“இந்தியா முதல் ஜப்பான் வரை” - கடந்த வார நடப்புகளை விளக்கும் புகைப்படங்கள்

கடந்த வாரம் (23.06.2019 - 30.06.2019) உலகம் முழுவதும் நிகழ்ந்த முக்கியமான நிகழ்வுகளை புகைப்படங்களின் மூலம் விளக்குகிறது இந்த தொகுப்பு.

படத்தின் காப்புரிமை RANITA ROY / REUTERS
Image caption மேற்குவங்க மாநிலத்தில், இரண்டடி இடைவெளி கொண்ட தண்டவாளத்தில் ஓடும் 'டார்ஜிலிங் இமாலயன் ரயில்வே' எனும் இந்த நீராவி ரயில் மிகவும் புகழ்பெற்றது. யுனெஸ்கோவின் பாரம்பரிய அங்கீகாரம் பெற்ற 88 கிலோமீட்டர் தொலைவுள்ள இந்த சேவை 1879 முதல் இயங்கி வருகிறது. தற்போது சுற்றுலாவுக்காக மட்டுமே இயக்கப்படும் இந்த ரயில், ஒரு காலத்தில் மலைப்பகுதிகளிலிருந்து தேயிலை எடுத்து வருவதற்கு பயன்பட்டது.
படத்தின் காப்புரிமை BORIS HORVAT / AFP
Image caption வெப்பநிலை பதிவுசெய்யப்பட தொடங்கியதிலிருந்து இதுவரையான காலத்தில் முதல் முறையாக அதிகபட்ச வெப்பநிலை (45.8C) பிரான்சில் பதிவானது. ஐரோப்பா முழுவதும் வெப்ப அலைகளின் தாக்கம் அதிகமான உள்ள நிலையில், பிரான்சின் ஏக்ஸ்-ஆன் ப்ரொவன்ஸ் நகரில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நிழற்குடையில் ஓய்வெடுக்கிறார் முதியவர் ஒருவர்.

விரிவாகப் படிக்க:இந்தியாவில் மட்டுமல்ல ஐரோப்பாவிலும் அளவுக்கு அதிகமான வெப்பம்

படத்தின் காப்புரிமை STEFAN ROUSSEAU / PA
Image caption ஜப்பானின் ஒசாகா நகரில் நடைபெற்று வரும் ஜி-20 கூட்டமைப்பின் உச்சிமாநாட்டின்போது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் கைகுலுக்குகிறார் பிரிட்டன் பிரதமர் தெரீசா மே. இந்த சந்திப்பின்போது ரஷ்யா தனது "பொறுப்பற்ற மற்றும் ஸ்திரமற்ற நிலைமையை உருவாக்கும் செயல்பாட்டை" கண்டிப்பாக நிறுத்திக்கொள்ள வேண்டுமென்று தெரீசா மே வலியுறுத்தினார்.
படத்தின் காப்புரிமை KEVIN LAMARQUE / REUTERS
Image caption ஜப்பானின் ஒசாகாவில் நடைபெற்ற ஜி-20 கூட்டமைப்பு நாடுகளின் உச்சிமாநாட்டிற்கு வருகிறார் ஜெர்மனியின் சான்சலர் ஏங்கலா மெர்கல். எட்டு நாட்கள் இடைவெளியில் அரசு நிகழ்ச்சிகளின் போது, இரண்டாவது முறை மெர்கலின் உடல் நடுங்குவது போன்ற காணொளி, அவரது உடல்நிலை குறித்த அச்சத்தை ஏற்படுத்திய நிலையில் அவர் இம்மாநாட்டில் பங்கேற்றார்.
படத்தின் காப்புரிமை MASSIMO PINCA / REUTERS
Image caption கிட்டத்தட்ட ஓராண்டிற்கு முன்பு, இத்தாலியிலுள்ள மொராண்டி எனும் இந்த மேம்பாலம் சரிந்ததில் 43 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், அந்த பாலத்தின் எஞ்சிய பகுதிகள் இடித்து தரைமாக்கப்பட்டது.
படத்தின் காப்புரிமை SPENCER PLATT / GETTY IMAGES
Image caption அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திலுள்ள 'ஸ்டோன்வால் இன்' எனும் இந்த ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான உல்லாச விடுதியில், 1969ஆம் ஆண்டு அந்நாட்டு காவல்துறையினர் பரிசோதனை மேற்கொண்டனர். அதைத்தொடர்ந்து நடந்த போராட்டங்களே, நவீன காலத்தில், அமெரிக்காவிலுள்ள ஓரினச்சேர்க்கையாளர்கள் முன்னெடுத்த மிகப் பெரிய போராட்டங்களின் தொடக்க புள்ளியாக அமைந்தது. இந்நிலையில், அந்நிகழ்வின் 50ஆவது ஆண்டு விழா சென்ற வாரம் கொண்டாடப்பட்டது.
படத்தின் காப்புரிமை PHILIPPE WOJAZER / REUTERS
Image caption பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 2024ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. அதற்காக, பூங்காவாக மாற்றப்பட்டுள்ள கட்டடம் ஒன்றின் அருகே சைக்கிள் வீரர் ஒருவர் சாகசம் செய்தபோது எடுத்த படம்.
படத்தின் காப்புரிமை THILO SCHMUELGEN / REUTERS
Image caption 2050ஆம் ஆண்டுக்குள் கார்பன் வெளியேற்றம் முழுமையாக நிறுத்தப்படும் என்று ஜெர்மனி அறிவித்திருக்கிறது. ஆனால், பருவநிலை மாற்றம் வேகமாக நிகழ்ந்து வரும் சூழலில், இது மிக நீண்ட காலக்கெடு என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அந்நாட்டிலுள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றை முற்றுகையிட்டு ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர்.
படத்தின் காப்புரிமை G20 HANDOUT/EPA
Image caption ஜப்பானின் ஒசாகா நகரில் நடைபெற்ற ஜி-20 கூட்டமைப்பின் உச்சிமாநாட்டில் பங்கேற்ற தலைவர்களின் துணைவர்கள் ஒன்றாக கூடி புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
படத்தின் காப்புரிமை BRENDAN SMIALOWSKI
Image caption வட மற்றும் தென் கொரியாவின் எல்லையில் இருக்கும் ராணுவம் விலக்கப்பட்ட பகுதியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வடகொரிய அதிபர் கிம்மை சந்தித்துள்ளார். ராணுவம் விலக்கப்பட்ட இந்த பகுதியில் நடைபெறும் சந்திப்புக்கு, ட்விட்டரில் திடீரென கிம்மை சந்திக்க டிரம்ப் அழைப்பு விடுத்தமையே காரணம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்