புதின் - ஷி ஜின் பிங் சந்திப்பு: சீனா - ரஷ்யா இடையே கையெழுத்தாகும் வணிக, ராணுவ ஒப்பந்தங்கள்

புதின் என் நெருங்கிய நண்பர்: சீன அதிபர் ஷி ஜின்பிங் படத்தின் காப்புரிமை Getty Images

வணிக உறவுகள் தொடர்பாக விவாதிக்க மூன்று நாள் சுற்றுப் பயணமாக ரஷ்யா சென்றுள்ள சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை தன் நெருங்கிய நண்பர் என்று விவரித்தார்.

சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வணிகப் போர் நடக்கும் சூழலில் ஷி ஜின்பிங் இந்த சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

உக்ரைன் விவகாரத்தில் மேற்குலக நாடுகளுடனான உறவு மோசமடைந்ததை அடுத்து, ரஷ்யா கடந்த சில ஆண்டுகளாக கிழக்கத்திய நாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

பாண்டா கரடி

இந்த பயணத்தின் போது மாஸ்கோ வனவிலங்கு பூங்காவில் இரண்டு பாண்டா கரடிகளை காட்சிப்படுத்துவதை தொடக்கிவைத்தார் ஷி ஜின்பிங்.

படத்தின் காப்புரிமை Getty Images

உள்ளூர் நேரப்படி புதன்கிழமை வந்த ஷி ஜின்பிங், பின்னர் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், தமக்கும் விளாடிமிர் புதினுக்கும் நெருங்கிய நட்பு இருப்பதாக கூறினார்.

ஜின்பிங், "கடந்த ஆறு ஆண்டுகளில், நாங்கள் இருவரும் 30க்கும் மேற்பட்ட முறை சந்தித்துள்ளோம். நான் அதிகமாக பயணம் செய்த நாடு ரஷ்யா. புதின் என் நெருங்கிய நண்பர் மற்றும் சக அதிபர்" என்றார்.

தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய புதின், "இரு நாட்டு உறவுகளும் எதிர்பார்க்காத அளவுக்கு புதிய பரிமாணத்தை எட்டி உள்ளன" என்று தெரிவித்தார்.

இரு நாடுகள் நெருக்கமானது எப்படி?

ஐரோப்பா, குறிப்பாக அமெரிக்காவால் தாங்கள் ஒதுக்கப்படுகிறோம் என சீனாவும், ரஷ்யாவும் கருதிய பின் இருநாட்டு உறவுகள் நெருக்கமாகின.

ஐந்தாண்டுகளுக்கு முன் உக்ரைன் விவாகாரத்தின் காரணமாக மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக திரும்பின. அதன் மீது பொருளாதார தடைகளையும் விதித்தன. இதனை தொடர்ந்தே இருநாட்டு உறவில் விரிசல் உண்டாகியது.

படத்தின் காப்புரிமை Getty Images

2015ம் ஆண்டு சிரியாவின் அசாத் அரசை ஆதரித்ததற்காகவும் ரஷ்யா விமர்சனத்திற்குள்ளாகியது.

அதுபோல, டிரம்ப் அரசு பொறுப்பேற்றதிலிருந்து சீனா அமெரிக்கா உறவு சுமூகமாக இல்லை.

இப்போது இரு நாடுகள் இடையே வணிக யுத்தமும் நடந்து வருகிறது. இருநாடுகளும் மாறி மாறி இறக்குமதி வரி விதித்துவருகின்றன.

மேற்குலகத்தால் புறக்கணிக்கப்படுகிறோம் என்ற உணர்வு இரு நாட்டு உறவை பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் இன்னும் நெருக்கமாக்கியது என்கிறார்கள் வல்லுநர்கள்.

இரு நாடுகள் இடையேயான வணிகம், 2018ம் ஆண்டு 25 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது.

சீனா - ரஷ்யா நட்பு சில தகவல்கள்

  • ரஷ்யாவின் முதன்மையான வணிக கூட்டாளி சீனா.
  • சீனாவின் பத்தாவது மிகப்பெரிய வணிக கூட்டாளி ரஷ்யா.
  • ரஷ்யாவின் வெளிநாட்டு ஏற்றுமதி சீனவுக்குதான் செல்கிறது. அவற்றில் பெரும்பாலானவை தாது பொருட்கள்.
  • இயந்திரங்கள், நுகர்வோர் பொருட்கள் ஆகியவற்றை ரஷ்யாவுக்கு சீனா ஏற்றுமதி செய்கிறது.
  • ரஷ்யாவில் சீனா 140 மில்லியன் டாலர்களை 2017ம் ஆண்டு முதலீடு செய்தது.
  • ரஷ்யாவின் லேக் பைகால் பகுதியில் சீன நிறுவனங்கள் அதிகளவில் முதலீடு செய்துள்ளன. அந்நிறுவனங்கள் சூழலியல் மாசை ஏற்படுத்துவதாக கூறி ரஷ்ய மக்கள் போராடினர்.
  • அதிகளவில் முதலீடு செய்து பொருளாதார ரீதியாக தங்களை சீனா கட்டுபடுத்துமோ என்ற அச்சமும் ரஷ்ய மக்களிடையே உள்ளது.

என்னென்ன ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன?

இருநாட்டு ராணுவ மற்றும் பொருளாதார உறவுகளை எதிர்காலத்தில் இன்னும் நெருக்கமாக்க இரு நாடுகளும் உறுதி பூண்டுள்ளன.

படத்தின் காப்புரிமை Getty Images

ஹுவாவே நிறுவனம் ரஷ்யாவின் எம்டிஎஸ் நிறுவனத்திற்கு 5 ஜி சேவையை மேம்படுத்தி தரும் ஒப்பந்தமும் இந்த சுற்றுப்பயணத்தில் கையெழுத்தாகியது.

ஹுவாவே நிறுவனம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறு அமெரிக்கா அதனை தடை செய்தது.

இந்த தடை உத்தரவின் காரணமாக ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிலும் ஹுவாவே சிக்கலை சந்திக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்