ஆஸ்திரேலியாவில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் ’பிங்க்’ ஏரி

இம்மாதிரியான பிங்க் ஏரிகள் ஆஸ்திரேலியா, ஸ்பெயின், கனடா மற்றும் செனகல் ஆகிய நாடுகளில் காணப்படுகின்றன

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் உள்ள ஏரி ஒன்று இயற்கையாக பிங்க் நிறத்தில் மாறியுள்ளது.
படக்குறிப்பு,

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் உள்ள ஏரி ஒன்று இயற்கையாக பிங்க் நிறத்தில் மாறியுள்ளது.

படக்குறிப்பு,

இந்த கண்ணை கவரும் நிறம், அதிகப்படியான சூரிய ஒளி, குறைந்த மழை பொழிவு மற்றும் மிதமான வெப்பநிலையால் உருவாகிறது.

படக்குறிப்பு,

இம்மாதிரியான சூழலில் இந்த ஏரியில் உள்ள பாசிகள் சிவப்பு நிற நிறமிகளை உருவாக்குகின்றன

படக்குறிப்பு,

இந்த வண்ணயமான ஏரிக்கு கடந்த 2013ஆம் ஆண்டிலிருந்து பல சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

படக்குறிப்பு,

சில சுற்றுலா பயணிகள் இந்த ஏரியின் வண்ணத்திற்கு ஏற்றாற்போல் உடையணிந்து புகைப்படங்கள் எடுத்துக் கொள்கின்றனர்

படக்குறிப்பு,

இருப்பினும் இந்த ஏரியில் உப்பின் அளவு அதிகப்படியாக இருப்பதால், அது சிலரின் தோலுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதால் ஏரிக்கு மிக அருகில் செல்ல வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

படக்குறிப்பு,

ஏரிக்கு அருகில் அழுகிய முட்டையின் துர்நாற்றம் வருவதாக சமூக வலைதளங்களில் சிலர் எச்சரித்துள்ளனர்

படக்குறிப்பு,

இந்த பிங்க் நிறம் இலையுதிர் காலத்தின் இறுதி வரை நீடிக்கும். குளிர்ச்சியான வெப்பநிலை வந்த பிறகு ஏரி மீண்டும் நீல நிறமாக மாறும்

படக்குறிப்பு,

இம்மாதிரியான பிங்க் ஏரிகள் ஆஸ்திரேலியா, ஸ்பெயின், கனடா மற்றும் செனகல் ஆகிய நாடுகளில் காணப்படுகின்றன