ஹிட்லர்: ‘வலதுசாரி தீவிரவாதத்தை முறியடிக்க உறுதியேற்போம்’ - ஏங்கெலா மெர்கல் மற்றும் பிற செய்திகள்

படத்தின் காப்புரிமை Getty Images

'வலதுசாரி தீவிரவாதத்தை முறியடிப்போம்'

ஹிட்லரை கொல்ல திட்டமிடப்பட்ட முயற்சிகளில் மிகவும் பிரபலமான திட்டத்தின் 75வது ஆண்டு இது. இந்த ஆண்டில் வலதுசாரி பயங்கரவாதத்தை முறையடிக்க உறுதி ஏற்போமென ஜெர்மன் சான்சிலர் ஏங்கெலா மெர்கல் அழைப்பு விடுத்துள்ளார். நாசி சர்வாதிகாரியான ஹிட்லரை கொல்ல 1944ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டது. இதற்கு காரணகர்த்தாவாக இருந்த கிராப் ஃபோன் ஸ்டவ்ஃபென்பெர்க் மற்றும் அதில் ஈடுப்பட்ட பிறருக்கும் நன்றி தெரிவித்தார் ஏங்கெலா மெர்கல்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த முயற்சி தோல்வி அடைந்ததை அடுத்து கிராப் ஃபோன் ஸ்டவ்ஃபென்பெர்க் மற்றும் 200 பேர் ஹிட்லர் அரசால் கொல்லப்பட்டனர்.

ஷீலா தீட்ஷித் காலமானார்

படத்தின் காப்புரிமை CITIZEN DELHI: MY TIMES, MY LIFE

டெல்லியின் முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஷீலா தீட்ஷித் சனிக்கிழமை மாலை காலமானார். அவருக்கு வயது 81. பஞ்சாப் மாநிலத்தில் 1938ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி பிறந்த ஷீலா தீட்ஷித் காங்கிரஸ் கட்சியில் இணைந்து, 1984ல் உத்தர பிரதேச மாநிலத்தில் போட்டியிட்டு மக்களவைக்கு தேர்வானார்.

விரிவாகப் படிக்க:காங்கிரஸ் மூத்த தலைவர் ஷீலா தீட்ஷித் காலமானார்

சட்டவிரோதமாக கைப்பற்றிய எண்ணெய் கப்பலை விடுவிக்க பிரிட்டன் கோரிக்கை

படத்தின் காப்புரிமை ERWIN WILLEMSE

இரான் சட்டவிரோதமாக தடுத்து வைத்துள்ள பிரிட்டன் கொடி தாங்கிய எண்ணெய் கப்பலை விடுவிக்க வேண்டும் என்று பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் ஜெரிமி ஹண்ட் வலியுறுத்தியுள்ளார்.இந்த சம்பவம், பிரிட்டனின் பாதுகாப்பு மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் சர்வதேச கப்பல் சரக்கு போக்குவரத்து தொடர்பாக கடினமான கேள்விகளை எழுப்புகிறது என்று அவர் கூறியுள்ளார்.

விரிவாகப் படிக்க:இரான் தடுத்து வைத்துள்ள எண்ணெய் கப்பலை விடுவிக்க பிரிட்டன் கோரிக்கை

அத்திவரதர்: பெருமாளை காண குவியும் லட்சக்கணக்கான பக்தர்கள்: காரணம் என்ன?

காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜப் பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை காட்சியளிக்கும் அத்தி மரத்தாலான வரதராஜப் பெருமாளின் திருவுருவத்தைக் காண தினமும் லட்சக் கணக்கான மக்கள் திரள்கிறார்கள். இந்தக் கடவுளை தரிசிக்க பெரும் எண்ணிக்கையில் மக்கள் குவிவது ஏன்? என்ன நடக்கிறது காஞ்சிபுரத்தில்?

விரிவாகப் படிக்க:அத்திவரதரை காண குவியும் லட்சக்கணக்கான பக்தர்கள்: காரணம் என்ன?

சௌதிக்கு படை அனுப்பும் அமெரிக்கா: இரானுக்கு பதிலடி

படத்தின் காப்புரிமை AFP

அதிகரித்து வரும் அச்சுறுத்தலில் இருந்து அமெரிக்காவின் நலன்களை பாதுகாத்து கொள்வதற்காக அமெரிக்க படைப்பிரிவுகள் சௌதி அரேபியாவுக்கு அனுப்பப்பட்டு வருவதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. வளைகுடா கப்பல் போக்குவரத்து பாதைகளில் பாதுகாப்பு தொடர்பாக இரானோடு அதிகரித்து வருகின்ற பதற்றங்களின் மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

விரிவாகப் படிக்க:சௌதிக்கு படை அனுப்பும் அமெரிக்கா: இரானுக்கு பதிலடி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :