உலகின் மிகப்பெரிய விமானத்தின் முதல் பயணம் மற்றும் பிற செய்திகள்

நீளம் 385 அடி: முதல் பயணத்தை தொடங்கிய உலகின் மிகப் பெரிய விமானம் படத்தின் காப்புரிமை Reuters

இறக்கைகளுக்கிடையேயான தொலைவின் அடிப்படையில் உலகின் மிகப் பெரிய விமானமான ஸ்ட்ராடோலான்ச் தனது முதல் பயணத்தை தொடங்கியது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான மறைந்த பால் ஆலனால் கடந்த 2011ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது ஸ்ட்ராடோலான்ச் நிறுவனம். இந்த விமானம் பறந்துகொண்டிருக்கும்போதே அதிலிருந்து விண்கலங்களை ஏவும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதாவது, இந்த விமானத்தை சுமார் 10 கிலோ மீட்டர் உயரத்திற்கு பறக்க செய்து, அதன் பிறகு இதிலிருந்து விண்கலத்தை ஏவுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters

இந்த விமானத்திலுள்ள இரண்டு இறக்கைகளுக்கு இடையேயான தொலைவு மட்டும் 385 அடிகளாகும். இது ஒரு கால்பந்து மைதானத்தின் நீளத்தை விட சற்றே அதிகமாகும்.

இந்த திட்டம் வெற்றியடையும் பட்சத்தில், விண்கலங்களை பூமியின் நிலப்பரப்பிலிருந்து ஏவுவதைவிட, விண்ணிலிருந்து ஏவுவது குறைந்த செலவுடையாக இருக்கும்.

இருவேறு விமானங்களை ஒருங்கே கொண்டது போன்று ஆறு இன்ஜின்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விமானம் தனது முதல் பயணத்தின்போது சுமார் 15,000 அடிவரை, அதிகபட்சமாக மணிக்கு 274 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்தது.

படத்தின் காப்புரிமை Reuters

நடிகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜே.கே. ரித்தீஷ் மாரடைப்பால் மரணம்

படத்தின் காப்புரிமை FACEBOOK / J K RITHEESH
Image caption ஜே.கே. ரித்தீஷ்

நடிகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜே.கே. ரித்தீஷ் காலமானார். நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், போது மாரடைப்பு ஏற்பட்டு, உயிரிழந்தார்.

ராமநாதபுரம் தொகுதியில் அ.இ.அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக ஜே.கே. ரித்தீஷ் தற்போது பிரச்சாரங்களை மேற்கொண்டுவந்தார். சனிக்கிழமையன்று வீட்டிலிருந்தபோது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து அவர் உயிரிழந்தார்.

1973ல் இலங்கையின் கண்டியில் பிறந்த ரித்தீஷின் இயற்பெயர் சிவக்குமார். 1970களின் பிற்பகுதியில் ராமநாதபுரத்திற்குக் தன் பெற்றோருடன் குடிபெயர்ந்த ரித்தீஷ், சினிமாவின் மீது ஆர்வத்தில் 2007ஆம் ஆண்டில் கானல் நீர் படத்தின் மூலம் அறிமுகமானார். அதற்குப் பிறகு நாயகன், பெண் சிங்கம், எல்.கே.ஜி. ஆகிய படங்களிலும் அவர் நடித்திருக்கிறார்.

விரிவாக படிக்க:நடிகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜே.கே. ரித்தீஷ் மாரடைப்பால் மரணம்

தேர்தல் 2019: புர்கா அணிந்துகொண்டு கள்ள ஓட்டு - பாஜகவினர் தடுத்தது உண்மையா?

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

முஸாஃபர்நகர் மக்களவைத் தொகுதியின் பாரதிய ஜனதா ஊழியர் ஒருவர் புர்கா அணிந்திருந்த பெண்கள் குழு ஒன்றிடம் இருந்து போலி ஆதார் அட்டைகளை கைப்பற்றியதாக சமூக ஊடக காணொளி பதிவு ஒன்று வைரலாகியுள்ளது.

ஏப்ரல் 11ம் தேதி வியாழக்கிழமை முதல் கட்ட மக்களவைத் தொகதி தேர்தல்கள் நடைபெற்ற பின்னர் இந்த காணொளி வலம் வருகிறது.

இந்தியாவில் நடைபெறும் 17வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகின்றன. மே மாதம் இதன் முடிவுகள் அறிவிக்கப்படும்.

புர்கா அணிந்த சில பெண்கள் கள்ள ஓட்டுகளை போடுவதாக முஸாஃபர்நகர் பாஜக வேட்பாளர் சன்ஜீவ் பல்யான் தெரிவித்தார்.

அவர் குற்றம்சாட்டுவது ஆயிரக்கணக்கான முறை ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் பகிரப்பட்டு பார்க்கப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க:புர்கா அணிந்துகொண்டு கள்ள ஓட்டு - பாஜகவினர் தடுத்தது உண்மையா?

மஞ்சள் நகரின் ரசாயன நதிகள்: தேர்தல் பிரச்சனையாக நீடிக்கிறதா?

காவிரி பாயும் ஈரோடு மாவட்டத்தில் தோல் தொழிற்சாலைக் கழிவு, சாயக் கழிவுநீர் ஆகியவற்றால் நதிகள் மாசுபடுவது தேர்தல் பிரச்சனையாக நீடிக்கிறதா?

தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் ஒன்றான ஈரோடு, விவசாயத்திற்கும் தொழில்வளத்திற்கும் அறியப்பட்ட மாவட்டங்களில் ஒன்று.

காவிரி, பவானி, நொய்யல் என மூன்று ஆறுகள் பாய்வதால் விவசாயம் செழித்து வளர்ந்த பூமியாக விளங்கியது இந்த மாவட்டம். கரும்பு, மஞ்சள், நெல் என வளம் கொழிக்கும் பகுதி.

பிறகு, விசைத்தறி, பின்னலாடைத் தொழிலில் ஏற்பட்ட வளர்ச்சியும் அருகில் உள்ள கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஜவுளி உற்பத்தித் தொழிலில் ஏற்பட்ட வளர்ச்சியும் ஈரோட்டில் பெரும் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தியது.

விரிவாக படிக்க:மஞ்சள் நகரின் ரசாயன நதிகள்: தேர்தல் பிரச்சனையாக நீடிக்கிறதா?

குஜராத் சரக்கால் பாதிப்பு: உப்பிட்டவர்களின் சுவையற்ற வாழ்வு - திணைகளின் கதை

படத்தின் காப்புரிமை Getty Images

தேர்தல் குறித்து மக்கள் மனநிலை குறித்து அறிய இந்த குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நால்வகை நிலங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளை தேர்ந்தெடுத்து பிபிசி தமிழ் பயணித்தது.

மலைகளுக்கு வாக்கு இயந்திரங்களை கழுதையில் எடுத்து செல்லும் சின்னராஜ், தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்திருக்கும் சிற்றூர் (குறிஞ்சி), வாழ்வாதாரத்திற்காக சிறுநீரகத்தை விற்கும் மக்கள் (மருதம்), பூச்சிக் கொல்லியால் இறந்த விவசாயி குடும்பத்தினர் (முல்லை), உப்பு உற்பத்தியாளர்களின் துயரம் (நெய்தல்) என்று பலரை சந்தித்தோம்.

அதன் தொகுப்பு இது.

இந்திய எல்லையில் ஒரு முனையில் இருக்கும் கோடியக்கரை அருகே இருக்கிறது அகஸ்தியம் பள்ளி கிராமம். நம் உணவுத்தட்டுக்கும் இந்த கிராமத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஆம், நாம் உண்ணும் உணவுக்கு சுவையூட்டும் உப்பு இந்த கிராமத்தில் தயாரிக்கப்பட்டதாகவும் இருக்கலாம். ஆனால், அந்த உப்பு உற்பத்தியாளர்கள் தங்கள் வாழ்வு சுவையற்று போனதாக கூறுகிறார்கள். அதற்கு குஜராத்தும் ஒரு காரணம் என்கிறார்கள்.

விரிவாக படிக்க:குஜராத் சரக்கால் பாதிப்பு: உப்பிட்டவர்களின் சுவையற்ற வாழ்வு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்