கிளிமஞ்சாரோ: பார்வையிழந்த ஏழு பேரின் மலைக்க வைக்கும் ‘மலையேற்ற’ சாதனை

பார்வையிழந்த ஏழு பேரின் மலைக்க வைக்கும் 'மலை பயண' கனவு

பட மூலாதாரம், PAUL LATHAM/SIGHTSAVERS

மலையேற்றத்தில் விருப்பம் கொண்ட அனைவருக்கும் உள்ள பொதுவான கனவு தான்சான்யாவில் உள்ள கிளிமஞ்சாரோ மலையை ஏற வேண்டுமென்பது. அதில் இந்த ஏழு பேர் மட்டும் விதிவிலக்கா என்ன?

அந்த எழுவரும் விழித்திறனை இழந்தவர்கள். ஆனால், அது அவர்கள் கனவுக்கு ஒரு தடையாக இருக்கவில்லை.

1969ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி அந்த எழுவரும் நான்கு நண்பர்களின் துணையுடன் கிளிமாஞ்சாரோ மலையை ஏறி அதன் உச்சியை அடைந்தார்கள் இவர்கள்.

பட மூலாதாரம், PAUL LATHAM/SIGHTSAVERS

வார்த்தைகளில் வேண்டுமானால் ஒருவரியில் சொல்வதற்கு சுலபமாக இருக்கலாம். ஆனால், இதனை நிகழ்த்திகாட்ட அவர்கள் அவ்வளவு சிரமப்பட்டிருக்கிறார்கள்.

அந்த மலையின் உயரம் 5750 மீட்டர் அதாவது 18,865 அடி.

மலையும் மலை சார்ந்த நிகழ்வும்

கடைசி 3000 அடியை ஏறமட்டும் அவர்களுக்கு ஒன்பது மணி நேரம் ஆகி இருக்கிறது.

பட மூலாதாரம், PAUL LATHAM/SIGHTSAVERS

உறைய வைக்கும் குளிர் மற்றும் பெருங்காற்றுதான் இதற்குதான் காரணம்.

மலை ஏறிய இவர்களை கெளரவிக்கும் விதமாக ஃபோக்கர் எஃப் 27 ரக விமானம் தாழப்பறந்து மரியாதை செலுத்தி இருக்கிறது.

ஏன் இந்த பயணம்?

இந்த மலையேற்ற பயணத்தை ஒருங்கிணைத்தது சைசேவெர்ஸ் அறக்கட்டளை.

பட மூலாதாரம், PAUL LATHAM/SIGHTSAVERS

பட மூலாதாரம், PAUL LATHAM/SIGHTSAVERS

ஆஃப்ரிக்காவில் உள்ள பார்வையற்றவர்கள் தொடர்பாக ஒரு புரிதலை ஏற்படுத்ததான் இந்த மலையேற்ற பயணத்தை அந்த அமைப்பு ஒருங்கிணைத்தது.

பிப்ரவரி 19ஆம் தேதி மலையேற தொடங்கி இருக்கிறார்கள். ஆனால், உடல்நலக் கோளாறு காரணமாக தொடாக்கத்திலேயே ஒருவர் இந்த பயணத்திலிருந்து விலகி இருக்கிறார்.

பட மூலாதாரம், PAUL LATHAM/SIGHTSAVERS

அவர்களின் பயணத்தைதான் புகைப்படமாக இங்கே வழங்கி உள்ளோம்.

பட மூலாதாரம், PAUL LATHAM/SIGHTSAVERS

இவர்களின் பயண செய்தியை அந்த சமயத்தில் ஆஃப்ரிக்க நாளிதழ்கள் முதல் பக்கத்தில் பிரசுரித்து கொண்டாடின.

பட மூலாதாரம், PAUL LATHAM/SIGHTSAVERS

அவர்கள் பயணத்தில் பயன்படுத்தப்பட்ட மூன்று பேரின் காலணிகள் உகாண்டா தேசிய அருங்காட்சியகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்தியா எங்களை தாக்கினால் பதிலடி தருவோம் - இம்ரான் கான்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :