டிரம்பின் வர்த்தக பாதுகாப்புவாதம்: 1930 இந்திய பொருட்களுக்கு இறக்குமதி வரியா?

"இந்தியாவுக்கான 42 ஆண்டுகால வர்த்தக சலுகை ரத்து" - டிரம்ப் அறிவிப்பு படத்தின் காப்புரிமை Mark Wilson

இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா பாதுகாப்புவாத பிரச்சனையை எழுப்பியுள்ளதன் மூலம், தேர்தலுக்கு முன்னால் ஒரு முடிவுக்கு எடுக்கக்கூடிய சோதனை நரேந்திர மோதி அரசுக்கு வந்துள்ளது.

இப்போது முன்னுரிமைகளின் பொது அமைப்புகளுக்கான முதன்மை வர்த்தக கொள்கையில் இருந்து இந்தியாவை நீக்கிவிட அமெரிக்கா முயலுகிறது.

இந்த சலுகையின் கீழ் இந்தியாவின் 1930 பொருட்களுக்கு இறக்குமதி வரி செலுத்துவதில் இருந்து அமெரிக்கா விலக்கு அளித்துள்ளது.

இந்த திட்டம் வளர்முக நாடுகள் தங்களின் பொருளாதாரத்தை வளர்த்து கொள்ளுவதற்காக உருவாக்கப்பட்டதாகும்.

1970-களில் இருந்து இந்த திட்டத்தால் பயனடையும் பெரிய நாடு இந்தியாவாகும்.

என்ன பிரச்சனை?

இப்போது இந்த பட்டியலில் இருந்து இந்தியாவின் பெயர் நீக்கப்படவுள்ளது. அவ்வாறு செய்யப்பட்டால், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 5.6 பில்லியன் மதிப்புடைய இந்திய இறக்குமதி பெருட்களுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்படும் சாத்தியக்கூறு காணப்படுகிறது.

எனவே, இந்தியாவின் நிறுவன, கடல், கைவினைப் பொருட்கள் மற்றும் ரசாயன பொருட்களுக்கு வரி கட்ட வேண்டிவரும்.

இதன் காரணமாக இந்த பொருட்களின் விலை பெரிதும் உயர்ந்து பாதிப்பு ஏற்படும். மேலும், ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளும் சிக்கலாகும். முன்னுரிமைகளின் பொது அமைப்புகள் பட்டியலில் வரி விலக்கு பெறுவதில் 1930 மேலான இந்திய பொருட்கள் உள்ளன.

இந்த பட்டியலில் இருந்து இந்திய பொருட்கள் அகற்றப்படுவது இந்தியாவின் பல தயாரிப்பு துறைகள் பிற நாட்டோடு போட்டிபோடுவதிலும் பாதிப்புகள் ஏற்படுத்துகிற அதேவேளை வாடிக்கையாளர்களையும் பாதிக்கும்.

இந்தியாவின் ஏற்றுமதியில் முக்கிய இடம் வகிக்கும் ரசாயன பொருட்கள் மீதான வரி, ரசாயன பொருட்களின் விலையை ஐந்து சதவீதம் அதிகரிக்க செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னுரிமைகளின் பொது அமைப்புகள் பட்டியலால் பயன்பெறுகின்ற நாடுகளில் இருந்து இந்தியா நீக்கப்படுவது, அமெரிக்காவின் இறக்குமதி வகைப்படுத்தலை பாதிக்கும். பிற வளர்முக நாடுகளை முக்கிய விநியோக நாடுகளாக கொள்வதைவிட சீனாவை விநியோக நாடாக மாற்ற அமெரிக்கா முனைப்போடு உள்ளது என்று இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பின் தலைவர் கணேஷ் குமார் குப்தா கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் விரும்புவது என்ன?

அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா, அதிக வரி விதித்துள்ளதாக அந்நாட்டின் அதிபர் டொனால்டு டிரம்ப் அடிக்கடி தெரிவித்து வருகிறார்.

"வரி விதிப்பதில் அரசர்" என்று இந்தியாவை கடந்த ஆண்டு குறிப்பிட்ட அதிபர் டிரம்ப், அமெரிக்க பொருட்களுக்கு சுதந்திரமான சந்தை வழங்க கேட்டுக்கொண்டார்.

அமெரிக்க நிறுவனங்களை பாதிக்கின்ற மருத்துவ கருவிகளுக்கு இருக்கும் விலைகளில் இடைவெளியை நீக்க அமெரிக்கா கேட்டுக்கொண்டது.

மேலும், தகவல் தொழில்நுட்ப பொருட்களின் வரி விதிப்பை இந்தியா குறைக்க வேண்டுமென அது விரும்புவதோடு, அமெரிக்காவின் விவசாய பொருட்கள் அதிகமாக இந்திய சந்தையில் கிடைக்க வழிசெய்ய கேட்கிறது.

விலங்குகளின் இரத்த உணவை உண்ணாத விலங்குகளிடம் இருந்து தயாரிக்கப்பட்டது என்கிற சான்றிதழ் பால் பொருட்களுக்கு வேண்டுமென இந்தியா வலியுறுத்துவது இன்னொரு சிக்கலாக உள்ளது.

இந்தியா என்ன செய்ய முடியும்?

படத்தின் காப்புரிமை Getty Images

இது பற்றி பிபிசியிடம் கருத்து தெரிவித்த இந்தியாவின் வணிகத்துறை செயலாளர் அனுப் வாதவான், "இதுவரை இரு நாடுகளும் ஒரு நடுத்தர தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வந்தது" என்றார்.

அமெரிக்க பொருட்களின் மீதான இந்திய வரி விதிப்புகள் உலக வர்த்தக நிறுவனத்திற்கு ஒத்ததாகவே அமைந்துள்ளன என்று அவர் இந்தியாவின் வரிவிதிப்பை நியாயப்படுத்தியுள்ளார்.

"நாங்கள் அமெரிக்காவோடு பேச்சுவார்த்தையில் உள்ளோம். நிபந்தனைகளோடு கூடிய இந்திய சந்தை அணுகலை அமெரிக்க விவசாய பொருட்களுக்கும், பால் பொருட்களுக்கும் வழங்கவும், தகவல் தொழில்நுட்ப பொருட்களின் வரியை குறைக்கவும், மருத்துவ கருவிகளின் விலையில் இருக்கும் இடைவெளியை நியாயமாக அமைக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், அமெரிக்காவோடு நடைபெறும் பேச்சுவார்த்தைகள் வித்தியாசமான முடிவுகளையே தந்துள்ளன. அமெரிக்காவோடு நமக்குள்ள வணிக உறவுகள் நெருக்கமாகவே உள்ளன. வணிகப் பேச்சுவார்த்தைகளில் எந்த சீர்குலைவும் இல்லை" என்று அனுப் வாதவான் தெரிவித்தார்.

முன்னுரிமைகளின் பொது அமைப்புகளின் சலுகை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டால், இந்தியாவில் மிக குறைவாக 190 மில்லியன் டாலர் பாதிப்பையே ஏற்படுத்தலாம் என்று அவர் கூறினார்.

தகவல் தொடர்பு வணிக உறவுகளை எவ்வாறு பாதிக்கின்றன?

படத்தின் காப்புரிமை Reuters

இந்திய அமெரிக்க ராஜதந்திர உறவில் வணிகம் மையமாக உள்ளது. அமெரிக்காவின் வணிக பிரதிநிதித்துவத்தால் வழங்கப்பட்டுள்ள தரவுகளின்படி இந்த இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் சுமார் 126.2 பில்லியன் டாலராக உள்ளது.

ஆனால், சமீபத்தில் பாதுகாப்புவாத குரல்கள் எழுந்து வருகின்றன.

கடந்த ஆண்டு, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் எஃகு மற்றும் அலுமினிய பொருட்களுக்கு வரியை அமெரிக்கா குறைத்தது.

அதனை தொடர்ந்து, பாதம் உள்பட 29 பொருட்களுக்கு இந்திய அரசு பதிலடித் தீர்வுகளை அறிவித்தது. ஆனால், சுமூகமான முடிவுகளை எதிர்பார்த்து இதனை செயல்படுத்துவதை இந்தியா தாமதப்படுத்தியது.

வால்மார்ட் மற்றும் அமேசான் போன்ற அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனங்கள் இந்தியாவில் வர்த்தகம் செய்வதை கட்டுப்படுத்தும் புதிய இ-வணிக கொள்கையை இந்தியா அறிமுகப்படுத்தியபோது, வணிக உறவுகள் கசக்க தொடங்கின.

அடுத்ததாக, தரவுகளை சேமிக்கும் கொள்கை நடைமுறையாகியது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மாஸ்டர் கார்டு மற்றும் விசா நிறுவனங்கள் திரட்டுகின்ற தரவுகளை இந்தியாவிலேயே சேமித்து வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால், அந்த நிறுவனங்களின் வியாபார மாதிரி பாதிக்கப்பட்டுள்ளது.

வணிக சலுகையை அகற்றியிருப்பதாக கூறியுள்ளதன் மூலம் இந்த வர்த்தக உறவின் பதற்றத்தை மேலொரு படி முன்னேக்கி அமெரிக்கா கொண்டு சென்றுள்ளது. இத்தகைய வணிக உறவிலான பதற்றம் கவலைகளை தோற்றவித்துள்ளது,

அடுத்து என்ன?

முன்னுரிமைகளின் பொது அமைப்பினால் கிடைக்கும் சலுகை பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்க 60 நாட்கள் கெடுவை அமெரிக்கா விதித்துள்ளது.

இந்த காலக்கட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண இந்தியா நம்பிக்கையோடு உள்ளது.

இரு நாடுகளிலும் உள்ள வர்த்தக நிறுவனங்களும் மிக விரைவாக ஒரு முடிவு எடுக்கப்படும் என்று நம்பிக்கையோடு உள்ளன.

"அமெரிக்காவின் சேம்பருக்குள் இந்தியாவை வைத்து கொள்வதால் முன்னுரிமைகளின் பொது அமைப்புகள் திட்டத்தால் நீண்டகால ஆதரவு இந்தியாவுக்கு கிடைக்கும். அமெரிக்க-இந்திய வர்த்தக கவுன்சில் இந்தியாவுக்கு முன்னுரிமைகளின் பொது அமைப்புகள் திட்டத்தால் கிடைக்கும் பயன்களை வழங்குவதை வலியுறுத்தி வருகிறது. இந்த திட்டத்தால் இந்தியாவும், அமெரிக்காவும் ஆதாயம் ஈட்டியுள்ளன" என்று அமெரிக்க-இந்திய வர்த்தக கவுன்சில் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு சுங்க வரிவிதிப்பின்றி பல பில்லியன்கணக்கான அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான பொருட்களை இறக்குமதி செய்யும் திட்டத்தை நிறுத்துவதற்கு உத்தேசித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

"இந்திய - அமெரிக்க அரசுகளுக்கிடையேயான தீவிரமான பேச்சுவார்த்தைக்கு பிறகும், இந்திய சந்தைக்குள் அமெரிக்க நிறுவனங்கள் செயல்படுவதற்கான நியாயமான வழிமுறைகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு இந்திய அரசு எவ்வித உறுதியும் அளிக்காததால், நான் இந்த முடிவை எடுக்கிறேன்" என்று அமெரிக்க நாடாளுமன்ற கட்சி தலைவர்களுக்கு எழுதியுள்ள கடித்தத்தில் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வளர்ந்து வரும் நாடு என்ற அடிப்படையில், 1970ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் சுமார் 5.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான இறக்குமதிக்கு சுங்க வரிவிதிப்பற்ற சலுகையை இந்தியா அனுபவித்து வருகிறது. ஆனால், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியா மிக அதிகளவிலான வரியை விதித்து வருகிறது. இந்திய சந்தைக்குள் அமெரிக்காவின் நியாயமான அணுகலை உறுதிசெய்வதற்கு அந்நாட்டு அரசாங்கம் தவறிவிட்டதாக அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை Drew Angerer

அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கிடையே அரசியல் மற்றும் பாதுகாப்புத்துறையில் இணக்கமான உறவு இருந்து வரும் நிலையில், இருநாடுகளுக்கிடையேயான வர்த்தக உறவு தொடர்ந்து மோசமடைந்து வருகிறது.

அமெரிக்காவின் 'ஜெனரலைஸ்ட் சிஸ்டம் ஆஃப் பிரிபரன்சஸ்' (ஜிஎஸ்பி) என்றும் அந்த சலுகை பட்டியலிலிருந்து இந்தியாவை நீக்குவது தொடர்பான முடிவு குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்துக்கும், இந்திய அரசுக்கும் தெரிவிக்கப்பட்ட பிறகு, அதற்கான உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திடுவார் எனவும், இது நடைமுறைக்கு வருவதற்கு குறைந்தது 60 நாட்கள் ஆகுமென்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகளுக்கான அலுவலகம் தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

ஜிஎஸ்பி என்னும் அமெரிக்காவின் இறக்குமதி சலுகை திட்டத்தில் அதிக பயனை பெறும் நாடாக இந்தியா விளங்கி வரும் சூழ்நிலையில், டிரம்ப் எடுத்துள்ள இந்த நடவடிக்கை அவர் அமெரிக்க அதிபராக கடந்த 2016ஆம் ஆண்டு பதவியேற்றத்திலிருந்து இந்தியா மீது எடுக்கப்படும் மிகப் பெரிய கொள்கை முடிவாக இருக்கும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்