பாகிஸ்தான் தெய்வ நிந்தனை வழக்கு: இந்து கால்நடை மருத்துவர் மீது குற்றச்சாட்டு, கடைகளுக்கு தீ வைப்பு

பாகிஸ்தான் தெய்வ நிந்தனை வழக்கு: கால்நடை மருத்துவர் மீது குற்றச்சாட்டு, கடைகளுக்கு தீ வைப்பு படத்தின் காப்புரிமை EPA

பாகிஸ்தானில் இந்து மதத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் ஒருவர் மீது தெய்வ நிந்தனை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இஸ்லாமிய மத வாசகங்கள் உள்ள காகிதத்தில் சுற்றி மருந்துகளை விற்றார் என்பதே அந்த மருத்துவர் மீதான குற்றச்சாட்டு.

தென் கிழக்கு பகுதியின் சிந்து மாகாணத்தில் உள்ள மிர்பூர் காஸ் பகுதியில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இச்சம்பவத்தை தொடர்ந்து அந்தப் பகுதியில் கலவரம் வெடித்தது. இந்துகளின் கடைகளுக்கு தீ வைக்கப்பட்டன.

தவறுதலாக நடந்த விஷயம்

கால்நடை மருத்துவர் இது தவறுதலாக நடந்த விஷயம் என்று கூறுகிறார்.

இஸ்லாமிய கல்வி பள்ளியின் பாடநூலிலிருந்து கிழிக்கப்பட்ட காகிதங்கள் அவை.

அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்படும்.

இஸ்லாமிய மதத்தை பழிப்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குகிறது பாகிஸ்தான் தெய்வ நிந்தனை சட்டம்.

இந்த சட்டம் சிறுபான்மையினருக்கு எதிராக தவறுதலாக பயன்படுத்தப்படுவதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

என்ன நடந்தது?

நோயுற்ற கால்நடைக்காக மருந்து வாங்க வந்த ஒருவருக்கு மருந்துகளை ஒரு காகிதத்தில் சுற்றி தந்திதிருக்கிறார். மருந்துகளை வாங்கியவர் அந்த காகிதத்தில் இஸ்லாமிய மதம் தொடர்பான எழுத்துகள் இருப்பதை பார்த்திருக்கிறார். இதனை உள்ளூர் குமாஸ்தாவிடம் தெரிவித்தார் அந்த நபர். அவர் உடனே காவல்துறையிடம் புகார் அளித்திருக்கிறார்.

அந்த மருத்துவர் வேண்டுமென்றே இதை செய்ததாக ஜாமியத் உலாமா இ இஸ்லாமி அமைப்பின் உள்ளூர் தலைவர் மெளலானா ஹஃபீஸ் உர் ரெஹ்மான் கூறுகிறார்.

தவறுதலாக செய்துவிட்டேன் என்று அந்த மருத்துவர் கூறுவதாக போலீஸ் தெரிவிக்கிறது.

தீ வைப்பு

இதனை தொடர்ந்து அந்த மருத்துவரின் மருத்துவமனை, மருந்தகம் மற்றும் இரண்டு கடைகளுக்கு தீ வைக்கப்பட்டதாக உள்ளூர் பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர்.

தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென போலீஸ் அதிகர் ஜாவித் இக்பால் காவல்துறையிடம் தெரிவிக்கிறார்.

மேலும் அவர், "இந்த நபர்களுக்கு இஸ்லாம் மீதும் அன்பு இல்லை, சக மனிதர்கள் மீதும் அன்பு இல்லை" என்று கூறுகிறார்.

சில மாதங்களுக்கு முன் தெய்வ நிந்தனை செய்த வழக்கொன்றில் கிறிஸ்தவ பெண்ணான ஆசியா பீபியை விடுதலை செய்து பாகிஸ்தான் உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்தது

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :