“இது எங்களின் புனித நிலம், உங்கள் விஞ்ஞானம் இங்கே வேண்டாம்” - ஹவாய் பூர்வகுடி மக்கள் மற்றம் பிற செய்திகள்

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption 1902 ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஹவாய் மக்கள் புகைப்படம்

'தொலைநோக்கி வேண்டாம்'

ஹவாயில் உள்ள மலை ஒன்றில் மிகப்பெரிய தொலைநோக்கி அமைக்கும் திட்டத்திற்கி எதிராக பூர்வகுடி ஹவாய் மக்கள் போராடி வருகின்றனர். அந்த மவுனா கியா மலை தாங்கள் புனிதமாக கருதும் இடம் என்று கூறும் பூர்வகுடிகள், அந்த மலையில் இவ்வாறான திட்டங்களை செயல்படுத்துவது சூழலியல் சீர்கேடுக்கு வழிவகுக்கும் என்று கூறுகிறார்கள்.

முப்பது மீட்டர் தொலைநோக்கி அமைக்கும் திட்டத்தின் மொத்த மதிப்பீடு 1.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள். உலகின் பெரிய தொலைநோக்கிகளில் ஒன்றாக இந்த தொலைநோக்கி இருக்கும்.

அத்திவரதர் தரிசனத்துக்கு சென்ற பக்தர் கூட்டத்தில் நெரிசல்

காஞ்சிபுரத்தில் அத்திவரதரை காண குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் பலியாயினர். மேலும், மயக்கமடைந்த 100க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு தற்காலிக முகாம்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதரின் சிலை கோயில் குளத்திலிருந்து வெளியில் எடுக்கப்பட்டு பொதுமக்கள் தரிசனத்துக்காக வைக்கப்படும்.

விரிவாகப் படிக்க: காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க சென்ற பக்தர் கூட்டத்தில் நெரிசல்; 4 பேர் பலி

கால்பந்து பெண்கள் உலகக் கோப்பை வென்ற அமெரிக்க அணித் தலைவருக்கு உள்நாட்டில் அவமதிப்பு ஏன்?

படத்தின் காப்புரிமை AL BELLO.GETTY IMAGES

"இந்த பெண்கள் கரடுமுரடானவர்கள், மென்மையற்றவர்கள். இவர்களால் எந்தவொரு நிலைமையையும் தைரியமாக எதிர்கொள்ள முடியும். அவர்கள் வலிமையானவர்கள். சுதந்திரமாக சிரிக்க விரும்பும் இவர்களை யாரும் தடுத்துவிட முடியாது. சுருக்கமாக, எங்களது குழு மிகவும் சிறந்த ஒன்று." அமெரிக்க பெண்கள் கால்பந்து அணியின் தலைவர் மேகன் ரெப்பினோவின் சொற்கள் இவை. இதே மேகன்தான், இந்த கால்பந்து போட்டி தொடங்குவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னால், என்னதான் ஆனாலும், வெள்ளை மாளிகையில் நுழையப் போவதில்லை என்று தெரிவித்திருந்தார்.

விரிவாகப் படிக்க: வருந்த விரும்பாத சாம்பியன் பெண்களுக்கு, அமெரிக்காவில் அவமதிப்பு ஏன்?

"கார்கில் ஆக்கிரமிப்பு பற்றி செய்தியாளர் மூலம் தெரிந்துகொண்ட பாதுகாப்பு அமைச்சர்"

படத்தின் காப்புரிமை Getty Images

20 ஆண்டுகளுக்கு முன்னர் கார்கில் மலையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நடந்தது. கார்கில் மலையின் உச்சிக்கு பாகிஸ்தான் வீரர்கள் ஊடுருவிச் சென்றிருந்ததே இதன் தொடக்கம் ஆகும்.1999, மே 8ம் தேதி பாகிஸ்தான் நாட்டின் நார்த்தென் லைட் படையின் கேப்டன் இஃப்தேகார் மற்றும் ராணுவத்தை சேர்ந்த அப்துல் ஹகிம் 12 வீரர்களுடன் கார்கிலின் ஆசாம் செளகி என்ற இடத்தில் முகாமிட்டிருந்தனர். அங்கே இந்திய கால்நடை மேய்ப்பர்கள் சிலர் தங்கள் கால்நடைகளை மேய்த்துக்கொண்டிருந்தனர்.

விரிவாகப் படிக்க: "கார்கில் ஆக்கிரமிப்பு பற்றி செய்தியாளர் மூலம் தெரிந்துகொண்ட பாதுகாப்பு அமைச்சர்"

லாஸ்லியா: பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த இலங்கை பெண்

படத்தின் காப்புரிமை BIGBOSS VIJAY TV

சில நாட்களாக சமூக வலைதளத்தில் பேசு பொருளாக இருப்பது விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் நிகழ்ச்சி. பரபரப்புக்கு சிறிதும் பஞ்சமில்லாமல் போகும் அந்த நிகழ்ச்சியில் ரசிகர்களின் ஆதரவை அதிகம் பெற்றவர்கள் பட்டியலில் முதலில் இருக்கிறார் இலங்கையை சேர்ந்த லாஸ்லியா. லாஸ்லியா என்று இவரை தமிழக ரசிகர்கள் அழைத்து வந்தாலும், இவரது பெயர் லொஸ்லியா மரியநேசன்.

விரிவாகப் படிக்க: ரசிகர்களின் `மைனம்மா`: யார் இந்த லாஸ்லியா?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :