துருக்கி ராஜீய அதிகாரி இராக்கில் சுட்டுக் கொலை

துருக்கி ராஜீய அதிகாரி இராக்கில் சுட்டுக் கொலை படத்தின் காப்புரிமை Reuters

துருக்கி நாட்டு ராஜீய அதிகாரி ஒருவர் இராக் நாட்டின் எப்ரில் நகரில் ஓர் உணவகத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார் என்று பாதுகாப்புத் துறை தகவல்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளன.

இந்த நகரம் இராக்கின் குர்திஷ் பிராந்தியத்தில் அமைந்துள்ளது.

இராக்குக்கான துருக்கி நாட்டின் துணை உதவித் தூதர் இறந்தார் என்று சொல்லப்படுகிறது. அவர் வேறு இரண்டு ராஜீய அதிகாரிகளுடன் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.

சுட்டபின் துப்பாக்கிதாரிகள் தப்பிவிட்டனர். குர்திஷ் பாதுகாப்புப் படையினர் சுற்றுவட்டாரப் பகுதியை முற்றிலும் முற்றுகையிட்டுள்ளனர்.

இதுவரை இந்த தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்