முகமத் மோர்சி: நீதிமன்ற விசாரணையின் போது உயிரிழந்த முன்னாள் எகிப்து அதிபர் மோர்சி

மூர்சி படத்தின் காப்புரிமை Getty Images

ராணுவத்தால் 2013ஆம் ஆண்டு பதவியிலிருந்து நீக்கப்பட்ட எகிப்தின் முன்னாள் அதிபர் முகமத் மோர்சி நீதிமன்றத்தில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அவர் மீது சுமத்தப்பட்டுள்ள உளவு பார்த்த குற்றச்சாட்டின் வழக்கு விசாரணையின் போது அவர் மயங்கி விழுந்து இறந்துள்ளார். அவருக்கு வயது 67.

அவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன

தற்போது தடைசெய்யப்பட்டுள்ள இஸ்லாமியவாத இயக்கமான முஸ்லிம் பிரதர்ஹுட்டின் தலைவராக இருந்த மோர்சி உளவுப் பார்த்த குற்றச்சாட்டுக்கான குற்றத்தில் விசாரணை கூண்டிலிருந்து பேசிக் கொண்டிருந்தார்.

`தி முஸ்லிம் பிரதர்ஹுட்` இயக்கம் இது ஒரு "கொலை" என தெரிவித்துள்ளது.

செயற்பாட்டாளர்கள் மற்றும் மூர்சியின் குடும்பத்தினர், மோர்சிக்கு இருந்த தீவிர உடல்நல பிரச்சனைகளான உயர் ரத்த அழுத்தம், சக்கரை நோய் ஆகியவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும், தொடர்ந்து தனிமை சிறையில் வைக்கப்பட்டிருந்தார் என்றும் தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்