ஒபாமாவை காயப்படுத்த வேண்டும் என்பதற்காக டிரம்ப் செய்த காரியம் மற்றும் பிற செய்திகள்

படத்தின் காப்புரிமை Getty Images

'ராஜரீக காலித்தனம்'

அமெரிக்காவுக்கான முன்னாள் பிரிட்டன் தூதர் சர் கிம் டாரக் எழுதிய குறிப்பு கசிந்துள்ளது. அதில், அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவை காயப்படுத்த வேண்டும் என்பதற்காகதான் இரான் அணு ஒப்பந்தத்தை டிரம்ப் ரத்து செய்தார் என குறிப்பிட்டுள்ளார்.

இதனை சர் கிம் டாரக், 'ராஜரீக காலித்தனம்' என விவரித்துள்ளார்.

இந்தக் குறிப்பானது 2018ம் ஆண்டு எழுதப்பட்டுள்ளது. அதாவது, அப்போதைய பிரிட்டன் வெளியுறவுச் செயலாளர் போரீஸ் ஜான்சன் இரான் அணு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டாமென வேண்டி இருந்தார்.

அந்த சமயத்தில் சர் கிம் டாரக் இந்தக் குறிப்பை எழுதி இருக்கிறார்.

'பி.எஸ்.என்.எல் வீழ்ச்சிக்கு யார் காரணம்?'

படத்தின் காப்புரிமை NURPHOTO/GETTY IMAGES

பி.எஸ்.என்.எல். (பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்) நிறுவனத்தின் அப்போதைய நிர்வாக இயக்குநர் அனுபம் ஸ்ரீவத்ஸவா மிகவும் வேதனையில் இருந்தார்.

தன்னுடைய 1.7 லட்சம் பணியாளர்களுக்கு ஊதியம் தருவதற்கு நிதி திரட்ட முடியாமல் பி.எஸ்.என்.எல். திண்டாடியது. ``நிறுவனத்துக்குள்ளும், வெளியிலும் உள்ள சவால்கள்'' காரணமாக, பி.எஸ்.என்.எல். கடுமையான நிதித் தட்டுப்பாட்டில் சிக்கியுள்ளது.

பல லட்சம் கோடி ரூபாய் கடன் அளவு அதிகரித்துக் கொண்டே போவதால் வங்கிகள் விதித்த நிபந்தனைகளும் இதற்குக் காரணம்.பிப்ரவரி மாதத்தில் ஊழியர்களுக்கு ஊதியம் தருவதற்கு 15 நாட்கள் தாமதம் ஏற்பட்ட நிகழ்வு தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தது.

விரிவாகப் படிக்க:மூழ்கும் நிலையில் பி.எஸ்.என்.எல் - வீழ்ச்சிக்கு யார் காரணம்?

'பாலுறவு வாழ்க்கை'

படத்தின் காப்புரிமை Getty Images

பாலுணர்வை, செயல் ஆற்றலை அல்லது பாலுறவு மகிழ்ச்சியை அதிகரிக்கக் கூடிய ஓர் உணவு உள்ளது என்பதற்கான ஆதாரம் இருந்தால், அது நல்ல விற்பனையாகும்.சமச்சீரான உணவு, சுறுசுறுப்பான வாழ்க்கை முறை மற்றும் நல்ல மன ஆரோக்கியம் ஆகிய அனைத்துமே உங்களுடைய பாலுறவு வாழ்க்கையை மேம்படுத்தும்.

ஆனால் இயற்கையாக பாலுணர்வைத் தூண்டக் கூடிய தனிப்பட்ட உணவுகள் ஏதும் இருக்கின்றனவா?

விரிவாகப் படிக்க:நீங்கள் சாப்பிடும் உணவு உங்கள் பாலுறவு வாழ்க்கையை மேம்படுத்துமா?

"காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் உறவுகள் எங்கே?"

இலங்கை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் மக்களின் உறவினர்கள், மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பாக நீதி கிடைப்பதற்கு, சர்வதேச நாடுகள் தலையிட வேண்டும் என்கிற கோரிக்கையினை போராட்டக்காரர்கள் அப்போது முன்வைத்தனர்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுடைய அமைப்பின் பிரதிநிதிகள், இந்தக் கவன ஈர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

விரிவாகப் படிக்க:“காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் உறவுகள் எங்கே?” - இலங்கையில் மீண்டும் போராட்டம்

'இராக்கில் பாலியல் வன்கொடுமைகளால் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்களா?'

பிபிசியின் Arab world பிரிவு இராக்கில் நடத்திய ஒரு ஆய்வில், எதிர்பாராத ஒரு முடிவு கிடைத்தது - அங்கு பெண்களைவிட அதிக எண்ணிக்கையிலான ஆண்களே வார்த்தைகள் அளவிலும், உடலியல் ரீதியாகவும் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள் என தெரிய வந்துள்ளது. இது உண்மைதானா?

மனித உரிமைகள் கண்காணிப்பகம் அமைப்பு இராக்கில் ஆண் ஓரின சேர்க்கையாளர்கள் மற்றும் திருநங்கையர்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி அறிந்துள்ளது.

ஆனால் இவை பல சமயங்களில் காவல் துறையினரிடம் புகாராக வருவதில்லை.

விரிவாகப் படிக்க:இராக்கில் பாலியல் வன்கொடுமைகளால் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்களா?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :