அமெரிக்கா: இ-சிகரெட்டால் பிரச்சனை இல்லையென்று யார் சொன்னது? மற்றம் பிற செய்திகள்

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சித்தரிப்புக்காக

இ-சிகரெட்டால் பிரச்சனை

இ- சிகரெட் உடல் நலத்தில் என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெளிவாக தெரியும் வரை அதன் விற்பனையை தடை செய்வதாக அமெரிக்காவில் முதல் முதலாக சான் ஃபிரான்சிஸ்கோ மாகாணம் உத்தரவிட்டுள்ளது. கடைகளில் விற்பனையை தடை செய்ததோடு மட்டுமில்லாமல், இணையத்தில் விற்பனை செய்வதும் சட்ட விரோதமென அறிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை BOSTON GLOBE VIA GETTY IMAGES

பிரபல இ-சிகரெட் நிறுவனமான ஜூல் லேப்ஸின் தலைமையகம் கலிஃபோர்னியாவில்தான் அமைந்துள்ளது. புகைப்பழக்கத்தை விட்டவர்கள் மீண்டும் இந்த தடையால் புகை பிடிப்பார்கள் அதுமட்டுமல்லாமல் கள்ள சந்தைக்கும் வழிவகுக்குமென ஜூல் லேப்ஸ் நிறுவனம் கூறி உள்ளது.

"130 கோடி இந்தியர்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பாக வெற்றியை பார்க்கிறேன்"

படத்தின் காப்புரிமை HINDUSTAN TIMES

"பல தசாப்தங்களுக்கு பிறகு, தனிப் பெரும்பான்மையுடன் இரண்டாவது முறையாக இந்த அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்திய மக்கள் நாட்டின் முன்னேற்றத்திற்காக வாக்களித்துள்ளனர்" என்று நாடாளுமன்றத்தில் பேசியபோது பிரதமர் நரேந்திர மோதி குறிப்பிட்டார்.நாடாளுமன்றத்தில் குடியரசுத்தலைவரின் உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் நரேந்திர மோதி நேற்று உரையாற்றினார்."நான் தேர்தல்களை வெற்றி, தோல்வி என்ற பார்வையில் பார்ப்பதில்லை. 130 கோடி இந்தியர்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பாக இதனை பார்க்கிறேன். ஒவ்வொரு குடிமகனின் வாழ்வின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவதில் எனக்கு மகிழ்ச்சி" என்று அவர் தெரிவித்தார்.

விரிவாகப் படிக்க:

முத்தையா சகாதேவன் உயிரிழப்பு - இலங்கை அரசே காரணம் என குற்றச்சாட்டு

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து, 10 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான பிரச்சனை இன்றும் தொடர்ந்து கொண்டே வருகிறது.தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகள் சிறைச்சாலைகளில் இன்று சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.

விரிவாகப் படிக்க:சர்ச்சையை ஏற்படுத்திய தமிழ் கைதியின் உயிரிழப்பு - இலங்கை அரசு மீது குற்றச்சாட்டு

லெய்லா -நெட்ஃபிலிக்ஸ் தொடர் விமர்சனம்

படத்தின் காப்புரிமை Netflix

பத்திரிகையாளரான பிரயாக் அக்பர் எழுதி 2017ல் வெளியான லெய்லா நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட நெட்ஃப்ளிக்ஸ் தொடர்தான் இந்த லெய்லா. மும்பையின் காஸ்மோபாலிடன் வாழ்க்கைக்கு மாறாக அங்குள்ள சில அரசியல் கட்சிகள் முன்வைத்த பிரிவினைவாத, தூய்மைவாத கொள்கைகள் நடைமுறைக்கு வந்தால் எப்படியிருக்கும் என்ற கற்பனையை முன்வைத்து அந்த நாவலை எழுதியிருந்தார் அக்பர். ஆனால், அதே சூழல் இந்தியா முழுவதும் ஏற்பட்டால் எப்படியிருக்கும் என்ற கற்பனையை முன்வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது இந்தத் தொடர்.

விரிவாகப் படிக்க:லெய்லா -நெட்ஃபிலிக்ஸ் தொடர் விமர்சனம்

இரான் தலைவர் அயத்துல்லா அலி கமேனி சொத்துகளை முடக்கியது அமெரிக்கா

படத்தின் காப்புரிமை Getty Images

இரான் மீது விதிக்கப்படவிருந்த பொருளாதாரத் தடை, இரான் நாட்டின் தலைவர் அயத்துல்லா அலி கமேனி மீதும் சேர்த்து விதிக்கப்படுகிறது என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.இந்த தடை முடிவு அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை சுட்டுவீழ்த்தியது மற்றும் பல விஷயங்களுக்கு பதில் கொடுக்கும் விதமாக எடுக்கப்பட்டது என ட்ரம்ப் கூறியுள்ளார்.

விரிவாகப் படிக்க:இரான் தலைவர் அயத்துல்லா அலி கமேனி சொத்துகளை முடக்கியது அமெரிக்கா

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்