டிரம்ப்-கிம் இரண்டாம் சந்திப்பு: ஹனோயில் இரவு விருந்துடன் தொடங்கும்

டிரம்ப் மற்றும் கிம் ஜாங்-உன் படத்தின் காப்புரிமை Getty Images

புதன்கிழமை இரவு விருந்தை தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பும், வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னும் உச்சி மாநாட்டை நடத்தவுள்ளனர்.

வியட்நாம் தலைநகர் ஹனோயில் இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை ஒழிப்பது பற்றி விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிம் ஜாங்-உன்னுடன் கூட்டம் நடத்துவதற்கு முன், வியட்நாம் பிரதமர் மற்றும் பிற அரசியல்வாதிகளை டிரம்ப் சந்திப்பார்.

ஹனோய் ஐந்து நட்சத்திர மெட்ரோபோல் ஹோட்டலில் இரு நாட்டு தலைவர்களுக்கும் இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டை நடத்தும் வியட்நாம் பூமியில் வளரும் சில இடங்களைபோல வியட்நாம் வளர்வதாக டிரம்ப் புகழ்ந்து புதன்கிழமை காலையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதற்கான சாத்தியக்கூறு சிறப்பாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

டிரம்ப்-கிம் திட்டம் என்ன?

படத்தின் காப்புரிமை Getty Images

வியட்நாம் நேரப்படி மாலை 6.40 மணிக்கு முதலாவதாக நேருக்கு நேர் 20 நிமிடங்கள் இரு நாட்டு தலைவர்களும் சந்திக்கின்றனர். பின்னர் அந்த நாடுகளின் கூட்டாளிகளால் விருந்து வழங்கப்படும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமை இரு நாட்டு தலைவர்களும் தொடர் கூட்டங்களை நடத்துவர். ஆனால் அவர்களின் பிற நிகழ்ச்சிநிரல்கள் பற்றி இன்னும் தெரியவில்லை.

முக்கிய நிகழ்வுகள், ஒப்பந்தம் கையெழுத்து அல்லது முக்கிய செய்தியாளர் சந்திப்பு வியாழக்கிழமை நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

கடந்த ஜூன் மாதத்தில்தான் முதல் முறையாக பதவியில் இருக்கும் ஒரு அமெரிக்க அதிபரும், வட கொரிய அதிபரும் சிங்கப்பூரில் சந்தித்தனர்.

இருப்பினும், சிங்கப்பூரில் நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உச்சி மாநாட்டுக்கு பின்னர், அணு ஆயுத ஒழிப்பில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.

சிங்கப்பூர் உச்சி மாநாட்டில் பெரிதாக ஒன்றும் ஒப்புக் கொள்ளப்படவில்லை. எனவே, அதில் பெரிய வெற்றி என்று சொல்லிக்கொள்ள எதுவும் இல்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :