பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து விலகுகிறார் தெரீசா மே

தெரீசா மே படத்தின் காப்புரிமை Reuters

பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து ஜூன் 7ஆம் தேதியில் இருந்து விலகப்போவதாக தெரீசா மே கூறியுள்ளார்.

ஜூன் 7ஆம் தேதி கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து அவர் விலகியபின், புதிய பிரதமர் தேர்வு செய்யப்படுவார்.

2016ம் ஆண்டு பிரிட்டன் மக்களிடம் நடத்தப்பட்ட மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு முடிவை செயல்படுத்துவதற்கு "தான் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக" டவுணிங் ஸ்டீட் பிரதமர் அலுவலகத்தில் இருந்து வெளியான உணர்ச்சிகரமான அறிவிப்பில் தெரீசா மே கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகும் பிரெக்ஸிட்டை அமலாக்க முடியவில்லை என்பது மிகவும் வருந்தத்தக்க விடயமாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், நாட்டின் சிறந்த நலன்களை பேணும் வகையில் புதிய பிரதமர் இருப்பார் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் தேர்தெடுக்கப்படும் வரை பிரதமராக பணியாற்றுவதை தொடர இருப்பதாக தெரீசா மே கூறியுள்ளார்.

தெரீசா மே ஜூன் 7ம் தேதி தலைவர் பதவியில் இருந்து தெரீசா மே விலகுவார். அதற்கு அடுத்த வாரம் புதிய தலைவர் தேர்தல் தொடங்கும்.

பிற கட்சிகளின் ஆதரவையும் ஈர்க்கும் விதமான சமீபத்திய அவரது பிரெக்ஸிட் ஒப்பந்த திட்டத்திற்கு எதிராக, தனது நாடாளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பையும் தெரீசா மே எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

"இந்த அரசின் அணுகுமுறை, பிரெக்ஸிட் மக்கள் கருத்தறியும் வக்கெடுப்பின் முடிவை இனிமேலும் வழங்கும் என நம்ப போவதில்லை என்ற கூறி பிரதிநிதிகள் அவையின் தலைவர் அன்ரியா லீட்சன் கடந்த புதன்கிழமை பதவி விலகினார்.

வியாழக்கிழமை டவுணிங் ஸ்டீட்-இல் உள்துறை அமைச்ச சஜிட் ஜாவிட் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜெர்மி ஹண்டை சந்தித்த தெரீசா மே, இந்த மசோதா பற்றி புரிந்து கொண்டுதான் அவர்களின் கருத்துகளை தெரிவித்தார்களா என கேட்டு தெரிந்து கொண்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை வழங்கிய அறிவிப்பில், "பிரெஸிட்டை கொண்டுவர தனக்கு அடுத்து பிரதமராக வருபவர், நாடாளுமன்றத்தில் ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டியிருக்கும்" என்று தெரீசா மே தெரிவித்துள்ளார்.

"எல்லா தரப்பு வாதங்களும் சமரசம் செய்ய தயாராக இருந்தால் மட்டுமே இத்தகைய ஒருமித்த கருத்து உருவாகும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தோடு தான் பேச்சுவார்த்தை நடத்திய பிரெக்ஸிட் ஒப்பந்தத்திற்கு ஆதரவு வழங்குவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை சம்மதிக்க செய்வதற்கு தன்னால் இயன்றதை செய்துள்ளதாக தெரீசா மே கூறியுள்ளார்.

இப்போது நாட்டின் நலன்களுக்காக புதிய பிரதமர் இதனை வழிநடத்தி செல்ல வேண்டும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

இந்த அறிவிப்புக்கு பின்னர், கன்சர்வெட்டிவ் கட்சியை சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரீசா மேயை புகழ்ந்து கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :