ஹாங்காங்: பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக ‘அம்ப்ரல்லா’ போராட்டக்காரர்களுக்கு எதிராக தீர்ப்பு

மூன்று முக்கிய செயற்பாட்டாளர்கள்

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு,

மூன்று முக்கிய செயற்பாட்டாளர்கள்

நகரில் சுதந்திரமான தேர்தல் நடைபெறுவதற்கு கோரிக்கை விடுத்து உள்நாட்டு ஒத்துழையாமை இயக்கம் ஒன்றில் பங்கேற்றதால், பொது மக்களுக்கு இடையூடு ஏற்படுத்திய குற்றவாளிகள் என ஜனநாயக ஆதரவு செயற்பாட்டாளர்கள் 9 பேருக்கு குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதிலுள்ள மூன்று முக்கிய செயற்பாட்டாளர்கள் ஹாங்காங் ஜனநாயக ஆதரவு இயக்கத்தின் முன்னணி தலைவர்களாக பார்க்கப்படுகிறார்கள்.

2014ம் ஆண்டு நடைபெற்ற "அம்ப்ரல்லா இயக்கத்தில்" அவர்கள் ஈடுபட்டதற்காக ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை பெறலாம்.

அப்போது, தங்களுடைய தலைவரை தாங்களே தேர்ந்தெடுப்போம் என்ற கோரி ஹாங்காங்கில் ஆயிரக்கணக்கானோர் பேரணி நடத்தினர்.

"ஆக்குப்பை டிரியோ" என்று அழைக்கப்படும் 60 வயதாகும் சமூகவியல் பேராசிரியர் சென் கின்-மேன், 54 வயதாகும் சட்ட பேராசிரியர் பென்னி தாய், 75 வயதாகும் பேப்டிஸ்ட் மதப்பிரிவு ஊழியர் ச்சு யியு-மிங் ஆகியோர் குற்றஞ்சாட்டப்பட்டோரில் அடங்குகின்றனர்.

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு,

2014ம் ஆண்டு நடைபெற்ற "அப்பிரல்லா இயக்கம்" நடத்திய போராட்டத்தால் ஹாங்காங்கின் மத்திய பகுதி பgல வாரங்களாக முடங்கியது.

சிவில் ஒத்துழையாமைக்கான பரப்புரையில் எதிர்ப்பாளர்களை ஊக்கப்படுத்தியதாக இந்த ஒத்துழையாமை இயக்கத்தின் நிறுவனர்களான இவர்கள் பார்க்கப்படுகிறார்கள்.

"இன்று என்ன நடந்தாலும் பரவாயில்லை..நாங்கள் விடாமுயற்சியோடு போராடுவோம். போராடுவதை விட்டுவிட மாட்டோம்" என்று தீர்ப்பு அளிக்கப்படும் முன்னர் செய்தியாளர்களிடம் பென்னி தாய் தெரிவித்தார்.

இதற்கான தண்டனை எப்போது அளிக்கப்படும் என்று தெரியவில்லை.

எதற்கு குற்றம் காணப்பட்டுள்ளனர்?

பென்னி தாய் மற்றும் சென் கின்-மேன் இருவரும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக இரண்டு வழக்குகளில் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டுள்ளனர்.

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு,

“மக்களின் ஹீரே” என்கிற வசன அட்டையோடு நீதிமன்றத்திற்கு வெளியே ஜனநாயகத்திற்கு ஆதரவாளர்.

இந்த ஒன்பது செயற்பாட்டாளர்களுக்கும் ஆதரவு அளிக்கும் விதமாக நீதிமன்றத்திற்கு வெளியே பெருங்கூட்டம் கூடியிருந்தது.

இந்த தீர்ப்பு சமூகத்தின மீது கணிசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கருத்தை இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜானி ச்சென் நிராகரித்தார்,

"பொது மக்களுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டு சமுதாயத்தில் அச்சமூட்டுகிற விளைவை உருவாக்கும் என்பதை தக்கரீதியாக விவாதிக்க முடியாது என்று இந்த நீதிபதி ஆணையில் எழுதியுள்ளார்.

இந்த நீதிமன்றம் "பயங்கரமான செய்தியை அனுப்பியுள்ளது" என்று ஹூமன் ரைட்ஸ் வாட்ச் கூறியுள்ள நிலையில், மனித உரிமை குழுக்களும் இந்த தீர்ப்பை விமர்சித்துள்ளன.

பெரும்பாலும் அமைதியாக போராடும் செயற்பாட்டாளர்களுக்கு அரசு தண்டனை வழங்குவதுபோல தோன்றுகிறது. ஹாங்காங்கில் சுதந்திரமான கருத்து வெளியீட்டை இது பாதிக்கும்" என்று ஆய்வாளர் மாயா வாங் பிபிசியிடம் கருத்து தெரிவித்துள்ளார்.

ஜனநாயக ஆதரவு செயற்பாட்டாளர்களுக்கு விரக்தி அளிக்கும் வகையில் இந்த தீர்ப்பு வந்துள்ளது.

போராட்ட சொற்களோடு சேர்த்து நாடாளுமன்ற உறுதிமொழியை எடுத்துக்கொண்டதால் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னதாக நீதிமன்றத்தால் நீக்கப்பட்டனர்.

பிறரும், வேட்பாளராக போட்டியிடுவதற்கு தகுதியில்லாதர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :