வட கொரியாவில் வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் - விவரிக்கும் புகைப்படங்கள்

சோங்னாம் மழலைப்பள்ளியில் செல்லோ இசைக்கருவியை வாசிக்கும் சிறுமி படத்தின் காப்புரிமை TARIQ ZAIDI
Image caption சோங்னாம் மழலைப்பள்ளியில் செல்லோ இசைக்கருவியை வாசிக்கும் சிறுமி

வட கொரியாவில் வாழ்வது எப்படியாக இருக்கும் என்று தெரியுமா? கடந்தாண்டு அந்நாட்டிற்கு பயணம் செய்த தாரிக் ஸைதி, அங்கு வாழும் குடும்பங்களை படம்பிடிக்க முயற்சி செய்தார்.

அவர் கூறுகையில், வட கொரியாவில் உள்ள ஒன்பது மாகாணங்களில் எட்டு மாகாணங்களுக்கு பயணம் மேற்கொண்டேன். போகும் வழியில் உள்ள பள்ளிகள், நர்சரிகள் மற்றும் இசை மன்றங்களுக்கு சென்றேன். வெளிநாடுகளில் இருந்து எளிமையாக அனைவராலும் வட கொரியாவுக்கு செல்ல முடியாது. அப்படியே சென்றாலும் புகைப்படங்கள் எடுக்க தடைகளும் பல கட்டுப்பாடுகளும் உள்ளன.

நான் எடுத்த படங்கள் எல்லாம், வட கொரிய பாதுகாவலர்களால் எடுக்க அனுமதிக்கப்பட்டவை. பலருக்கு தெரியாத தனித்துள்ள நாட்டில் வளர்வது எப்படி இருக்கும் என்பதை இப்புகைப்படங்கள் உணர்த்தும்.

முதலில் சீன எல்லையில் உள்ள டன்டொங்கில் என் பயணம் தொடங்கியது. அங்கிருந்து பல மாகாணங்களுக்கு பயணம் செய்தேன்.

படத்தின் காப்புரிமை TARIQ ZAIDI
Image caption ஹொர்யொங் பள்ளி மாணவர்களின் மாளிகையில் பாராம்பரிய கொரிய மேளம் வாசிக்கும் சிறுமி

இந்தப் புகைப்படங்கள், அங்கு நடப்பவற்றை எல்லாம் விரிவாகக் கூறும் என்று சொல்ல முடியாது என்றால்கூட, சில கலாசார மற்றும் சமூக சூழல்கள், மேலும் நாங்கள் பார்த்த குழந்தைகளின் அபிலாஷைகளையும் இவை உணர்த்தும்.

ஒவ்வொரு நகரத்துக்கு நாங்கள் செல்லும் போதும், அங்கிருக்கும் பள்ளிக்கு சென்று பார்க்க முயன்றோம்.

வடகொரியாவில் பலதரப்பட்ட பள்ளிகள் இருக்கின்றன. மேலும், அங்கு பல அருங்காட்சியங்களும் இருக்கின்றன.

பல பள்ளி மாணவர்கள், அவர்களுக்கு எவ்வளவு நன்றாக ஆங்கிலம் பேச வரும் என்பதை காண்பிக்க விரும்புகிறார்கள். சில பள்ளிகளில், சுற்றுலா வாசிகள், அங்கிருக்கும் நல்ல ஆங்கிலம் தெரிந்த மாணவர்களுடன் அவர்களுக்கு தேவையானது குறித்து பேச அனுமதிக்கப்படுகிறார்கள்.

பல விவாதங்களும் பொதுஅறிவு சம்பந்தப்பட்டதாக இருந்தது.

படத்தின் காப்புரிமை TARIQ ZAIDI
Image caption பியாங்யாங் மைதானத்தில் தங்களது குழந்தைகளுடன் விளையாடும் பெற்றோர்கள்
படத்தின் காப்புரிமை TARIQ ZAIDI
Image caption வடக்கு ஹம்ங்யொங்க் மாகாணம் சோங்ஜினில் உள்ள நூலகம் ஒன்றில் படிக்கும் சிறுமி
படத்தின் காப்புரிமை TARIQ ZAIDI
Image caption பியாங்யாங்கில் தன் குழந்தையுடன் நடந்து செல்லும் பெண்

சில பள்ளிகளில், திறமையான மாணவர்களுக்காக, அற்புதமான கலை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. அவை பள்ளி மாணவர்களின் மாளிகைகள் என்று அழைக்கப்படுவதாக எங்களுக்கு கூறப்பட்டது. இவற்றைத்தவிர வேறு விதமான பள்ளிகளும் வட கொரியாவில் இருக்கும். ஆனால், அங்கெல்லாம் எங்களை அவர்கள் கூட்டிச் செல்லவில்லை.

விளையாட்டு, இசை, கலாசாரம் ஆகியவற்றுக்கு அவர்கள் தரும் முக்கியத்துவத்தை நம்மால் பார்க்க முடிகிறது. ஏராளமான மாணவர்கள் சுற்றுலாப்பயணிகளைப் பெற ஆர்வமாக இருந்தனர். மேலும் கால்பந்து, கூடைப்பந்து போன்ற தீவிரமான விளையாட்டுகளிலும் ஆர்வம் காட்டுவது தெரிகிறது.

நாம் எந்த ஆட்சியில் இருந்தாலும், குடும்பங்கள் இயங்குவது ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. மற்ற நாட்டு குழந்தைகளை போலவே வட கொரியா பள்ளி மாணவர்களும், தனிப்பட்ட இலக்குகள் மற்றும் குறிக்கோள்களை வைத்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை TARIQ ZAIDI
Image caption பியாங்யாங் மெட்ரோவில் பயணிக்கும் குடும்பங்கள். ரயிலில் கிம் இரண்டாம் சங் மற்றும் கிம் ஜாங்-இல்லின் புகைப்படங்களை பார்க்க முடிகிறது
படத்தின் காப்புரிமை TARIQ ZAIDI
Image caption கெசாங்ககில் தனது சைக்கிள் கூடையில் தன் குழந்தையை வைத்திருக்கும் பெண்
படத்தின் காப்புரிமை TARIQ ZAIDI
Image caption பாரம்பரிய உடையை அணிந்திருக்கும் ஹொர்யாங்கில் உள்ள சிறுமி
படத்தின் காப்புரிமை TARIQ ZAIDI
Image caption பியாங்யாங்கில் நடைபெற்ற விளையாட்டுகள்
படத்தின் காப்புரிமை TARIQ ZAIDI
Image caption பியாங்யாங்கில் உள்ள அஞ்சல் தலை அருங்காட்சியகத்தை பார்வையிடும் மக்கள்
படத்தின் காப்புரிமை TARIQ ZAIDI
Image caption பியாங்யாங்கில் உள்ள பள்ளி ஒன்றில் நடன பயிற்சி எடுக்கும் சிறுமிகள்
படத்தின் காப்புரிமை TARIQ ZAIDI
Image caption ஹொர்யாங்கில் உள்ள பள்ளி மைதானத்தில் ஜிம்னாஸ்டிக் கம்பிகளில் பயிற்சி பெறும் சிறுவர்கள்
படத்தின் காப்புரிமை TARIQ ZAIDI
Image caption சொங்ஜினில் உள்ள சோங்னம் மழலையர் பள்ளியில் பாராம்பரிய உடை அணிந்து பியானோ இசைக்கும் சிறுமி
படத்தின் காப்புரிமை TARIQ ZAIDI
படத்தின் காப்புரிமை TARIQ ZAIDI
Image caption சோன்ஜினில் உள்ள பள்ளி ஒன்றில் ஆங்கிலப் பாடம் நடத்தும் பள்ளி ஆசிரியை
படத்தின் காப்புரிமை TARIQ ZAIDI

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :