சூரிய மண்டலத்துக்கு வெளியே இதுவரை 4,000 கோள்கள் கண்டுபிடிப்பு மற்றும் பிற செய்திகள்

planet படத்தின் காப்புரிமை NASA

பூமி ஓர் அங்கமாக இருக்கும் சூரிய மண்டலத்துக்கு வெளியே இதுவரை 4,000 கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பூமியில் மட்டுமல்லாது விண்ணிலும் நிலை நிறுத்தப்பட்டுள்ள தொலைநோக்கிகள் மூலம் இந்த கோள்கள் கண்டறியப்பட்டுள்ளன.

1992ஆம் ஆண்டு அலெக்ஸ்சாண்டர் வோல்ஸ்சான் மற்றும் டேல் ஃபிரெய்ல் ஆகியோர் ஒரு நியூட்ரான் நட்சத்திரத்தை சுற்றி வரும் கோள்களைக் கண்டறிந்ததே நாம் இருக்கும் சூரிய மண்டலத்துக்கு வெளியே கோள்கள் கண்டறியப்பட்டது முதல் முறையாகும்.

ஐரோப்பாவின் 'தி எக்ஸோசோலார் பிளானட்ஸ் என்சைக்ளோபீடியா' இதுவரை 4,000க்கும் மேலான கோள்களை, சூரிய மண்டலத்துக்கு வெளியே இருப்பதை உறுதிப்படுத்தி ஆவணப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நாசா 4,000 எனும் இலக்கை அடைய இன்னும் 74 கோள்களை ஆவணப்படுத்த வேண்டும்.

மோதிக்கு எதிராக 111 தமிழக விவசாயிகள் போட்டி

படத்தின் காப்புரிமை Getty Images

மக்களவை தேர்தல் இன்னும் சில வாரங்களில் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோதி போட்டியிடும் வாரணாசி தொகுதியில், அவருக்கு எதிராக 111 தமிழக விவசாயிகள் வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கிளம்பி, ஏப்ரல் 24ஆம் தேதி வாரணாசி செல்லவுள்ளதாகவும், வேட்புமனு தாக்கல் செய்ய பணம் வேண்டும் என்பதால், அங்கே பிச்சையெடுக்கப் போவதாகவும் பிபிசி தமிழிடம் அய்யாக்கண்ணு தெரிவித்தார்.

விரிவாகப் படிக்க - வாரணாசியில் மோதிக்கு எதிராக 111 தமிழக விவசாயிகள் போட்டி

"வீழ்ந்தது ஐ.எஸ்"

சிரியாவில் தீவிரவாதிகள் வீழ்த்தப்பட்டதையடுத்து, இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ் அமைப்பின் காலம் முடிந்துவிட்டதாக அமெரிக்க ஆதரவுள்ள சிரியா ஜனநாயக படைகள் தெரிவித்துள்ளது.

ஜிகாதியக் குழுவின் கடைசி கட்டுப்பாட்டு இடமாக இருந்த பாகூஸில், சிரியா ஜனநாயக படை ஆயுதப் போராளிகள் வெற்றிக் கொடிகளை உயர்த்தி கொண்டாடி வருகிறார்கள்.

விரிவாகப் படிக்க - "முற்றிலும் வீழ்ந்தது ஐ.எஸ்" - சிரியா ஜனநாயகப் படைகள் அறிவிப்பு

மதுபானம் குடிப்பவர்களுக்கு கொசுக்களால் ஆபத்து

படத்தின் காப்புரிமை Getty Images

மதுபானத்திற்கும், கொசு கடிப்பதற்கும் ஏதாவது தொடர்புள்ளதா என்று தேடிப்பார்த்தபோது, அதுதொடர்பாக கடந்த 2002ஆம் ஆண்டு அமெரிக்கா கொசு கட்டுப்பாட்டு சங்கத்தின் சஞ்சிகையில் கட்டுரை உள்ளது குறித்து தெரியவந்தது.

ஒருவர் மதுபானம் குடித்திருந்தால் அவர் கொசு கடிகளுக்கு உள்ளாவது ஒப்பீட்டளவில் மிகவும் அதிகமாக இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விரிவாகப் படிக்க - மதுபானம் குடிப்பவர்களுக்கு கொசுக்களால் வரும் ஆபத்து

"நாட்டுப்புறக் கலைகளை பாடமாக்க வேண்டும்"

மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், கடந்த 5 ஆண்டுகால மத்திய அரசின் ஆட்சி எவ்வாறு இருந்தது என்றும், வரப்போகும் புதிய பிரதமரிடம் மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது குறித்தும் தெரிந்து கொள்ள, நாம் தமிழகத்தின் சில இடங்களுக்கு பயணித்தோம்.

பெரும்பாலும் தேர்தல் நெருங்கும்போதும், தேர்தல் அறிக்கைகளிலும் விவசாயிகள், மீனவர்கள், போன்ற பிரிவினருக்கு சலுகைகளும் மானியங்களும் அறிவிக்கப்படும். ஆனால், கலைத்துறையினருக்கு அவ்வாறெல்லாம் இருக்காது. நலிந்து வரும் நாட்டுப்புறக் கலைகளுக்கு அரசு ஆதரவு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை இத்தகைய கலைஞர்களின் உள்ளங்களில் தேர்தல் காலத்தில் எதிரொலிக்கிறது. இந்தக் குரல்களைக் கேட்கப் போவது யார்?

விரிவாகப் படிக்க - நாட்டுப்புறக் கலைகளுக்கு வெளிநாட்டில் இருக்கும் மதிப்பு இந்தியாவில் ஏன் இல்லை?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :