பருவநிலை மாற்றம்: விமான பயணத்திற்கு எதிரான இயக்கம் - ‘பறத்தல் அவமானம்’

Airplane leaving trails in the sky படத்தின் காப்புரிமை Getty Images

விமானத்தில் பயணிப்பது இங்கு பலருக்கு அறம் சார்ந்த ஒரு விஷயமாக மாறிவிட்டது. அதற்கு காரணம் பருவநிலை மாற்றம். இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமானால் விமானங்கள் வெளிப்படுத்தும் பசுமைக்குடில் வாயு.

சுவீடன் மக்கள் வாழ்வில் இது பெரும் தாக்கம் செலுத்தி இருக்கிறது.

சுவீடன் மக்கள் பெருமளவில் விமானத்தில் பயணிப்பதை தவிர்த்து வருகிறார்கள்.

விமானத்தில் பயணிப்பதற்கு எதிரான இயக்கம் அந்நாட்டில் வளர்ந்து வருகிறது. 'பறப்பது அவமானம்' என்ற கோஷத்துடன் இந்த இயக்கத்தை முன்னெடுத்து வருகிறார்கள்.

பருவநிலை மாற்றமானது சுவீடன் மக்கள் நடத்தையில் வியத்தகு அளவில் தாக்கம் செலுத்தி இருப்பதாக கூறுகிறார் சுவீடனை சேர்ந்த உளவியலாளர் ஃப்ரிடா ஐலேண்டர்.

இந்த 'பறத்தல் அவமானம்' அமைப்பானது சுவீடன் மக்களை மாற்று போக்குவரத்தை தேர்ந்தெடுக்க பிரசாரம் செய்கிறது.

இதன் காரணமாக ரயிலில் பயணிப்பது பெருமை மிகு செயலாக மாறி இருக்கிறது.

விமானத்தில் பறப்பவர்களும் வெளியே சொல்ல வெட்கப்பட்டு, அதனை மறைக்கிறார்கள்.

சூழலியல் மீதான தாக்கம்

ரயிலில் பயணம் செய்யும் ஒரு நபர் ஒரு கிலோமீட்டருக்கு 14 கிராம் கரியமில வாயுவை உண்டாக்குகிறார். அதே நேரம், விமானத்தில் பறக்கும் நபர் ஒரு கிலோமீட்டருக்கு 285 கிராம் கரியமில் வாயுவௌ உண்டாக்குகிறார் என்கிறது ஐரோப்பிய சூழலியல் முகமை.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ரயிலில் பயணம் செய்யும் சுவீடன் மக்கள்

ரயிலில் 150 பேர் வரை பயணிக்கலாம், விமானத்தில் 88 பேர் பயணிக்கலாம் என்ற அடிப்படையில் இது கணக்கிடப்பட்டுள்ளது.

பறத்தல் வேண்டாம்

பறத்தல் வேண்டாம் இயக்கத்தை முதலில் முன்னெடுத்தவர் ஜோன் ஃபெரி. இவர் குளிர்கால ஒலிம்பிக்கின் முன்னாள் சேம்பியன்.

அவர் விமானத்தை பறப்பதை தவிர்த்து ரயில் பயணத்தை தேர்ந்தெடுத்து போட்டிக்கு சென்றதன் மூலம் பிரபலமானார்.

இதனை பிரபலப்படுத்தியவர் சுவீடன் பாடகி மலினா ஏன்மேன்.

இனி தாம் விமானத்தில் பயணிக்கப்போவதில்லை என்பதை அவர் வெளிப்படையாக அறிவித்தார்.

இது தம் பணியில் தாக்கம் செலுத்தினாலும் பரவாயில்லை, மாற்று போக்குவரத்தையையே தாம் தேர்ந்தெடுக்கப்பட போவதாக கூறினார்.

பலர் இந்த இயக்கத்தில் இணைந்தாலும், பறப்பது அவமானம் என்ற அமைப்பு பிரபலமானது செயற்பாட்டாளர் க்ரேடா தன்பெர்க் என்ற இளம் சூழலியல் செயற்பாட்டாளரால்தான்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஐரோப்பாவில் தமது சூழலியல் செயல்பாடுகள் மூலமாக பிரபலமானார். சுவிட்ஸர்லாந்தில் நடந்த உலக வர்த்தக அமைப்பு கூட்டத்திலும் அவர் கலந்து கொண்டார்.

அவர் தமது அனைத்து பயணங்களையும் ரயிலிலேயே மேற்கொள்கிறார்.

இத்தனை பேர் இவர் போல இருக்கிறார்கள். விமானத்தை தவிர்த்து மாற்று போக்குவரத்தை தேர்ந்தெடுக்கிறார்கள் என தெரியவில்லை. ஆனால், Tagsemester (சுவீடனில் விடுமுறை நாட்கள் ரயிலில்) எனும் ஃபேஸ்புக் பக்கத்தில் 90,000 ஆயிரம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.

இதுபோல கருத்து கொண்ட ஓர் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 60 ஆயிரம் பேர் பின் தொடர்கிறார்கள். விமானத்தில் பயணிப்பவர்களை கிண்டல் செய்து இதில் பதிவுகள் இடப்படுகின்றன.

#jagstannarpåmarken (தரையில் இருங்கள்), அதாவது தரைவழி போக்குவரத்தை தேர்ந்தெடுங்கள் என்ற ஹாஷ்டாகுடம்ன் சுவீடன் சமூக ஊடக பக்கத்தில் பதிவுகள் பகிரப்படுகின்றன.

விமானத்தில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ள இந்த காலக்கட்டத்தில், ரயிலில் பயணம் செல்பவர்களின் எண்ணிக்கை 1.5 மில்லியன் அளவுக்கு முந்தைய காலத்தைவிட அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் வெப்பகாற்று சுவீடனை தாக்கியது. இது பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வையும், விவாதத்தையும் ஏற்படுத்தியது. இதனை அடுத்தே விமானத்தில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்ததாக போக்குவரத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

விமானத்துறை என்ன கூறுகிறது?

பறத்தல் அவமானம் அமைப்பின் நோக்கமும், செயல்பாடுகளும் விமானத் துறைக்கு நிச்சயம் கவலை தரும்.

இது தொடர்பாக இந்த மாதம் தொடக்கத்தில் தென் கொரியாவில் நடைபெற்ற சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டிருக்கிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

இதற்கான சரியான பதிலை நாம் அளிக்காவிட்டால், இந்த உணர்வாது மேலும் பரவும் என சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் தலைவர் அலெக்ஸாண்டர் டெ ஜுனியாக் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

இந்த புவியின் மொத்த கரியமில வாயு வெளியேற்றத்தில் விமானங்களின் பங்கு மட்டும் 2.5 சதவீதம்.

விமானத்துறை வளர்ச்சி அடைந்து வருவதால் இந்த கரியமில் வாயு வெளியேற்ற சதவீதமும் அதிகரிக்கலாம்.

கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்க தாங்கள் பல திட்டங்களை செயல்படுத்தி வருவதாக கூறுகிறது விமானத் துறௌ.

மாசு ஏற்படுத்துபவர்கள் என எங்களை அழைப்பதை நிறுத்துங்கள் என்கிறார் சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் தலைவர் அலெக்ஸாண்டர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்