மெக்சிகோ கடத்தல் மன்னன்: அமெரிக்க போலீஸுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த சாப்போவுக்கு ஆயுள் சிறை மற்றும் பிற செய்திகள்

படத்தின் காப்புரிமை EPA

கடத்தல் மன்னன்

அமெரிக்க போலீஸூக்கு சிம்ம சொப்பனமாக இருந்த மெக்சிகோவை சேர்ந்த கடத்தல் மன்னன் குவாக்கினோ சாப்போவுக்கு ஆயுள் மற்றும் முப்பது ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது அமெரிக்க நீதிமன்றம். 2015ம் ஆண்டு மெக்சிகோ சிறையிலிருந்து தப்பிய இவர் பின்னர் மீண்டும் கைது செய்யப்பட்டார். 2017ம் ஆண்டு அமெரிக்காவுக்கு விசாரணைக்காக அனுப்பப்பட்டார்.

தன் மீதான விசாரணை முறையாக நடைபெறவில்லை என நீதிமன்றத்தில் இவர் வாதிட்டார்.

படத்தின் காப்புரிமை Getty Images

மெக்சிகோ நாட்டில் தனியாக ஒரு போதை மருந்து சாம்ராஜியமே இவர் நடத்தி வந்தார். 2009ம் ஆண்டு உலக பணக்காரர்கள் வரிசையில் இவர் 701ம் இடத்தில் இருந்தார். இவருடைய அப்போதைய சொத்து மதிப்பு ஒரு பில்லியன் டாலர்கள்.

‘குல்பூஷன் ஜாதவ் மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்யவேண்டும்’

படத்தின் காப்புரிமை Getty Images

இந்திய உளவாளி என்ற குற்றச்சாட்டின் பேரில் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டு மரண தண்டனையை விதிக்கப்பட்ட குல்பூஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை சீராய்வுக்கும், மறுபரிசீலனைக்கும் உட்படுத்தவேண்டும் என்று ஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. விசாரணை செய்த அமர்வில் 15 பேர் மறுபரிசீலனை செய்வதற்கு ஆதரவாகவும், ஒருவர் எதிராகவும் தீர்ப்பளித்தனர்.

விரிவாகப் படிக்க:"குல்பூஷன் மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்யவேண்டும்": சர்வதேச நீதிமன்றம்

திருப்பதியில் இனி விஐபி தரிசனம் இல்லை - ஏன்?

படத்தின் காப்புரிமை APCM / FACEBOOK

திருப்பதி வெங்கடேச பெருமாள் கோயிலில் வி.ஐ.பி. தரிசன முறையை ரத்து செய்வதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் புதன்கிழமையன்று அறிவித்துள்ளது. திருமலையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், திருமலை திருப்பதி தேவஸ்தானத் தலைவர் சுப்பா ரெட்டி இதனைத் தெரிவித்தார். அவருடன் நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால், சிறப்பு அதிகாரி ஏ.வி.தர்மா ரெட்டி ஆகியோர் உடனிருந்தார்.

விரிவாகப் படிக்க:திருப்பதியில் இனி விஐபி தரிசனம் இல்லை - ஏன்?

'நீட் மசோதா திருப்பி அனுப்பப்பட்டதன் காரணம் எங்களுக்கு தெரியாது'

படத்தின் காப்புரிமை INSTANTS

நீட் தேர்விலிருந்து விலக்குக் கோரும் தமிழக அரசின் மசோதா குடியரசுத் தலைவரால் திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், இந்த விவகாரம் குறித்த சரியான விவரங்களை வெளியிடாதது ஏன் என தி.மு.க. கேள்வியெழுப்பியிருக்கிறது. இந்த மசோதா என்ன காரணத்தால் நிராகரிக்கப்பட்டது என்பது இன்னும் தெரிவிக்கப்படவில்லையென முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருக்கிறார்.

விரிவாகப் படிக்க:’நீட் மசோதா திருப்பி அனுப்பப்பட்டதன் காரணம் எங்களுக்கு தெரியாது’ - தமிழக அரசு

FaceApp: உங்கள் அந்தரங்க தரவுகள் திருடப்படுகின்றனவா?

மீண்டும் பிரபலமாகி இருக்கிறது ஃபேஸ் ஆப் செயலி.பல பத்தாண்டுகளுக்குப் பிறகு நான் இப்படி இருப்பேன், என் முக அமைப்பு இவ்வாறாக இருக்குமென பலர் மிக உற்சாகமாக ஃபேஸ்ஆப் செயலி மூலம் மாற்றி அமைக்கப்பட்ட தங்கள் புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் முழுவதும் அப்படி பகிரப்பட்ட படங்கள் நிரம்பி வழிகின்றன.

விரிவாகப் படிக்க:உங்கள் அந்தரங்க தகவல்கள் திருடப்படுகின்றனவா? சர்ச்சையில் FaceApp செயலி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :