ஷேர்கான்: கார்கில் போரில் இந்தியாவின் பரிந்துரையில் உயர் விருது பெற்ற பாகிஸ்தான் ராணுவ வீரர்

கேப்டன் கர்னல் ஷேர்கான் படத்தின் காப்புரிமை PAKKISTAN ARMY

எதிரி நாட்டு ராணுவ சிப்பாயின் துணிச்சலையும், வீரத்தையும் மதித்து, அதை எதிரி நாட்டிற்கு தெரிவிப்பதும், அதன் அடிப்படையில் விருது கொடுப்பதும் பொதுவாக யாருமே நினைத்துக்கூட பார்க்க முடியாத அரிய நிகழ்வு.

1999 ஆம் ஆண்டு கார்கில் போரில் இந்த அதிசயம் நடந்தது, டைகர் ஹில்லில், பாகிஸ்தான் ராணுவத்தின் கேப்டன் கர்னல் ஷேர்கான் மிகவும் தைரியமாக போராடினார். இந்திய ராணுவத்தினருக்கு அவர் கடும் சவாலாக விளங்கினார் என்கிறார்.

இந்த போரை நினைவுகூறும், கமாண்டர் பிரிகேடியர் எம்.எஸ். பாஜ்வா, "இந்த சண்டை முடிந்ததும், நான் காயமடைந்திருந்தேன். நான் 1971 போரிலும் கலந்து கொண்டிருக்கிறேன். ஆனால், ஒரு பாகிஸ்தான் அதிகாரி முன்னணியில் இருந்து தங்கள் படையை வழிநடத்துவதை நான் பார்த்ததேயில்லை. மற்றவர்கள் அனைவரும் குர்தா பைஜாமாக்களில் இருந்தபோது, இவர் மட்டுமே டிரக் சூட் அணிந்திருந்தார்."

படத்தின் காப்புரிமை MOHINDER BAJWA / FACEBOOK

தற்கொலை தாக்குதல்

கார்கில் போர் தொடர்பாக சமீபத்தில் 'கார்கில் அன்டோல்ட் ஸ்டோரீஸ் ஃபாரம் த வார்' என்ற புத்தகத்தை எழுதிய பிஷ்ட் ராவத், "கேப்டன் கர்னல் ஷேர்கான் வடக்கு லைட் காலாட்படையைச் சேர்ந்தவர்" என்று கூறுகிறார்.

"இந்தியாவின் டைகர் ஹில்லில் அவர்கள் ஐந்து இடங்களில் தங்கள் நிலைகளை அமைத்திருந்தனர், அவற்றைக் கைப்பற்றும் பணி, முதலில் 8 சீக்கிய படைப்பிரிவினருக்கு வழங்கப்பட்டிருந்தது, ஆனால் அவர்களால் அது முடியவில்லை. பின்னர், எறிகுண்டு வீசுவதில் பயிற்சி பெற்ற 18 பேர் அவர்களுடன் இணைக்கப்பட்டபோது, மிகுந்த முயற்சியுடன் அவர்கள் ஒரு நிலையை கைப்பற்றினார்கள். ஆனால் கேப்டன் ஷேர்கான் எதிர் தாக்குதல் நடத்தினார். "

அவர்களுக்கு தோல்வி ஏற்பட்ட பிறகு, மீண்டும் தனது வீரர்களை இணைத்துக்கொண்டு, தாக்குதல் நடத்தினார். இந்தப் 'போரை' பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு, இது 'தற்கொலை' தாக்குதல் என்றே தோன்றியது. வெற்றிபெற முடியாது என்பதை அவர்கள் அறிந்திருந்தனர், ஏனென்றால் இந்திய வீரர்களின் எண்ணிக்கை அவர்களை விட அதிகமாக இருந்தது.

படத்தின் காப்புரிமை PENGUIN

பாக்கெட்டில் குறிப்புச்சீட்டு

பிரிகேடியர் எம்.பி.எஸ். பாஜ்வா கூறுகிறார், "கேப்டன் ஷேர்கான் நல்ல உயரமானவர், மிகுந்த துணிச்சலுடன் போராடினார். இறுதியாக, காயமடைந்த இந்திய வீரர்களில் ஒருவரான கிருபால் சிங், திடீரென 10 அங்குல தொலைவில் இருந்து ஒரு 'குண்டு' எறிந்ததில், ஷேர்கான் வீழ்ந்தார்."

இதைப்பற்றி விரிவாக சொல்கிறார் பிரிகேடியர் பஜ்வா. "நாங்கள் 30 பாகிஸ்தானியர்களின் சடலங்களை அங்கே புதைத்தோம். ஆனால் நான் சிவிலியன் போர்ட்டர்களை அனுப்பி கேப்டன் கர்னல் ஷேர்கானின் உடலை கீழே கொண்டுவந்தேன். முதலில் ஷேர்கானின் சடலத்தை பிரிகேட் தலைமையகத்தில் வைத்திருந்தோம்."

அவரது உடலை திருப்பி அனுப்பும்போது, "12 என்.எல்.ஐ.யின் கேப்டன் கர்னல் ஷேர்கான் மிகவும் துணிச்சலானவர், அவருக்கு உரிய மரியதை வழங்கப்பட வேண்டும்" என்று எழுதப்பட்ட ஒரு சீட்டை அவரது சட்டைப் பையில் வைத்தார் பிரிகேடியர் பஜ்வா.

அதாவது, கேப்டன் ஷேர்கான் மிகவும் தைரியமாக போராடினார், அவருக்கு உரிய மரியாதை கொடுக்கப்படவேண்டும் என்பதே அதன் நோக்கம்.

பெயர் காரணமாக பல குழப்பங்கள்

கேப்டன் கர்னல் ஷேர்கான் வட மேற்கு எல்லைப்புற மாகாணத்தின் நவா கில்லா என்ற கிராமத்தில் பிறந்தார். 1948 காஷ்மீர் போராட்டத்தில் அவரது தாத்தா பங்கேற்றிருந்தார்.

அவருக்கு சீருடை அணிந்த வீரர்களை மிகவும் பிடிக்கும். எனவே தனக்கு பேரன் பிறந்தபோது, குழந்தைக்கு கர்னல் ஷேர்கான் என்று பெயரிட்டார்.

இந்த பெயரின் காரணமாக அவரது பேரக்குழந்தையின் வாழ்க்கையில் பல சிக்கல்கள் ஏற்படும் என்று அவருக்கு தெரியாது.

"விட்னஸ் டு ப்ளாண்டர் - கார்கில் ஸ்டோரி அன்ஃபோல்ட்ஸ்" என்ற பிரபல புத்தகத்தை எழுதிய கர்னல் அஷ்ஃபாக் உசேன் இதை சுட்டிக்காட்டுகிறார், "கர்னல் என்பது ஷேர்கானின் பெயரின் ஒரு பகுதியாக இருந்தது. அதை மிகவும் பெருமையுடன் பயன்படுத்தினார், பல முறை அது அவருக்கு சிக்கல்களை ஏற்படுத்தியது."

"தொலைபேசியை எடுத்து, 'லெப்டினன்ட் கர்னல் ஷேர்கான் பேசுகிறேன்' என்று அவர் சொன்னால், எதிர்முனையில் இருப்பவர்கள், ஒரு ராணுவ கர்னலுடன் பேசுவதாக நினைத்துக் கொண்டு, மரியாதையாக 'ஐயா' என்று அழைக்கத் தொடங்குவார். உடனே அவர் புன்னகையுடன், தான் லெப்டினன்ட் என்று சொல்வார். பிறகு, கமாண்டருடன் பேச வைக்கிறேன் என்று சொல்லி எதிர்தரப்பில் இருப்பவருக்கு திகைப்பை ஏற்படுத்துவார்."

படத்தின் காப்புரிமை PAKISTAN POST

யார் இந்த கர்னல் ஷேர்கான்?

கர்னல் ஷேர்கான் 1992 அக்டோபரில் பாகிஸ்தான் ராணுவ அகாடமியில் சேர்ந்தார். அவர் அங்கு சேர்ந்ததும், அவரது தாடியை வெட்ட வேண்டும் என்று கூறப்பட்டது. அதை அவர் மறுத்துவிட்டார்.

அவரது பயிற்சியின் முடிவில், உங்கள் செயல்திறன் நன்றாக இருக்கிறாது, எனவே தாடியை நீக்கி விட்டால், நல்ல பதவி கொடுக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் அதை மறுத்துவிட்டார். இருந்தாலும்கூட, அவருக்கு பட்டாலியன் கார்டர் மாஸ்டர் என்ற பதவி வழங்கப்பட்டது.

படத்தின் காப்புரிமை BOOKWISE INDIA PVT LTD

அவருக்கு ஓராண்டு ஜூனியரான கேப்டன் அலியுல் ஹஸ்னைன் இவ்வாறு கூறுகிறார், "பாகிஸ்தான் ராணுவ அகாடமியில் ஜூனியர்கள் சேரும்போது, சீனியர்கள், அவர்களை ராகிங் செய்யும்போது, கெட்ட வார்த்தைகளை சரளமாக பயன்படுத்துவார்கள். ஆனால் ஷேர்கானின் வாயிலிருந்து எந்த கெட்ட வார்த்தையும் வந்ததாக நான் கேள்விப்பட்டதில்லை, அவருடைய ஆங்கிலம் மிகவும் நன்றாக இருக்கும், நண்பர்களுடன் 'ஸ்கிராப்பிள்' விளையாடுவார், பெரும்பாலும் அவரே வெற்றி பெறுவார். அவர் தனக்கு கீழே பணியாற்றுவர்களுடன் மிகவும் எளிமையாக பழகுவார். அவர்களுடன் லுடோ விளையாடுவார். "

அதிகாரிகளின் கட்டளைக்கு ஏற்ப திரும்பினார்

1998 ஜனவரியில் அவர் டோமேல் பகுதியில் பணியமர்த்தப்பட்டார். குளிர்காலத்தில் இந்திய வீரர்கள் பின்வாங்கியபோது, அந்த இடத்தை கைப்பற்ற வேண்டும் என்று ஷேர்கானின் பிரிவு விரும்பியது.

இது தொடர்பாக தனது உயர் அதிகாரிகள் திட்டம் வகுத்துக் கொண்டிருந்தபோது, அந்த உச்சியை தாங்கள் அடைந்து விட்டதாக தகவல் அனுப்பினார் கேப்டன் ஷேர்கான்.

கர்னல் அஷ்ஃபாக் உசேன் தனது 'விட்னன்ஸ் டு ப்ளண்டர் - கார்கில் ஸ்டோரி அன்ஃபோல்ட்ஸ்' என்ற புத்தகத்தில் எழுதுகிறார்,

படத்தின் காப்புரிமை SHER KHAN / FACEBOOK
Image caption புகைப்படத்தின் வலது பக்கத்தில் இருப்பவர் கேப்டன் கர்னல் லையன்.

"கமாண்டிங் அதிகாரிக்கு குழப்பம் ஏற்பட்டது. அவர் தனது உயர் அதிகாரிகளுடன் பேசினார், அந்த இந்திய நிலையை தொடர்ந்து ஆக்கிரமிக்கலாமா என அனுமதி கேட்டார். ஆனால் அவர்களை திரும்பி வருமாறு மேலிடம் உத்தரவிட்டது. அதையடுத்து கேப்டன் ஷேர்கான் திரும்பி வந்தார், ஆனால் சில கையெறி குண்டுகள், இந்திய நிலையில் இருந்து இந்திய வீரர்களின் சில சீருடைகள், தோட்டாக்கள், மாத்திரைகள், இரவில் உறங்குவதற்கு பயன்படுத்தும் பைகள் என பலவற்றை நினைவு பரிசுகளாக எடுத்து வந்தார். "

டைகர் ஹில்லில் இறந்தார்

கேப்டன் ஷேர்கன் 1999 ஜூலை நான்காம் தேதியன்று டைகர் ஹில் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். பாகிஸ்தான் வீரர்கள் மூன்றடுக்கு பாதுகாப்பு கொண்ட மூன்று வலையத்தை உருவாக்கினார்கள்.

அவற்றுக்கு, 129 ஏ, பி மற்றும் சி என குறியீடு வழங்கப்பட்டது. அவற்றின் மற்ற பெயர்கள் கலீம், காஷிஃப் மற்றும் கலீம் போஸ்ட்.

படத்தின் காப்புரிமை SHER KHAN / FACEBOOK

129 ஏ மற்றும் பி ஆகியவற்றை இந்திய வீரர்கள் தனிமைப்படுத்தி விட்டனர். கேப்டன் ஷேர்சிங் மாலை ஆறு மணிக்கு அந்த இடத்திற்கு வந்தார். நிலைமையை ஆராய்ந்த பின்னர், மறுநாள் காலையில் இந்திய வீரர்களைத் தாக்க அவர் திட்டமிட்டார்.

கர்னல் அஷ்ஃபாக் உசேன் எழுதுகிறார், "அன்றைய இரவில், வீரர்களிடம் உரையாற்றிய ஷேர்சிங், தியாகத்தைப் பற்றி வீராவேசமாக உத்வேகமூட்டினார். அவர்கள் அனைவரும் காலை 5 மணிக்கு நமாஸ் படித்த பிறகு, தாக்குதலுக்கு புறப்பட்டனர். 129 பி பிரிவு தாக்குதல் நடத்தியபோது, அங்கு மேஜர் ஹாஷிமுடன்தான் ஷேர்கான் இருந்தார். இந்திய வீரர்கள் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தார்கள். "

ஆபத்தான சூழ்நிலையைத் தவிர்ப்பதற்காக, மேஜர் ஹாஷிம், தன் மீது, ஷெல் தாக்குதல் நடத்துமாறு, தனது சொந்த பீரங்கி இயக்குநர்களை கேட்டுக் கொண்டார். எதிரிப் படையினர் நெருங்கி வந்தால், அவர்களைத் தவிர்ப்பதற்காக படைகள் பெரும்பாலும் இத்தகைய உத்திகளை பின்பற்றுவது வழக்கம் தான்.

"எங்கள் படையினர் சுட்ட தோட்டாக்கள் அவரைச் சுற்றி நாலாப்புறமும் பறந்துக் கொண்டிருந்தது. பாகிஸ்தானியர்களும், இந்திய வீரர்களும் நேரிடையாக கைகளால் மோதிக் கொண்டனர். அப்போது ஓர் இந்திய சிப்பாயும், கேப்டன் ஷேர்கானும் தனது சகாக்களுடன் சேர்ந்து கீழே வீழ்ந்தனர்."

போரிட்டு வீழ்ந்த பாகிஸ்தான் வீரர்களின் சடலங்கள் இந்திய வீரர்களால் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டன. ஆனால் ஷேர்கானின் உடல் மட்டும் அங்கிருந்து கொண்டு செல்லப்ப்ட்டு முதலில் ஸ்ரீநகருக்கும், பின்னர் டெல்லிக்கும் கொண்டு செல்லப்பட்டது.

மரணத்திற்குப் பின் நிஷான்-ஏ-ஹைதர்

பிரிகேடியர் பஜ்வா விளக்குகிறார், "நான் அவரது உடலை கீழே அனுப்பவில்லை என்றாலோ, முயற்சியெடுத்து பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கவில்லை என்றாலோ, அவரும் நூற்றுக்கணக்கன வீரர்களில் ஒருவராக மாறியிருப்பார். அவரது பெயர் உலகத்திற்கு தெரிந்திருக்காது.

படத்தின் காப்புரிமை PTI

ஆனால், அவரது வீர தீரத்திற்காக, அவரின் உடலை பாகிஸ்தானுக்கு அனுப்பியதால் அவருக்கு மரணத்திற்குப் பின்பு வழங்கும் விருதான நிஷான்-ஏ-ஹைதர் விருது வழங்கப்பட்டது, இது பாகிஸ்தானின் மிகப் பெரிய வீர விருது. இந்தியாவின் பரம்வீர் சக்ர விருதுக்கு சம்மானது இந்த விருது."

சிறிது காலத்திற்கு பிறகு ஷேர்கானின் மூத்த சகோதரர் அஜ்மல் ஷேர் ஒரு கருத்தை வெளியிட்டார். அதில், "அல்லாவுக்கு நன்றி, எங்கள் எதிரி கோழையல்ல. இந்தியா கோழைத்தனமானது என்று நம் மக்கள் சொன்னால், அதை நான் மறுப்பேன். ஏனென்றால், கர்னல் ஷேர்கான் ஒரு ஹீரோ என்று அவர்கள் ஒப்புக் கொண்டார்கள், அதை நமக்கு தெரிவித்தார்கள்" என்று கூறியிருந்தார்.

இறுதிப் பிரியாவிடை

1999 ஜூலை 18, நள்ளிரவில், மலிர் கேரிசனின் நூற்றுக்கணக்கான வீரர்கள் கராச்சி சர்வதேச விமான நிலையத்திற்குக் வந்துவிட்டனர். கேப்டன் கர்னல் ஷேர்கானின் உடலைப் பெறுவதற்காகவே அவர்கள் அங்கு வந்திருந்தனர். அவரது பரம்பரை கிராமத்தில் இருந்த அவரது இரண்டு சகோதரர்களும் அங்கு வந்து சேர்ந்தனர்.

படத்தின் காப்புரிமை FACEBOOK
Image caption தனது நண்பர் ஒருவரோடு கேப்டன் கர்னல் ஷேர்கான்

கர்னல் அஷ்ஃபாக் உசேன் எழுதுகிறார், "விமானம் அதிகாலை 5 மணி ஒரு நிமிடத்திற்கு விமான ஓடுபாதையைத் தொட்டது, விமானத்தின் பின்புறத்திலிருந்து இரண்டு சவப்பெட்டிகள் இறக்கப்பட்டன. அதில் ஒன்றில் கேப்டன் ஷேர்கானின் உடல் இருந்தது. மற்றொரு சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த சடலம் அடையாளம் காணப்படவில்லை. "

அந்த சவப்பெட்டிகளை ஆம்புலன்சில் வைத்து ஆயிரக்கணக்கான வீரர்கள் மற்றும் பொதுமக்கள் இருந்த இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பலூச் ரெஜிமென்ட்டின் இளைஞர்கள் ஆம்புலன்சில் இருந்து சவப்பெட்டியைக் கொண்டு வந்து பொதுமக்களுக்கு முன்னர் வைத்தனர். ஒரு மதகுரு நமாஸ்-ஜனாஸாவைப் படித்தார்.

நமாஸுக்குப் பிறகு, சகேப்டன் கர்னல் ஷீர் கானின் கல்லறைவப்பெட்டிகள் பாகிஸ்தான் விமானப்படை விமானத்தில் மீண்டும் ஏற்றப்பட்டன.

கேப்டன் கர்னலின் பூதவுடல் தாங்கிய சவப்பெட்டிக்கு, கார்ப்ஸ் கமாண்டர் முஜாஃப்பர் உசேன் உஸ்மானி, சிந்து ஆளுநர் மாமூன் ஹுசைன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹலீம் சித்திகி ஆகியோர் தோள் கொடுத்தனர்.

படத்தின் காப்புரிமை SHER KHAN / FACEBOOK
Image caption கேப்டன் கர்னல் ஷீர் கான் கல்லறை

அங்கிருந்து கிளம்பிய விமானம் இஸ்லாமாபாத்தை அடைந்தது. அங்கு பாகிஸ்தான் அதிபர் ரபீக் தாரார் காத்துக் கொண்டிருந்தார். பிறகு அங்கும் நமாஸ் ஜனாசா வாசிக்கப்பட்டது.

அதன் பிறகு கேப்டன் ஷேர்கானின் உடல் அவரது மூதாதையர்களின் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த மாபெரும் வீரருக்கு ஆயிரக்கணக்கான மக்கள் இறுதி பிரியாவிடையை வழங்கினார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :