வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னிற்கு டிரம்ப் எழுதிய ’அழகிய’ கடிதம்

கிம் படத்தின் காப்புரிமை AFP

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.

அந்த கடிதம் ’மிகச்சிறந்த` ஒன்று என்றும், அதில் உள்ள ‘சுவாரஸ்யமான விஷயங்கள் குறித்து யோசிக்கவுள்ளதாகவும்’ கிம் தெரிவித்துள்ளார் என கெசிஎன்ஏ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

மேலும் டிரம்பின் ’அசாத்திய தைரியத்தையும்’ அவர் பாராட்டியுள்ளார்.

இந்த மாதத்தின் தொடக்கத்தில், அழகிய கடிதம் ஒன்று வட கொரிய அதிபர் கிம் ஜான் உன்னிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்திருந்தார்.

எப்போது அல்லது எவ்வாறு டிரம்பின் அந்தக் கடிதம் கிம் ஜான் உன்னிற்கு வழங்கப்பட்டது என்று தெரிவிக்கப்படவில்லை.

இதுகுறித்து வெள்ளை மாளிகை எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை.

பிப்ரவரி மாதம் வியட்நாமில் டிரம்ப் மற்றும் கிம்மிற்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை பாதியில் முடிந்தது.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த கடிதம், அந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு இருநாட்டு உறவில் ஏற்பட்டுள்ள ஒரு முக்கியமான சுமூக நிலையாக பார்க்கப்படுகிறது என சோலில் உள்ள பிபிசி செய்தியாளார் லாரா பிக்கர் தெரிவிக்கிறார்.

வட கொரியா தனது அணுஆயுத திட்டங்களை கைவிட வேண்டும் என அமெரிக்கா தெரிவித்தது. ஆனால் தங்கள் நாட்டின் மீதான தடைகளை நீக்க வேண்டும் என வட கொரியா தெரிவித்தது.

இந்த மாதத்தின் தொடக்கத்தில், கிம்மின் தலைமையில் வடகொரியாவுக்கு ’மிகப்பெரிய ஆற்றல்’ கிடைத்துள்ளது என செய்தியாளர்களிடம் டிரம்ப் தெரிவித்தார்.

மே மாதம் தனது ஜப்பான் பயணத்தின் போது கிம் "ஒரு புத்திசாலியான நபர்" என தெரிவித்தார் டிரம்ப்.

மேலும் வட கொரியாவிடமிருந்து "பல நல்ல காரியங்களை" எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :