வரலாறு காணாத வெள்ளத்தில் மிதக்கும் இரான் - 70 பேர் பலி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வரலாறு காணாத வெள்ளத்தில் மிதக்கும் இரான் - 70 பேர் பலி

இரானின் சமீப கால வரலாற்றில் இந்த வெள்ளம் எதிர்பாராதது. இரானின் 23 மாகாணங்களை பாதித்துள்ள இந்த வெள்ளம் வழக்கத்துக்கு மாறானது.

தற்போதைய வெள்ளம் நீண்ட வறட்சிக்குப் பிறகு வந்துள்ளது. அதனால் பொதுமக்களும் அரசும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தங்களை காப்பாற்ற யாரேனும் வருவார்கள் என வீட்டின் மேல் மக்கள் காத்திருக்கின்றனர்.

பருவநிலை மாற்றம் மட்டுமே வெள்ளத்துக்கு காரணமல்ல என்கின்றனர் வல்லுநர்கள்.

அதிக எண்ணிக்கையில் அணைகள் மற்றும் நகரங்களை உருவாக்கியுள்ளதால் நதிக்கரைகளுக்கு அருகில் மக்கள் அதிகமாகக் குடியேறுவதை நாம் கண்டுகொள்ளாமல் இருக்கிறோம் என்கிறார் வானிலை விஞ்ஞானி காவே மதானி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்