ஏர்பவர் வயர்லெஸ் மின்சாரம் ஏற்றும் கருவி தயாரிப்பை கைவிட்டது ஆப்பிள் நிறுவனம்

மின்சாரம் ஏற்றுதல் படத்தின் காப்புரிமை APPLE

ஆப்பிள் நிறுவனம் வழக்கமாக மேற்கொள்ளாத ஒரு நடவடிக்கையாக, சரியாக இயங்காது என்பதால், வயர்லெஸ் ஏர்பவர் கருவியின் தயாரிப்பை கைவிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் பல கருவிகளுக்கு இணைப்பு வழங்கி மின்சாரம் ஏற்றப்படுவதற்கு பதிலாக, இந்த ஏர்பவர் கருவியின் மூலம் ஒரே நேரத்தில் சார்ஜ் செய்துகொள்வதற்கு திட்டப்பணிகளை தொடங்கியதாக 2017ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

"ஆனால், பெரும் முயற்சிகளுக்கு பின்னர், ஆப்பிள் நிறுவனத்தின் உயர் தரத்தை ஏர்பவர் எட்ட முடியாது என்பதால், இந்த பணித்திட்டத்தை கைவிட்டுள்ளோம்" என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலதிக விவரங்களை இந்த நிறுவனம் வழங்கவில்லை.

2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த கருவி தயாரிக்கப்படுவது பற்றிய அறிவிப்பு வெளியானவுடன், இது பற்றிய வதந்திகள் வெளியாக வந்தன.

உலக தரத்திலான சிறந்த சார்ஜிங் கருவியை வழங்கும் வாக்குறுதியை அளித்ததோடு, 2018ம் ஆண்டு இந்த கருவி வெளியிடப்படும் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள் நிறுவனத்தின் போட்டி நிறுவனங்களான ஹூவாவே மற்றும் சாம்சங் தாங்கள் தயாரிக்கும் கருவிகளுக்கு மின்சாரம் ஏற்றுகின்ற வயர்லெஸ் பொருட்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் எந்தத் தொகுதியில் அதிகம் பேர் போட்டியிடுகின்றனர்?

படத்தின் காப்புரிமை Getty Images

2019ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் இறுதிசெய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் 845 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 42 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்து, தேர்தல் ஆணையம் இறுதிப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளையும் சேர்த்து 845 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 65 வேட்பாளர்கள் பெண்கள். ஒருவர் மாற்றுப் பாலினத்தைச் சேர்ந்தவர்.

செய்தியை வாசிக்க: மக்களவைத் தேர்தல் 2019: தமிழகத்தில் எந்தத் தொகுதியில் அதிகம் பேர் போட்டியிடுகின்றனர்?

மிஷன் ஷக்தி: தேர்தல் நடத்தை விதிகளை பிரதமர் நரேந்திர மோதி மீறவில்லை - தேர்தல் ஆணையம்

படத்தின் காப்புரிமை Getty Images

செயற்கைக்கோளை இடைமறித்து அழிக்கும் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது என்பதை பிரதமர் நரேந்திர மோதி அறிவித்தது தேர்தல் நடத்தை விதியை மீறவில்லை என தலைமை தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

தேர்தல் நடத்தைகள் அமலில் உள்ள சமயத்தில் ஊடகங்கள் மூலம் நாட்டு மக்களுக்கு, அந்த அறிவிப்பை வெளியிட்டதன் மூலம் அரசின் அதிகாரபூர்வ ஊடகங்களை பிரதமர் முறைகேடாக பயன்படுத்திவிட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மார்ச் 27 அன்று தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தார்.

செய்தியை வாசிக்க: தேர்தல் நடத்தை விதிகளை பிரதமர் நரேந்திர மோதி மீறவில்லை - தேர்தல் ஆணையம்

நீரவ் மோதிக்கு பிணை வழங்க லண்டன் நீதிமன்றம் மறுப்பு

படத்தின் காப்புரிமை FACEBOOK/NIRAVMODI

இந்தியாவில் கடன் வாங்கிவிட்டு இங்கிலாந்துக்கு தப்பிச்சென்றுள்ளதாக குற்றச்சாட்டுக்கு ஆளாகி லண்டனில் கைது செய்யப்பட்ட வைர வியாபாரி நீரவ் மோதியை பிணையில் விடுவிப்பதற்கு லண்டன் நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

இதன் மூலம், கடந்த 20ஆம் தேதி லண்டனில் கைது செய்யப்பட்ட நீரவ் மோதி மீண்டும் காவலில் வைக்கப்படுவார் என்று தெரிகிறது.

செய்தியை வாசிக்க: நீரவ் மோதிக்கு பிணை வழங்க லண்டன் நீதிமன்றம் மறுப்பு

பிரெக்ஸிட்: பிரிட்டன் பிரதமரின் ஒப்பந்தம் மீண்டும் தோல்வி

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பிரிட்டன் பிரதமர் தெரீசா மே நாடாளுமன்றத்தில் சமர்பித்த பிரெக்ஸிட் ஒப்பந்த வரைவு மூன்றாவது முறையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கான ஒப்பந்தத்தின் மீது பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடத்திய மூன்றாவது வாக்களிப்பும் தோல்வியில் முடிந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலக இருந்த நாளில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

பிரிட்டன் பிரதமர் தெரீசா மே முன் மொழிந்த ஒப்பந்தத்துக்கு 344 பேர் எதிராகவும், 286 பேர் மறுத்தும் வாக்களித்தனர்.

செய்தியை வாசிக்க: பிரெக்ஸிட்: பிரிட்டன் பிரதமரின் ஒப்பந்தம் மீண்டும் தோல்வி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :