பாலுறவு கொண்ட ஆண்களின் காணொளியை ட்விட்டரில் பகிர்ந்த பிரேசில் அதிபர் மற்றும் பிற செய்திகள்

பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூ படத்தின் காப்புரிமை Getty Images

கார்னிவல் விழாவுக்கு வந்திருந்த குறிப்பிட்ட இரண்டு நபர்களின் ஆபாச வீடியோவை, பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூ டிவிட்டரில் பகிர்ந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விழா குறித்த உண்மையை வெளிக்கொண்டு வரவே காணொளியை வெளியிட்டதாக அவர் கூறினார்.

படத்தின் காப்புரிமை Getty Images

ட்விட்டரில் பகிரப்பட்ட காணொளியில் தெருக்களில் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, இரண்டு ஆண்கள் பேருந்து நிழற்குடைக்கு மேல் பாலுறவில் ஈடுபட்டது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

இது போன்ற நிகழ்வுகள் சாதாரணமாகிவிட்டதாக பொல்சனாரூ குறிப்பிட்டுள்ளார்.

பிரேசிலின் மிகவும் விருப்பமான திருவிழாவையும், ஒருபாலுறவு சமூகத்தைக் குறித்தும் இவ்வாறு பேசியதற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.

'அதிமுக-வை மிரட்டி கூட்டணி வைத்துள்ளது பாஜக'

ஊழல் வழக்குகளைக் காட்டி அதிமுக-வை மிரட்டி அதனுடன் தமிழகத்தில் பாஜக கூட்டணி வைத்துள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

இந்தியாவில் பலமுறை மாநில அரசுகளைக் கலைத்த காங்கிரஸ், தமிழ்நாட்டில் திமுக அரசையும் கலைத்துள்ளது. ஆனால், திமுக காங்கிரசுடன் சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்துள்ளது என்று புதன்கிழமை சென்னை அருகே நடந்த தேர்தல் கூட்டத்தில் பிரதமரும், பாஜக தலைவர்களில் ஒருவருமான நரேந்திர மோதி குற்றம்சாட்டினார்.

விருதுநகரில் நடந்துவரும் திமுக கூட்டணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின் இதற்கு உடனடியாக பதில் அளிக்கும் விதத்தில் அதிமுக-வை மிரட்டி பாஜக கூட்டணி வைத்துள்ளதாக குற்றம்சாட்டினார்.

விரிவாக படிக்க:ஊழல் வழக்குகளை காட்டி, அதிமுக-வை மிரட்டி கூட்டணி வைத்துள்ளது பாஜக: மு.க.ஸ்டாலின்


பெண்களை கண்காணிக்க ஒரு செயலி

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சித்தரிப்புக்காக

பெண்களை கண்காணிப்பதற்கென்றே ஒரு செயலியை உருவாக்கி இருக்கிறது செளதி என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த விவகாரத்தில் அமைதியாக இருந்த கூகுள் நிறுவனம், ஒரு அமெரிக்க காங்கிரஸ் பெண் உறுப்பினரிடம், அந்த செயலி தங்கள் சட்ட திட்டத்திற்கு எதிரானது அல்ல என்று கூறியதாக அந்த உறுப்பினர் பிபிசியிடம் தெரிவித்தார்.

பெண்கள் எங்கெல்லாம் பயணிக்கிறார்கள் என்று 'அப்ஷர்' என அழைக்கப்படும் அந்த, சௌதியில் உருவாக்கப்பட்ட, செயலியைக் கொண்டு கண்காணிக்க முடியும்.

இந்த செயலியானது கூகுள் ஆப் ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலும் கிடைக்கிறது.

இந்த செயலியானது மனித உரிமைகளை மீறுகிறது என செயற்பாட்டாளர்கள் குற்றஞ்சாட்டி இருந்தனர்.

விரிவாக படிக்க:சௌதி பெண்களை கண்காணிக்கும் செயலி - ஆதரவும் எதிர்ப்பும்


''இந்திய தாக்குதலில் 292 பேர் இறந்துவிட்டார்கள்; ஆதாரம் இதுதான்''- போலி செய்தி

படத்தின் காப்புரிமை Twitter

இந்தியாவின் பாலக்கோட் விமான தாக்குதலில் 292 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

எங்கே பகிரப்பட்டது? - வாட்ஸ் அப் மற்றும் ட்விட்டர்

கூற்று உண்மையா பொய்யா? - பொய்

ஒரு வாட்ஸ் அப் அரட்டையில் இந்தியாவின் பாலகோட் விமான தாக்குதலில் 292 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படும் பதிவொன்று இந்தியாவில் வைரலாக பரவியது.

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் பயிற்சி முகாம்களை குறிவைத்து இந்தியா விமான தாக்குதலை நடத்தியது.

வாட்ஸ் அப் சாட் ஒன்றில் ஒரு இந்தியருக்கும் அவரது பாகிஸ்தான் நண்பர் எனக்கூறப்படும் மருத்துவர் லிஜாசுக்கும் உரையாடல் நடந்ததாக கூறப்படும் ஸ்க்ரீன்ஷாட் வைரலாக பரவியது.

அதில் பாலகோட்டின் மருத்துவ பல்கலைகழகத்தைச் சேந்த ஒரு மருத்துவர் விமான தாக்குதல் நிகழ்ந்த இடத்துக்கு அருகில் இருந்தாகவும், மேலும் எத்தனை பேர் இறந்தார்கள் என்பதை அவர் உறுதிப்படுத்துவது போன்றும் அந்த வாட்ஸ் அப் சாட்டின் ஸ்க்ரீன்ஷாட்டில் உள்ளது.

விரிவாக படிக்க:''இந்திய தாக்குதலில் 292 பேர் இறந்துவிட்டார்கள்; ஆதாரம் இதுதான்'' வைரலான போலி செய்தி


இந்து - கத்தோலிக்கர் முரண்பாட்டை ஏற்படுத்தும் தீய சக்திகள்

படத்தின் காப்புரிமை Getty Images

இலங்கையில் இந்துக்களுக்கும் கத்தோலிக்கர்ளுக்கும் இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் தீய சக்திகளின் செயல்பாடுகளுக்கு இடமளிக்க வேண்டாம் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளார் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் அலங்காரப் பலகை அண்மையில் சேதமாக்கப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்துள்ளார்.

விரிவாக படிக்க:இலங்கையில் இந்து-கத்தோலிக்கர் முரண்பாட்டை ஏற்படுத்தும் தீய சக்திகள்: விக்னேஸ்வரன்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :