'நாய்' என்று நினைத்து ஓநாயை காப்பாற்றிய எஸ்தோனிய தொழிலாளர்கள்

காப்பாற்றப்பட்ட ஓநாய்

பட மூலாதாரம், EUPA

படக்குறிப்பு,

நாய் என்று கருதப்பட்ட இந்த ஓநாய்க்கு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இரக்க குணமுள்ள எஸ்தோனிய தொழிலாளர்கள் ஆற்றில் பனிக்கட்டியில் சிக்கி இருந்த 'நாய்' ஒன்றை விரைந்து சென்று காப்பாற்றினர்.

ஆனால், தங்களின் காரில் ஓநாய் ஒன்றை கொண்டு சென்று காப்பாற்ற இருப்பது அப்போது அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை.

வடக்கு ஐரோப்பாவில் உள்ள எஸ்தோனியா என்னும் நாட்டில், பார்னு ஆற்றிலுள்ள சிந்தி அணையில் வேலை செய்து கொண்டிருந்த இந்த தொழிலாளர்கள் உறை நிலையில் தண்ணீரில் சிக்கியிருந்த இந்த விலங்கை கண்டனர்.

பட மூலாதாரம், EUPA

படக்குறிப்பு,

ஏறக்குறைய பனிக்கட்டியாக உறைந்திருந்த தண்ணீரில் இருந்து இந்த ஓநாய் மீட்கப்பட்டது.

பனி உறைந்து கிடந்த பாதையை விலக்கி சென்ற அவர்கள், பனிக்கட்டிகள் ஒட்டிய நிலையில் கிடந்த நாய் போன்றதொரு விலங்கை காப்பாற்றி, அதற்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க கால்நடை சிகிச்சை மையத்திற்கு கொண்டு சென்றனர்.

அப்போதுதான் அவர்கள் ஓர் ஓநாயை தங்களின் காரில் போட்டு கொண்டு வந்திருந்ததாக அவர்களுக்கு சொல்லப்பட்டது.

கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டபோது, இந்த ஓநாய்க்கு குறைவான ரத்த அழுத்தம் இருந்ததாகவும், தாக்காமல் அமைதியாக இருந்துள்ளதற்கு இதுவே காரணமாக இருந்திருக்கலாம் என்றும் எஸ்தோனிய விலங்குகள் பாதுகாப்பு ஒன்றியம் தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், EUPA

படக்குறிப்பு,

அமைதியாக எனது கால்மேல் தலை வைத்து படுத்திருந்தது என்று இந்த ஓநாயை காரில் கொண்டு சென்றதை விளக்கியபோர் கார்ட்ஸ்சிப் விளக்கியுள்ளார்.

சரிவான பாதையில் அதனை கொண்டு வர வேண்டியிருந்தது. இது சற்று அதிக எடையுடன் இருந்தது. ஆனால், அமைதியாக எனது கால்மேல் தலை வைத்து படுத்திருந்தது. நான் கால் நீட்டி உட்கார விரும்பியபோது, இந்த விலங்கு சற்று தலையை உயர்த்தி அனுமதித்தது" என்று இந்த விலங்கை காப்பாற்றியவரில் ஒருவரான காட்ஸ்சிப், 'போஸ்டைம்ஸ்' என்ற எஸ்தோனிய செய்தித்தாளிடம் தெரிவித்துள்ளார்,

இந்த பெரியதொரு நாயின் உண்மையான இயல்பு பற்றி கால்நடை மருத்துவர்கள் சந்தேகம் அடைந்தனர். இதனால், அந்த பகுதியிலுள்ள ஓநாய்கள் பற்றி அதிகமாக தெரிந்து வைத்திருக்கும் உள்ளூர் வேட்டைகாரர் ஒருவர், இது சுமார் ஓராண்டு வயதான ஓநாய் என்பதை உறுதிசெய்துள்ளார்.

ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அஸ்கரை சீனா பாதுகாக்க நினைப்பது ஏன்?

பட மூலாதாரம், INDRANIL MUKHERJEE

படக்குறிப்பு,

ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அஸ்கர்

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி, இந்திய எல்லைக்குள் நுழைந்த, ஹர்கத்-உல்-அன்சார் அமைப்பின் முக்கிய உறுப்பினரான மௌலானா மசூத் அஸ்கர் 1994ஆம் ஆண்டு இந்திய நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரில் கைது செய்யப்பட்டார்.

சிறை தண்டனை விதிக்கப்பட்ட மசூத் அஸ்கர், 1999இல் கந்தகார் விமான கடத்தலில் தீவிரவாதிகளால் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக, இந்திய அரசால் விடுவிக்கப்பட்டார்.

அதன்பிறகு, மசூத் உருவாக்கிய ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை தீவிரவாத அமைப்பு என ஐ.நா அறிவித்துள்ளது.

2001இல் இந்திய நாடாளுமன்ற தாக்குதலில் மசூத் அஸ்கரின் பங்கிருப்பதாக இந்தியா குற்றம் சாட்டியது.

பாகிஸ்தான் மீதான இந்தியாவின் 'தண்ணீர்' சர்ஜிகல் ஸ்டிரைக் சாத்தியமா? கள நிலவரம் என்ன?

பட மூலாதாரம், ED JONES

உலக வங்கியால் மத்தியஸ்தம் செய்யப்பட்டு 1960களில் பாகிஸ்தான் உடனான இந்தியாவின் சிந்து நதி உடன்படிக்கையை முறிக்கும் திட்டங்கள் எதுவுமில்லை என இந்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

பாகிஸ்தானுக்கு செல்கின்ற நீரை நிறுத்திவிட இந்திய பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளதாக இந்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரியின் ட்விட்டர் பதிவு பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது.

"பாலியல் குற்றச்சாட்டுகளை முறையாக கையாண்டார் கார்தினல் ஓஸ்வால்ட்"

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கார்தினல் ஆஸ்வால்ட் கிரேசியஸ்

கார்தினல் ஒருவர் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களின் விவகாரங்களை முறையாகக் கையாளவில்லை என்று பிபிசியில் வெளியாகியிருந்த செய்தி தொடர்பாக, இந்திய கத்தோலிக்க திருச்சபை தமது தரப்பு வாதங்களை வெளியிட்டுள்ளது.

'தம்மிடம் வந்த பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளை சரியாக கையாளவில்லை என்று கார்தினல் ஓஸ்வால்ட் கிராசியஸ் வியாழன்று ஒப்புக்கொண்டிருந்தார்.

பிரிட்டனுக்கு திரும்புவாரா ஐஎஸ் அமைப்பில் இணைந்த பெண்? - குடும்பத்தினரின் சட்டப் போராட்டம்

பட மூலாதாரம், PA

படக்குறிப்பு,

ஷமிமா பேகம்

பிரிட்டனிலிருந்து சிரியாவுக்கு சென்று, ஐஎஸ் அமைப்பில் இணைந்த இளம்பெண்ணை மீண்டும் பிரிட்டனுக்குள் அனுமதிக்க முடியாது என்ற அந்நாட்டு அரசின் நிலைப்பாட்டை எதிர்த்து வழக்கு தொடுக்க போவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டனின் உள்துறை செயலாளர் சஜித் ஜாவீதுக்கு கடிதம் எழுதியுள்ள ஷாமிமா பேகம் என்ற அந்த இளம்பெண்ணின் குடும்பத்தினர், 'அவரை அவ்வளவு எளிதாக விட்டுவிட முடியாது' என்றும், அவரது குடியுரிமை குறித்து 'பிரிட்டனின் நீதிமன்றமே முடிவெடுக்க வேண்டும்' என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

உடல் பருமனால் கைவிட்ட கணவன் - ஜெயித்து காட்டிய ரூபி பியூட்டி

சங்க காலத்தில் பெண்களின் தலைமயிர் தொடங்கி கால்கள் வரை ஒரு பெண் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற பாடல்களை கவிஞர்கள் தீட்டி வைத்திருந்தார்கள். ஆனால், பெண்களுக்கான நளினம், உடல் என அனைத்தையும் உடைத்தெறிந்திருக்கிறார் சென்னையை சேர்ந்த பெண் பாடி பில்டர் ரூபி பியூட்டி.

கடந்தாண்டு, அசாமில் நடைபெற்ற தேசியளவிலான பாடி பில்டிங் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார் ரூபி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :