சென்னையில் 3 தொகுதியிலும் திமுக போட்டி: கோவை, மதுரை - கம்யூனிஸ்ட்

திமுக அணி
Image caption திமுக அணியில் உள்ள கட்சிகள் போட்டியிடும் பட்டியலை வெளியிடும் மு.க.ஸ்டாலின்.

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒதுக்கப்பட்டிருக்கும் தொகுதிகளின் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தார்.

திமுக போட்டியிடும் 20 தொகுதிகள்

வட சென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, திருப்பெரும்புதூர், காஞ்சிபுரம் (தனி), அரக்கோணம், வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், நீலகிரி (தனி), பொள்ளாச்சி, திண்டுக்கல், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், தூத்துக்குடி, தென்காசி (தனி), திருநெல்வேலி.

காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகள்

திருவள்ளூர் (தனி), கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி, புதுச்சேரி.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

கோயம்புத்தூர், மதுரை.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

திருப்பூர், நாகப்பட்டினம் (தனி)

விடுதலை சிறுத்தைகள் கட்சி

சிதம்பரம்(தனி), விழுப்புரம்(தனி)

மதிமுக

ஈரோடு

இந்திய ஜனநாயகக் கட்சி

பெரம்பலூர்

கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி

நாமக்கல்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

இராமநாதபுரம்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்