கூகுள், ஃபேஸ்புக்: "உலகின் நிதித்துறைக்கு இடையூறு" மற்றும் பிற செய்திகள்

"பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களால் உலகின் நிதித்துறைக்கு இடையூறு" படத்தின் காப்புரிமை Getty Images

மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் உலகின் நிதி செயல்பாட்டு அமைப்பு முறைக்கு கணிசமான இடையூறுகளை ஏற்படுத்தக்கூடும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் எச்சரித்துள்ளார்.

பெரும் தரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஆகியவற்றை ஒருங்கே பயன்படுத்தும் வல்லமை மிகுந்த சில நிறுவனங்கள், ஒட்டுமொத்த நிதி உலகின் பரிமாற்றங்களை தனது கட்டுக்குள் வைத்திருக்கும் நிலை ஏற்படக் கூடும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டியன் லகார்டே கூறுகிறார்.

ஜி20 நாடுகளின் நிதியமைச்சர்கள் கலந்துகொள்ளும் கூட்டம் ஜப்பானில் நடைபெற்று வரும் நிலையில் இந்த எச்சரிக்கையை அவர் வெளியிட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை EPA
Image caption கிறிஸ்டியன் லகார்டே

கூகுள் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட உலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் நிதி சார்ந்த சந்தையில் நுழைவதை கட்டுப்படுத்தும் வகையில் சட்டத்திட்டங்களை மாற்றியமைப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமையகம் அமைந்துள்ள இடத்தில் வரிவிதிப்பதை மட்டும் தவிர்த்து, அந்த குறிப்பிட்ட நிறுவனம் எங்கெல்லாம் வருவாய் ஈட்டுகிறதோ அங்கெல்லாம் வரி விதிப்பது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டு வருகிறது.

இலங்கை தேசிய புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி பதவி விலகல்

படத்தின் காப்புரிமை SISIRA MENDIS / FACEBOOK

தேசிய புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி சிசிர மெண்டீஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

சிசிர மெண்டீஸ் தனது ராஜினாமா கடிதத்தை தன்னிடம் கையளித்ததாக பாதுகாப்பு செயலாளர் ஷாந்த கோட்டேகொட தெரிவித்துள்ளார்.

உடல்நல குறைவு என்ற காரணத்தை முன்னிலைப்படுத்தி சிசிர மெண்டீஸ் ராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெற்றிடமாகியுள்ள புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி பதவிக்கு, விரைவில் ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக ஷாந்த கோட்டேகொட குறிப்பிட்டார்.

விரிவாக படிக்க:இலங்கை தேசிய புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி பதவி விலகல்: சிறிசேனா காரணமா?

சர்வதேச விண்வெளி நிலையத்தை சுற்றுலாவுக்கு அனுமதிக்கும் நாசா

படத்தின் காப்புரிமை NASA

2020ம் ஆண்டு தொடங்கி சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுற்றுலா பயணிகளை நாசா அனுமதிக்கவுள்ளது. இந்த விண்வெளி நிலையத்தில் ஒரு நாள் தங்குவதற்கு ஆகும் செலவு 35,000 டாலராகும் (27,500 யூரோ).

விண்வெளியில் சுற்றிக்கொண்டிருக்கும் இந்த நிலையத்தை சுற்றுலா பயணிகளுக்கும், பிற வணிக முயற்சிகளுக்கும் அனுமதிக்கப் போவதாக அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா நேற்று (வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் இரண்டு குறுகிய கால விண்வெளி சுற்றுலா பயணங்கள் அனுமதிக்கப்படும் என்று சர்வதேச விண்வெளி நிலையத்தின் துணை இயக்குநர் ராபின் கேடன்ஸ் கூறியுள்ளார்.

அமெரிக்க விண்வெளி ஓடத்தில் பயணித்து 30 நாட்கள் வரை தனியார் விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்குவதற்கு அனுமதிக்கப்படுவர் என்று நாசா கூறியுள்ளது.

விரிவாக படிக்க:சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஓர் இரவு தங்குவதற்கு 35,000 டாலர் - நாசா திட்டம்

பாம்புக்கடியால் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு

படத்தின் காப்புரிமை AFP

உலகளவில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாம்பு கடிக்கு பலியாகும் நிலையில், பாம்பு கடிக்கு குறைந்த செலவில் தரமான விஷமுறிவு மருந்துகளை தயார் செய்யும் ஆய்வில் இந்திய ஆராய்ச்சியாளர்கள் பங்குகொள்வது தெரியவந்துள்ளது.

உலக நாடுகளில் ஓராண்டில் பாம்பு கடிக்கு பலியாகுவோரின் எண்ணிக்கை 81,000 முதல் 1,38,000 வரை உள்ளது என்று கூறும் உலக சுகாதார நிறுவனம், பாம்பு கடியால் சுமார் நான்கு லட்சம் பேர் நிரந்தரமாக மாற்றுத்திறனாளியாகும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்றும் கண்டறிந்துள்ளது.

இந்தியா, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய பகுதிகளில்தான் பாம்பு கடி இறப்புகள் அதிகம் என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அதிலும் பாம்பு கடிக்கு பலியாகும் 1.30 லட்சத்தில் சுமார் 50,000 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விரிவாக படிக்க: பாம்புக்கடியால் ஆண்டுக்கு ஒரு லட்சம் மரணங்கள்: விஷமுறிவு மருந்துகளின் தரத்தில் சந்தேகம்

இந்திய அணியின் பயிற்சியைத் தடுத்த மழை

மிகவும் பரபரப்பாக இருக்கும் ஓவல் சுரங்க ரயில் நிலையம் நேற்று (வெள்ளிக்கிழமை) மிகவும் மந்தமாக காணப்பட்டது. அன்று மாலை வரை லண்டனில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால், ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தன.

வழக்கமாக செய்தித்தாள்கள், சாக்லேட்கள் மற்றும் பிற ஸ்டேஷனரி பொருட்களை விற்கும் ரயில் நிலையத்திற்கு அருகில் இருந்த சிறிய கடைகள் மூட்ப்பட்டிருந்தன அல்லது பாதி திறந்திருந்தன.

இந்த ஓவல் சுரங்க ரயில் நிலையத்தில் இருந்து ஐந்து நிமிடங்கள் நடந்து சென்றால், சர்ரெ கவுண்டி கிரிக்கெட் அணியின் சொந்த மைதானமான ஓவல் கிரிக்கெட் மைதானத்தை அடையலாம்.

லண்டனில் அமைந்துள்ள மிகவும் பாரம்பரியம் மிக்க கிரிக்கெட் மைதானதங்களில் ஒன்றான ஓவல், ஜாசன் ரோ, சாம் குரான் மற்றும் மார்க் பௌச்சர் உள்பட பல கிரிக்கெட் வீரர்களின் சொந்த மைதானமாகும்.

விரிவாக படிக்க:லண்டனில் "ரெயின், ரெயின் கோ அவே" பாடும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்