ஜப்பான் தாக்குதல்: பள்ளி மாணவி உட்பட மூன்று பேர் பலி - நடந்தது என்ன?

கோப்புப் படம் - ஜப்பான் படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப் படம்

ஜப்பான் டோக்கியோ அருகே பேருந்துக்காக காத்திருந்த பள்ளி மாணவர்களை ஒருவர் கத்தியால் குத்தியதில் மாணவி உட்பட மூன்று பேர் பலி ஆயினர்.

டோக்கியோவுக்கு தெற்கே உள்ள நகரமான கவாசகியில் இந்த தாக்குதல் நடந்தது.

காரணம் என்ன?

இந்தத் தாக்குதலில் 18 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில், பள்ளி மாணவி மற்றும் 39 வயதுடைய ஒருவர் உட்பட இரண்டு பேர் பலி ஆனார்கள்.

ஐம்பது வயது மதிக்கத்தக்க அந்த நபர், மாணவர்களை தாக்கிவிட்டு பின் தன் கழுத்தை அறுத்து கொண்டார்.

அவரை போலீஸார் கைது செய்தனர். பின்னர், அவரும் இறந்துவிட்டார்.

இந்த தாக்குதலுக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 16 பேரும் பள்ளி மாணவிகள் என்கிறது கியோடோ செய்தி தளம்.

சம்பவ இடத்திலிருந்து இரு கத்திகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள்

உள்ளூர் நேரப்படி காலை 7.44 மணிக்கு குழந்தைகள் கத்தியால் குத்தப்பட்டதாக தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததென ஏ.எஃப்.பி செய்தி முகைமையிடம் பேசிய கவாசகி தீயணைப்புத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கிறார்.

பேருந்துக்காக காத்திருந்த மாணவர்களை நோக்கி அந்த நபர் கத்தியுடன் வந்ததை தாம் பார்த்ததாக கூறுகிறார் அந்த பேருந்து ஒட்டுநர்.

படத்தின் காப்புரிமை Getty Images

சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர், "பேருந்து பக்கத்தில் ஒரு நபர் ரத்தம் வழிய அமர்ந்திருந்தார்" என்கிறார்.

சுற்றுப் பயணமாக ஜப்பான் சென்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்த சம்பவத்திற்கு அனுதாபம் தெரிவித்துள்ளார்.

அவர்கள் இல்லாமல் போகட்டும்

2016ம் ஆண்டு மனநல காப்பகத்தில், கத்தியை கொண்டு அதன் முன்னாள் ஊழியர் தாக்கியதில் 19 பேர் மனநோயாளிகள் இறந்தனர்.

மனநலம் குன்றியவர்களை இல்லாமல் செய்வதற்காகவே நாம் இவ்வாறாக செய்த்ததாக அவர் கூறினார்.

2001ம் ஆண்டு தொடக்கப்பள்ளியில் நடந்த இவ்வாறான சம்பவத்தில் 8 மாணவர்கள் இறந்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்