பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பொய் சொன்னாரா பிரிட்டிஷ் பெண்?

பாலியல் வன்கொடுமை படத்தின் காப்புரிமை Getty Images

சைப்ரஸ் நாட்டுக்கு சுற்றுலா சென்றிருந்தபோது, அங்கு சுற்றுலா வந்திருந்த 12 இஸ்ரேலிய நாட்டு இளைஞர்களால் தாம் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானதாக புகார் தெரிவித்த பிரிட்டன் பெண், போலியான புகார் தெரிவித்ததாக கைது செய்யப்பட்டுள்ளார் என்று செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

அயா நபா என்ற சுற்றுலா தலத்தில் உள்ள விடுதி ஒன்றில் தாம் பாலியல் தாக்குதலுக்கு உள்ளானதாக ஜூலை 17 அன்று அந்தப் பெண் காவல் துறையிடம் புகார் தெரிவித்திருந்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அயா நபா

இன்று, ஞாயிற்றுக்கிழமை, அந்த 19 வயதாகும் பெண் கைது செய்யப்பட்டார் என்று ராய்ட்டர்ஸ் மற்றும் ஏ.எஃப்.பி ஆகிய செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்ட அந்த இளைஞர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

15 முதல் 20 வயதுக்கு உள்பட்ட அவர்கள் அனைவரும் தங்கள் மீதான புகாரை மறுத்திருந்தனர்.

படத்தின் காப்புரிமை EPA

அந்தப் பெண்ணுக்குத் தேவையான உதவிகளை செய்து வருவதாக பிரிட்டன் வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிரிட்டன் வாசிகளின் விருப்பத்துக்குரிய சுற்றுலாப் பிரதேசமாக விளங்கும் சைப்ரஸ் நாட்டுக்கு 2018இல் 13 லட்சத்துக்கும் மேலானோர் சுற்றுலா சென்றுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்