க ஒலித்த ஒரு குரலை அவ்வளவு சுலபமாக மறந்துவிட முடியாது. பாரதிய ஜனதாவுக்கு எதிரான குரல் அது. ஜெயலலிதாவின் குரல் அது. சென்னையில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில்,"மோடியா லேடியா" என்றார் ஜெயலலிதா.

தேர்தல் முடிவு 'லேடி'தான் என்றது.

'இம்ரான்கானுக்கு இந்தியா காட்டமான பதில்'

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் தாக்குதல் நடத்தியவர்கள் பாகிஸ்தானில் இருப்பதாக ஆதாரம் கொடுத்தால் நடவடிக்கை எடுப்போம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியிருப்பது நம்பிக்கையற்ற வார்த்தைகள் என்று இந்தியா கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் முதன்முறையாக பாகிஸ்தான் அரசு தொலைக்காட்சியில் இந்த சம்பவம் மற்றும் இந்தியாவின் குற்றச்சாட்டு குறித்து உரையாற்றினார்.

''காஷ்மீர் பிரச்சனைக்கு ராணுவ தீர்வு எதுவும் இல்லை. பேச்சுவார்த்தை மட்டுமே தீர்வாக அமையும்'' என்று இம்ரான்கான் தெரிவித்தார். ''தனது சொந்த முன்னேற்றத்தை பாதிக்கக்கூடிய நடவடிக்கையில் பாகிஸ்தான் ஏன் ஈடுபட போகிறது? என்றும் அவர் வினவினார். இதற்கு இந்தியா காட்டமான எதிர்வினையாற்றியுள்ளது.

'இந்தியா எங்களை தாக்கினால் பதிலடி தருவோம்'

பட மூலாதாரம், Getty Images

புல்வாமா தாக்குதல் நடந்தபிறகு முதல்முறையாக அது தொடர்பாக பாகிஸ்தான் அரசு தொலைக்காட்சியான பிடிவியில் அந்நாட்டின் பிரதமர் பிரதமர் இம்ரான் கான் கருத்து வெளியிட்டுள்ளார்.

கடந்த வியாழனன்று இந்திய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் (துணை காவல் படை) வீரர்கள் மீது நடந்த தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு இயங்கும் அமைப்புதான் ஜெய்ஷ்-இ-முகம்மது. இந்த அமைப்புதான் புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்றது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :