அமெரிக்க அதிபர் தேர்தல்: டிரம்புக்கு போட்டியாக களமிறங்கும் பேட்ரோ இவ்ரோக்

ஆதரவாளர்களுடன் ஓரோக் படத்தின் காப்புரிமை Reuters

பல மாதங்களாக இருந்து வந்த அனுமானங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, டெக்ஸாஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் பேட்ரோ இவ்ரோக் 2020ம் ஆண்டு அமெரிக்க நாடாளுமன்ற அதிபர் தேர்தலில் போட்டியிட போவதாக முறையாக அறிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சியின் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்புக்கு எதிரான போட்டியில் ஜனநாயக கட்சியில் பிரபலம் அடைந்து வரும் இவரும் இணைந்துள்ளார்.

46 வயதான பேட்ரோ இவ்ரோக் வெள்ளை மாளிகையை கைப்பற்றும் போட்டியில் இணைவதாக அறிவிக்கின்ற ஜனநாயக கட்சியின் 15வது உறுப்பினராவார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில், குடியரசு கட்சியை சேர்ந்த டெட் குருஸூக்கு எதிராக கடும் போட்டியை பேட்ரோ இவ்ரோக் வழங்கினார். ஆனால், கடைசியில் இந்த முயற்சி வெற்றியடையவில்லை.

பல தசாப்த காலமாக டெக்ஸாஸில் எந்தவொரு குடியரசு கட்சி உறுப்பினரும் செயல்படாத அளவுக்கு மிகவும் திறமையாக பேட்ரோ இவ்ரோக் நடத்திய ஊடகங்களுக்கு அனுகூலமான பரப்புரை வடிவம், தேசிய அளவில் குடியரசு கட்சிக்கு புத்துணர்ச்சி ஊட்டியதோடு, முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவோடு ஒப்புமைகளையும் ஈர்த்திருந்தது.

பர்னீ சான்டர்ஸ், எல்சபெத் வாரன், கமலா ஹாரிஸ், அமி குலோபஷார் மற்றும் இந்தியானா மேயர் பீட்டே பூற்றிஜீஜ் உள்பட ஜனநாயக வேட்பாளரான உருவாக்குவதற்கான போட்டியில் பேட்ரோ இவ்ரோக்கும் இணைந்துள்ளார்.

பரப்புரை தொடக்கத்தை அறிவிக்கும் காணொளியில் தன்னுடைய மனைவியோடு தோன்றியுள்ள பேட்றோ இவ்ரோக், இந்த நாட்டின் மற்றும் நமது ஒவ்வொருவரின் உண்மையை வெளிகாட்டும் தருணம் இதுவென கூறியுள்ளார்.

பொருளாதார, ஜனநாயக மற்றும் பருவநிலை மாற்றம் பற்றிய சவால்கள் இப்போது இருப்பதைபோல இதற்கு முன்னால் பெரிதாக இருந்ததில்லை. அவை நம்மை ஆட்கொள்ளும் அல்லது அமெரிக்காவின் மேதைமையை சுட்டிக்காட்டுகின்ற சிறந்த வாய்ப்பை இவை வழங்கும் என்று அவர் கூறியுள்ளார்.

யார் இந்த பேட்ரோ இவ்ரோக்?

இவரது இயற்பெயர் ராபர்ட் என்றாலும், அவரது புனைபெயரான பேட்ரோ என்றே இவர் அறியப்படுகிறார். ராபர்டோ என்பதற்கு ஒரு பொதுவான சுருக்கமாக எல் பாசோவில் குழந்தையாக இருந்தபோது ஏற்றுக்கொண்ட பெயர் இதுவாகும்.

படத்தின் காப்புரிமை Getty Images

முன்னாள் பங்க் ராக் இசைக்கலைஞரான இவர், குடியரசு கட்சியில் வளர்ந்து வரும் அரசியல்வாதியாகும். இவரால் அதிக மக்களை கவர்வதோடு, தேர்தலுக்கு பெரும் பணத்தையும் திரட்ட முடியும்.

2018ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது, 80 மில்லியனுக்கு மேலான நிதியை திரட்டி, செனட் தேர்தலுக்கான நிதி திரட்டும் வரலாற்று பதிவை முறியடித்த டெக்ஸாஸ் அரசியில்வாதியான இவர், ஸ்பானிஷ் மொழியில் மிக சரளமாக பேசக்கூடியவர்.

சென்ட் தேர்தலின்போது வேட்பாளராக போட்டியிட்போது, டெக்ஸாஸிலுள்ள 254 வட்டங்களுக்கும் பயணித்த இவர், அந்த பயணத்தின் ஒவ்வொரு தருணத்தையும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வந்தார்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பராக் ஒபாமாவின் கூட்டாளிகள் இவருக்கு ஆதரவு அளித்த நிலையில், பேட்ரோஇவ்ரோக், பராக் ஒபாமாவை சந்தித்ததாக டிசம்பர் மாதம் வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டிருந்தது.

அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராக பேட்ரோ இவ்ரோக் தன்னை அறிவிப்பார் என்று பல மாதங்களாக ஆய்வாளர்கள் எதிர்பார்த்து வந்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்