நிலவின் மேற்பரப்பில் மோதி விபத்துக்குள்ளான இஸ்ரேல் விண்கலம் மற்றும் பிற செய்திகள்

நிலவின் மேற்பரப்பில் மோதி விபத்துக்குள்ளான இஸ்ரேல் விண்கலம் படத்தின் காப்புரிமை Reuters

உலகில் முதல் முறையாக தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட விண்கலம் நிலவின் பரப்பில் மோதி சேதமடைந்தது.

நிலவின் பரப்பில் தரையிறங்கி புகைப்படங்களை எடுப்பது மட்டுமின்றி, பல்வேறு பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட 'பேரேஷீட்' என்னும் அந்த விண்கலம் நிலவின் பரப்பை தொடுவதற்கு முன்னதாக ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சனைகளின் காரணமாக தரையில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நிலவின் மேற்பரப்பை அடைந்த நான்காவது நாடு என்னும் பெருமையை அடைவதற்கு இஸ்ரேல் திட்டமிட்டிருந்தது.

இதற்கு முன்னர் சோவியத் ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் அரசுத்துறைகளின் கட்டுப்பாட்டிலுள்ள விண்வெளி ஆராய்ச்சி நிலையங்களின் விண்கலன்களே நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளன.

ராகுல் காந்தி தலைக்கு லேசர் ஒளி மூலம் குறி வைக்கப்பட்டதா, உண்மை என்ன?

படத்தின் காப்புரிமை CONGRESS TWITTER VIDEO GRAB
Image caption ராகுல் காந்தி

அமேதி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தபோது அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியின் பாதுகாப்பில் குறைபாடு இருந்ததாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியதாக சில செய்திகள் தெரிவித்தன.

அமேதியில் வேட்புமனு தாக்கல் செய்ய சென்ற ராகுல் செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவரது தலையில் 7 முறை லேசர் ஒளி பட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியதாக செய்திகள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக உள்துறை அமைச்சகத்துக்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதி இருப்பதாக அந்த செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதை அக்கடிதத்தில் சுட்டிக்காட்டிய காங்கிரஸ் கட்சி , ராகுல் காந்தியின் பாதுகாப்பில் உள்ள குறைபாடுகள் குறித்து எடுத்துரைத்துள்ளது.

விரிவாக படிக்க:லேசர் ஒளி மூலம் ராகுலின் தலைக்கு குறி வைக்கப்பட்டதா?

இந்திரா காந்தி பிரதமரானது எப்படி? மொரார்ஜி தேசாய் தேர்வு செய்யப்படாதது ஏன்?

படத்தின் காப்புரிமை HULTON ARCHIVE/GETTY IMAGES
Image caption நேரு - இந்திரா

முதல் மக்களவையின் ஆயுள் காலம் முடிந்து இரண்டாவது மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவின் முக்கியப் பகுதி 1957-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதியில் இருந்து மார்ச் 15-ம் தேதி வரையிலான காலத்தில் 20 நாள்கள் நடந்தது. அதன் அடிப்படையில் ஏப்ரல் 5-ம் தேதியே இரண்டாவது மக்களவை அமைக்கப்பட்டுவிட்டது. ஆனாலும், அப்போது தேர்தல் நடத்த முடியாத பஞ்சாப் மற்றும் இமாச்சலப்பிரதேசத்தின் மலைப்பகுதிகளில் வாக்குப் பதிவு ஜூலை 15 வரை பல கட்டங்களில் நடந்தது.

முதல் தேர்தலில் 53 கட்சிகள் போட்டியிட்டன அல்லவா. இரண்டாவது தேர்தலில் இந்த எண்ணிக்கை பெருமளவில் குறைந்தது. 4 தேசியக் கட்சிகள் உட்பட மொத்தம் 15 கட்சிகள் மட்டுமே இரண்டாவது தேர்தலில் களத்தில் இருந்தன.

முதல் தேர்தலில் போட்டியிட்ட 14 தேசியக் கட்சிகளில் 8 கட்சிகள் ஏதோ ஒருவகையில் இடதுசாரிக் கட்சிகளாக இருந்தன. இது தவிர, அம்பேத்கரின் பட்டியலினத்தார் கூட்டமைப்பும் அடிப்படை மக்களின் உரிமைகளையே நோக்கமாக கொண்டதாக இருந்தது. பாரதீய ஜனசங்கம், ஹிந்து மஹா சபா, ராமராஜ்ய பரிஷத் ஆகிய மூன்று வலதுசாரி கட்சிகள் இருந்தன. இடது மையவாதப் போக்கை கடைபிடித்த காங்கிரஸ் முக்கியக் கட்சியாக இருந்தது.

விரிவாக படிக்க:மொரார்ஜி தேசாய்க்கு பதில் இந்திரா காந்தி பிரதமரானது எப்படி?

கருந்துளையின் முதல் புகைப்படத்தை எடுத்த பின்னணியில் உள்ள பெண்

Image caption கேட்டி பௌமேன்

கருந்துளையின் முதலாவது புகைப்படத்தை எடுத்துள்ள அல்கோரிதத்தை உருவாக்க உதவியதற்காக 29 வயதான கேட்டி பௌமேன் உலக அளவில் புகழ்பெற்றுள்ளார்.

இந்த திருப்புமுனை ஏற்படுத்தக்கூடிய புகைப்படத்தை எடுக்கும் கணினி செயல் நிரலியை உருவாக்குவதற்கு கேட்டி பௌமேன் தலைமை தாங்கினார்.

பூமியில் இருந்து 500 மில்லியன் டிரில்லியன் கிலோமீட்டர் தொலைவிலுள்ள தூசு மற்றும் வாயுவின் ஒளிவட்டத்தை காட்டுகின்ற வியக்கதக்க இந்த புகைப்படம் புதன்கிழமை வெளியிடப்பட்டது.

இந்த முன்முயற்சியை அடைய முடியாது என்று முன்னர் நம்பப்பட்டதாக பௌமேன் கூறுகிறார்.

மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிலையத்தில் பட்டதாரி மாணவராக இருந்தபோது, பௌமேன் இந்த அல்கோரிதத்தை உருவாக்க தொடங்கினார்.

விரிவாக படிக்க:கருந்துளையின் முதல் புகைப்படம்: பின்னணியில் உள்ள பெண் யார்?

நாங்கள் மக்களுக்கானவர்கள், மதுரைக்கானவர்கள் - சு. வெங்கடேசன்

படத்தின் காப்புரிமை FACEBOOK/SU VENKATESAN
Image caption சு. வெங்கடேசன்

மதுரை நாடாளுமன்றத் தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு. வெங்கடசன் ஓர் அரசியல்வாதியாக அறியப்பட்டதைவிட, ஓர் எழுத்தாளராகவே அதிகம் அடையாளம் காணப்பட்டவர். காவல் கோட்டம் நாவலுக்காக சாகித்ய அகாதெமி விருதைப் பெற்ற வெங்கடேசனின் வேள்பாரி, வார இதழ் ஒன்றில் தொடராக வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றது.

ஆனால், உள்ளாட்சித் தேர்தல் முதல் சட்டமன்றத் தேர்தல் வரை பல தேர்தல்களில் அவர் போட்டியிட்டவர் என்பது பலரும் அறியாத தகவல்.

அனல் பறக்கும் வெயிலில் நடந்துகொண்டிருந்த பரபரப்பான பிரசாரத்திற்கு நடுவில், பிபிசியிடம் பேசினார் சு. வெங்கடேசன்.

கேள்வி: மதுரைத் தொகுதியின் முக்கியமான பிரச்சனைகளாக எதனைப் பார்க்கிறீர்கள்?

பதில்:மதுரைத் தொகுதி அல்லது மதுரை மாவட்டமே, வேறு மாவட்டங்களோடு ஒப்பிடும்போது தொழில், கல்வி போன்ற பல்வேறு அம்சங்களில் மிகவும் பின்தங்கியே இருக்கிறது. சிறிய நகரங்களோடு ஒப்பிட்டால்கூட இதுதான் நிலை. இதைத்தான் இந்த நகரத்தின் முக்கியமான பிரச்சனையாக நினைக்கிறேன்.

விரிவாக படிக்க:நாங்கள் மக்களுக்கானவர்கள், மதுரைக்கானவர்கள் - சு. வெங்கடேசன்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :