டிரம்ப் - கிம் சந்திப்பு: ''கிம்முடன் இரவு விருந்து சந்திப்பு அருமையாக இருந்தது'' - டொனால்டு டிரம்ப் மற்றும் பிற செய்திகள்

டொனால்டு டிரம்ப் படத்தின் காப்புரிமை SAUL LOEB

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் இடையிலான இரண்டாவது உச்சிமாநாடு வியட்நாமில் நடைபெற்று வருகிறது. இரண்டு நாள் நடக்கும் உச்சிமாநாட்டில் நேற்றைய தினம் கிம் ஜாங் உன் மற்றும் டிரம்ப் இரவு விருந்தின்போது சந்தித்து பேசினார்கள்.

இரண்டாவது தினமான இன்று இரு நாட்டு தலைவர்கள் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மேலும் இரு தலைவர்களும் பத்திரிகையாளர்களை சந்திப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத ஒழிப்பில் ஈடுபடுவதற்கான திட்டங்கள் குறித்து இரு தரப்பினரும் விரிவாக கலந்துரையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதன்கிழமை நடந்த சந்திப்பில் செய்தியாளர்கள் சுருக்கமான கேள்விகள் கேட்கவே அனுமதிக்கப்பட்டனர். மேலும் இரு நாட்டு தலைவர்களும் தனியாக சந்தித்து பேசினார்கள்.

நேற்று இரவு விருந்தில் இரு நாட்டு தலைவர்களும் கலந்து கொண்டனர். அப்போது அமெரிக்க பாதுகாப்பு செயலர் மைக் பாம்பியோ மற்றும் கிம்மின் மூத்த ஆலோசகர் கிம் யாங் - சோல் ஆகியோர் உடனிருந்தனர்.

கிம்முடனான சந்திப்புக்கு பிறகு டிரம்ப் தனது ட்வீட்டில் ''வியட்நாமில் வடகொரியாவின் கிம் ஜாங் உன் உடனுனான இரவு விருந்தும் சந்திப்பும் அருமையாக இருந்தன. பேச்சுவார்த்தை நல்லபடியாக நடைபெற்றது'' என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, புதன்கிழமை சந்திப்பின்போது, கொரிய போர் முறைப்படி அதிகாரபூர்வமாக முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்படுமா என செய்தியாளர்கள் கேட்டபோது, '' பார்க்கலாம்...'' என்றார் டிரம்ப்.

Image caption இந்திய விமானப்படை முன்னாள் தளபதி ஏ. ஒய். டிப்னிஸ்

அபிநந்தன் விடுவிக்கப்படும் வாய்ப்பு எப்படி?

அபிநந்தன் கைது செய்யப்பட்டது போன்ற சம்பவம் கார்கில் போரின் போதும் நடந்துள்ளதாகவும், அவர் விடுவிக்கப்பட்டதுபோல அபிநந்தனும் விடுவிக்கப்படுவார் என்று இந்திய விமானப்படை முன்னாள் தளபதி ஏ. ஒய். டிப்னிஸ் தெரிவித்தார்.

பிபிசியிடம் பேசிய அவர், "கார்கில் போரின்போதும் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. ஆனால் அபோதும்கூட விமானி நச்சிகேட்டா, விமானத்திலிருந்து வெளியேறியதாக கூறப்பட்டது. எதிரியின் நடவடிக்கையால் அவர் வெளியேறவில்லை. அவரது விமான என்ஜினில் ஏற்பட்ட கோளாறால் அவர் வெளியேற நேர்ந்தது. பாகிஸ்தான்வசம் பிடிப்பட்ட அவர், சிறிது காலம் அங்கு வைக்கப்பட்டப் பிறகு திரும்ப ஒப்படைக்கப்பட்டார். எனவே அதே முன்மாதிரி அடிப்படையில் தற்போது பாகிஸ்தான் பிடித்துவைத்துள்ள இந்திய விமானியும், சம்பவம் உண்மையாக இருக்குமானால், விடுவிக்கப்படுவார் என்றே நம்புகிறேன்," என்றார்.

மேலும் படிக்க - அபிநந்தனுக்கு முன்பே கார்கில் போரின்போது பாகிஸ்தானிடம் சிக்கிய இந்திய விமானி

படத்தின் காப்புரிமை Photo: Express
Image caption பாகிஸ்தான் ஊடகங்களில் பகிரப்படும் புகைப்படங்கள்

வைரலாக பரவும் வீழ்த்தப்பட்ட இந்திய விமானத்தின் போலி புகைப்படங்கள்

இந்திய விமானப்படை தாக்குதலுக்கு எதிர்வினையாக புதன்கிழமை இரண்டு இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறுகிறது.

ஒரு விமானம் பாகிஸ்தான் பகுதியில் வீழ்ந்ததாகவும், ஒரு விமானி தங்களது கட்டுப்பாட்டில் உள்ளார் என்றும் பாகிஸ்தான் ஆயுதப் படைகளின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிஃப் கஃபூர் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் ராணுவம் இந்த தாக்குதலை உறுதிப்படுத்தியதை அடுத்து #Pakistaniarmyzindabad, #Pakistanairforceourpride and #Pakistanstrikesback உள்ளிட்ட ஹாஷ்டாகுகள் பாகிஸ்தானில் டிரெண்ட் ஆகின.

விமான தாக்குதல் நடந்ததாக கூறப்படும் செய்தியை பாகிஸ்தான் தொலைக்காட்சி ஊடகங்கள், இணையதளங்கள் மிக விரிவாக வெளியிட்டன. நொடிக்கு நொடி அது குறித்த தகவல்களையும் புதுப்பித்துக் கொண்டே இருந்தன.

இந்திய விமானங்கள் அழிக்கப்பட்டதாக பகிரப்படம் பல புகைப்படங்கள், காணொளிகளும் பகிரப்பட்டு வருகின்றன.

இது குறித்து பிபிசி மேற்கொண்ட ஆய்வில் அந்த புகைப்படங்களில் பெரும்பாலானவை போலியானவை என்று தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க - பாகிஸ்தானில் வைரலாகப் பரவுகிறது வீழ்த்தப்பட்ட இந்திய விமானத்தின் போலி புகைப்படங்கள்

படத்தின் காப்புரிமை Pool

நிலைமை கைமீறினால் நானோ மோதியோ கூட கட்டுப்படுத்த முடியாது - இம்ரான் கான்

தப்புக் கணக்குப் போடுவதால் ஏற்படும் ஆபத்து அதிகம். குறிப்பாக, இந்தியா, பாகிஸ்தான் போன்ற ஆயுதங்கள் உள்ள நாடுகளில், பதற்ற நிலை அதிகரித்தால், நிலைமை கையை மீறிப் போகும். நானோ, மோதியோ கூட அந்த நிலையில் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாது. எனவே, உட்கார்ந்து பேசுவதன் மூலம் இந்தியாவும் பாகிஸ்தானும் பிரச்சனையைத் தீர்த்துக்கொள்ளவேண்டும் என்று தெரிவித்தார் இம்ரான்.

எனவே, இனிமேலாவது கொஞ்சம் நடைமுறை அறிவுடன், ஞானத்துடன் நடந்துகொள்வோம். நம்மிடம் இந்திய விமானிகள் உள்ளனர். ஆனால், இங்கிருந்து நாம் எங்கே செல்லப்போகிறோம் என்பதுதான் முக்கியமானது என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க - நிலைமை கைமீறினால் நானோ மோதியோ கூட கட்டுப்படுத்த முடியாது: இம்ரான் கான்

இணையத்தில் டிரெண்டாகும் #SayNoToWar ஹாஷ்டாக்

டிவிட்டரில் போர் வேண்டாம் #SayNoToWar என்ற ஹாஷ்டாக் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளிலும் டிரெண்டாகி வருகிறது.

பாகிஸ்தானில் இந்த ஹாஷ்டாகில் கருத்து பகிர்ந்திருக்கும் ஜான்ஜைப், "போர் ஒரு வாய்ப்பு அல்ல. நாம் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். கைது செய்யப்பட்ட விமானி கண்ணியம் மற்றும் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும். மனிதநேயத்தை மறக்க வேண்டாம். அவர் யாரோ ஒருவரின் கணவர், ஒருவரின் தந்தை" என கருத்து பகிர்ந்திருக்கிறார்.

போர் அனைத்தையும் அழித்துவிடும். அதனை அனைத்து தரப்பும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற தொனியில் கருத்து பகிர்ந்திருக்கிறார் உமர் சையத்.

மேலும் படிக்க - ‘போர் வேண்டாம்’: இணையத்தில் டிரெண்டாகும் #SayNoToWar ஹாஷ்டாக்

தொடர்புடைய செய்திகள்:

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: