பத்து ஆண்டுகளாக தனிமையில் தவித்த 'ரோமியோ' தவளைக்கு `ஜூலியட்' கிடைத்தது மற்றும் பிற செய்திகள்

பத்து ஆண்டுகளாக தனித்து வாழ்ந்த 'ரோமியோ' தவளைக்கு `ஜூலியட்' கிடைத்தது
Image caption பத்து ஆண்டுகளாக தனித்து வாழ்ந்த 'ரோமியோ' தவளைக்கு `ஜூலியட்' கிடைத்தது

நீர் வாழ் பிராணிகளை வளர்க்கும் பூங்காவில் பத்து ஆண்டுகளாக தனித்து வாழ்ந்த தவளைக்கு ஜோடி கிடைத்தது.

ரோமியோ எனும் அழைக்கப்படும் சேவீன்கஸ் நீர் தவளை இத்தனை ஆண்டுகளாக இந்த புவியில் தனித்து இருக்கும் தனி தவளை ரகமாக கருதப்பட்டது.

இந்த சூழலில் பொலிவியன் காட்டில் அதற்கு இணையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். இதற்கு ஜூலியட் என பெயரிடப்பட்டுள்ளது.


காங்கிரசுடன் தொடர்புடைய 687 பக்கங்களை நீக்கியது ஃபேஸ்புக் நிறுவனம்

படத்தின் காப்புரிமை Getty Images

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புடைய 687 பக்கங்களை நீக்கியள்ளதாக ஃபேஸ்புக் கூறியுள்ளது.

''ஒருங்கிணைக்கப்பட்ட நம்பகமற்ற நடத்தை'' கொண்டிருந்த காரணத்தால் இந்த பக்கங்கள் தனது சமூக வலைதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது என ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுளளது.

இந்தியாவில் 300 மில்லியன் ஃபேஸ்புக் பயனர்கள் உள்ளநிலையில் ஒரு பிரபலமான கட்சிக்கு எதிரான அரிதான ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளது ஃபேஸ்புக் நிறுவனம்.

விரிவாக படிக்க:காங்கிரசுடன் தொடர்புடைய 687 பக்கங்களை நீக்கியது ஃபேஸ்புக் நிறுவனம்


மக்களவை தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்திருக்கும் ஒரு மலை கிராமம்

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நிலங்களை நால்வகையாகப் பிரிக்கிறது தொல்காப்பியம்.

முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிவது பாலை என்கிறது சிலப்பதிகாரத்தின் காடுகாண் காதை. அதாவது, முல்லை, குறிஞ்சி ஆகிய நிலங்கள் நீண்ட காலம் மழை இல்லாமல் காய்ந்து போய் இருப்பின் அது பாலை நிலமாக கருதப்படும்.

மக்களவைத் தேர்தலின் பொருட்டு மக்களின் குறைகள் தேவைகள் குறிப்பாக தேர்தல் குறித்து அவர்களது மனநிலை குறித்து அறிய இந்த குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நால்வகை நிலங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளை தேர்ந்தெடுத்து பிபிசி தமிழ் பயணித்தது.

விரிவாக படிக்க:மக்களவை தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்திருக்கும் ஒரு மலை கிராமம்


வயநாடு தொகுதியில் ராகுல் காந்திக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?

படத்தின் காப்புரிமை Getty Images

"வருக வருக ராகுல் காந்தி, உங்களை வயநாடு அன்புடன் வரவேற்கிறது" - காங்கிரஸ் ஊழியர்கள் வயநாடு எங்கும் இவ்வாறான கோஷத்தை எழுப்புகிறார்கள்.

வேட்பாளர்களை அறிவிப்பதில் ஏற்பட்ட காலதாமதத்தால் காங்கிரஸ் ஊழியர்கள் முதலில் உற்சாகம் இழந்து இருந்தார்கள். ஆனால், ராகுல் காந்தி போட்டியிடுகிறார் என்ற அறிவிப்பு அனைத்தையும் மாற்றிவிட்டது.

விரிவாக படிக்க:மக்களவை தேர்தல் 2019: வயநாடு தொகுதியில் ராகுல் காந்திக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?


அழிக்கப்பட்ட 10,935 மில்லியன் ரூபாய் மதிப்பிலான கொகைன்

இலங்கையில் கடந்த மூன்று வருட காலங்களில் கைப்பற்றப்பட்ட சுமார் 765 கிலோகிராமிற்கும் அதிக எடையுடைய கொகைன் போதைப்பொருள் அழிக்கப்பட்டது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் இந்த கொகைன் போதைப்பொருள் திங்கள்கிழமை அழிக்கப்பட்டது.

பாதுகாப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டு, நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்ட கொகைன் போதைப்பொருளே இன்று அழிக்கப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் போலீஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

விரிவாக படிக்க:இலங்கையில் சிறிசேன முன்னிலையில் அழிக்கப்பட்ட 10,935 மில்லியன் ரூபாய் மதிப்பிலான கொகைன்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :