புகைப்பழக்கம்: கடந்த 39 ஆண்டுகளில் கடற்கரைகளிலிருந்து எடுக்கப்பட்ட சிகரெட் பஞ்சுகள் மற்றும் பிற செய்திகள்

படத்தின் காப்புரிமை KAREN MASON

'புகைப்பதைப் பகைப்போம்'

அமெரிக்கா ப்ளோரிடா கடற்கரையில், ப்ளாக் ஸ்கிம்மர் பறவை தனது குஞ்சுக்கு சிகரெட் பட்ஸ் ஊட்டும் புகைப்படம் உலகளவில் வைரலாகி வருகிறது. காட்டுயிர் புகைப்பட கலைஞர் கரென் மேசன் எடுத்த புகைப்படத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அவர், "நீங்கள் புகைக்கிறீர்கள் என்றால், பட்ஸை கீழேபோட்டுவிட்டு செல்லாதீர்கள்" என்றும் வலியுறுத்தி இருக்கிறார்.

படத்தின் காப்புரிமை KAREN MASON

கடந்த 39 ஆண்டுகளில் கடற்கரைகளிலிருந்து மட்டும் 60 மில்லியன் சிகரெட் பட்ஸ்கள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறுகிறது ஓர் ஆய்வு. சிகரெட் பஞ்சுகளை உணவென்று தவறாக பறவைகள் எண்ணி தனது குஞ்சுகளுக்கு அளிக்கின்றன.

இந்தியா v வங்கதேசம் என்ன நடந்தது?

படத்தின் காப்புரிமை Getty Images

இந்தியாவின் நடுவரிசை வீரர்கள் சிறப்பாக செயல்படாததால் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 314 ரன்கள் மட்டுமே எடுத்தது. தோனி 33 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். தினேஷ் கார்த்திக் எட்டு ரன்களில் ஆட்டமிழந்தார்.

வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மான் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார்.வங்கதேச அணி சேஸிங் செய்யும்போது ஷகிப் மற்றும் சைஃபுத்தீன் மட்டும் அரை சதமடித்தனர். மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆட வில்லை.

விரிவாகப் படிக்க:வங்கதேசத்தை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றது இந்தியா

இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: பாதுகாப்பு முன்னாள் செயலாளர், போலீஸ் மாஅதிபர் கைது

படத்தின் காப்புரிமை PMDNEWS.LK

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் அனுப்பி வைக்கப்பட்டிருந்த போலீஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணைகளின் பின்னர் இருவரும் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவிக்கின்றார்.குறித்த இருவரும் விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று காலை 10 மணிக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

விரிவாகப் படிக்க:இலங்கை தாக்குதல்: பாதுகாப்பு முன்னாள் செயலாளர், போலீஸ் மாஅதிபர் கைது

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு: விசாரணைக்கு ஆவணமாக பிபிசி தமிழ் காட்சிகள் ஏற்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூடு தொடர்பான பிபிசி தமிழ் நேரலை காட்சிகள் மற்றும் செய்தி தொகுப்புகள் விசாரணைக்குத் தேவையான ஆவணமாக பயன்படும் என தமிழக அரசின் விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.

2018ல் மே 22 அன்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி நூறாவது நாள் போராட்டத்தை பொது மக்கள் நடத்தியபோது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகில் கூடிய மக்களை கலைக்க கண்ணீர் புகைக்குண்டு வீசப்பட்டு, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

விரிவாகப் படிக்க:ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு: விசாரணைக்கு ஆவணமாக பிபிசி தமிழ் காட்சிகள் ஏற்பு

'போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையால் என் உயிருக்கு அச்சுறுத்தல்'

படத்தின் காப்புரிமை Getty Images

போதைப்பொருளை ஒழிக்கும் நடவடிக்கை காரணமாக தனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார்.

பொலன்னறுவையில் இன்று, செவ்வாய்க்கிழமை, இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

தனக்கு உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுகின்றமை தொடர்பில் புலனாய்வு பிரிவினர் தனக்கு அறிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

விரிவாகப் படிக்க:'போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையால் என் உயிருக்கு அச்சுறுத்தல்'

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :