பிரிட்டனுக்கு திரும்புவாரா ஐஎஸ் அமைப்பில் இணைந்த பெண்? - குடும்பத்தினரின் சட்டப் போராட்டம்

ஷமிமா பேகம்

பட மூலாதாரம், PA

படக்குறிப்பு,

ஷமிமா பேகம்

பிரிட்டனிலிருந்து சிரியாவுக்கு சென்று, ஐஎஸ் அமைப்பில் இணைந்த இளம்பெண்ணை மீண்டும் பிரிட்டனுக்குள் அனுமதிக்க முடியாது என்ற அந்நாட்டு அரசின் நிலைப்பாட்டை எதிர்த்து வழக்கு தொடுக்க போவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டனின் உள்துறை செயலாளர் சஜித் ஜாவீதுக்கு கடிதம் எழுதியுள்ள ஷாமிமா பேகம் என்ற அந்த இளம்பெண்ணின் குடும்பத்தினர், 'அவரை அவ்வளவு எளிதாக விட்டுவிட முடியாது' என்றும், அவரது குடியுரிமை குறித்து 'பிரிட்டனின் நீதிமன்றமே முடிவெடுக்க வேண்டும்' என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

ஷமிமா பேகத்திடமிருந்து சமீபத்தில் கிடைத்த தகவல்கள் தங்களை "மிகுந்த துன்பத்திற்குள்ளாக்கியுள்ளதாக" அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, ஷமிமா பேகத்திற்கு பிறந்துள்ள குழந்தையை பிரிட்டனுக்கு அழைத்து வருவதற்கு உதவ வேண்டுமென்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யார் இந்த ஷமிமா பேகம்?

லண்டன் நகரில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்த ஷமிமா பேகம், கடந்த 2015ஆம் ஆண்டு சிரியாவுக்கு சென்று ஐஎஸ் இயக்கத்தில் இணைந்தார். தற்சமயம் சிரியாவிலுள்ள அகதிகள் முகாமொன்றில் வசித்து வரும் அவருக்கு கடந்த வாரம் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.

படக்குறிப்பு,

ஷமிமா பேகம்

இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை பிபிசியுடனான நேர்காணலின்போது பேசிய ஷமிமா, தான் சிரியாவுக்கு சென்றதை நினைத்து வருந்தவில்லை என்றும், ஐஎஸ் இயக்கத்தினர் மீது வைக்கப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் தான் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.

2017ஆம் ஆண்டு மான்செஸ்டர் நகரில் 22 பேர் கொல்லப்பட்ட தாக்குதலை நடத்தியது ஐஎஸ் இயக்கத்தினர் என்பதை அறிந்து தான் "அதிர்ச்சிக்குள்ளானதாக" ஷமிமா பேகம் பிபிசியிடம் தெரிவித்தார்

ஷமிமா பேகத்தின் குடும்பத்தினரின் சார்பில் அவரது சகோதரி ரேணு பேகம் எழுதிய அந்த கடிதத்தில், "நாட்டிலுள்ள மற்றவர்களை போலவே நாங்களும், ஷமிமாவின் சமீபத்திய வெறுக்கத்தக்க கருத்துகளை அறிந்து அதிர்ச்சியுற்றோம் என்பதை தெளிவாக தெரிவித்து கொள்கிறோம்.

அவை பிரிட்டனை குடிமக்களை பிரபலிக்கும் கருத்துகள் அல்ல. எனவே, எனது சகோதரி கூறிய கருத்துகளை எங்களது குடும்பத்தினர் முற்றிலுமாக நிராகரிக்கிறோம்" என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு ஷமிமா பேகம் ஐஎஸ் இயக்கத்தில் சேருவதை தவிர்க்கும் அனைத்துவிதமான முயற்சிகளையும் தங்களது குடும்பத்தினர் மேற்கொண்டதாக ரேணு பேகம் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

"கடந்த நான்காண்டுகளாக ஐஎஸ் அமைப்பினரின் பிடியில் இருந்து வருவதால், அவரது அடிப்படை எண்ணவோட்டம் மாறுபாடைந்துள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறேன்" என்று அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்ய முடியுமா?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :