குழந்தையுடன் நாடாளுமன்றத்துக்கு வந்த பெண் உறுப்பினர் வெளியேற்றம் மற்றும் பிற செய்திகள்

குழந்தையுடன் நாடாளுமன்றம் வந்த உறுப்பினர் வெளியேற்றம் படத்தின் காப்புரிமை KBC

தனது குழந்தையை நாடாளுமன்றத்துக்கு அழைத்து வந்ததற்கு மற்ற சில உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, கென்ய நாடாளுமன்றத்திலிருந்து பெண் உறுப்பினர் ஒருவர் வெளியேற்றப்பட்ட சம்பவம் நடந்தேறியுள்ளது.

தவிர்க்க முடியாத சூழ்நிலையின் காரணமாக தனது ஐந்து மாத கைக் குழந்தையை நாடாளுமன்றத்துக்கு அழைத்து வந்ததாக ஜூலைக்கா ஹசன் எனும் அந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

ஜூலைக்கா ஹசன் வெளியேற்றப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

கென்ய நாடாளுமன்றத்தின் விதிகளின்படி, அந்நியர்கள் அதன் கட்டடத்துக்குள் நுழைவதற்கு அனுமதி கிடையாது. அந்த அந்நியர் எனும் பட்டியலில் குழந்தைகளும் அடக்கம்.

ஜூலைக்கா ஹசன் தனது குழந்தையுடன் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்ததும் அவரது சக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கியதுடன், இவரது செயல் வெட்கக்கேடானது என்று விமர்சிக்க தொடங்கினர்.

அதையடுத்து பேசிய சபாநாயகர், ஹசன் தனது குழந்தையுடன் அவையை விட்டு வெளியேற உத்தரவிட்டார். எனினும், குழந்தையை விட்டுவிட்டு தனியே அவர் அவைக்கு திரும்பலாம் என்றும் தெரிவித்தார்.

"நாடாளுமன்ற வளாகத்தில் 'குழந்தை பராமரிப்பு மையம்' இருந்திருந்தால், எனது குழந்தையை அவைக்கு அழைத்து வந்திருக்க மாட்டேன். நாடாளுமன்றத்துக்கு அதிக பெண் உறுப்பினர்கள் வரவேண்டுமென்றால் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும்," என்று ஜூலைக்கா கூறினார்.

நாட்டிலுள்ள அனைத்து நிறுவனங்களும் பெண் ஊழியர்கள் தங்களது குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்கு சிறப்பு அறைகளை அமைக்க வேண்டுமென்று 2017ஆம் ஆண்டு சட்டம் நிறைவேற்றப்பட்ட கென்ய நாடாளுமன்றத்திலேயே இதுபோன்ற சம்பவம் நடந்தேறியுள்ளது.

தஞ்சாவூரில் பிறந்த தமிழர் காஷ்மீர் பிரதமரானது எப்படி?

படத்தின் காப்புரிமை GOVERNMENT OF INDIA
Image caption கோபாலசாமி

இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்பாக, காஷ்மீரின் பிரதமராக பதவிவகித்த தஞ்சாவூரைச் சேர்ந்த ஐ.சி.எஸ். அதிகாரியான கோபாலசாமி ஐயங்கார்தான், அந்த மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது பிரிவை அரசியல் சாசனத்தில் சேர்ப்பதில் ஈடுபட்டவர்.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலிலும் காஷ்மீர் தொடர்பான பேச்சுவார்த்தைகளிலும் இவரே முக்கியப் பங்கு வகித்தார்.

இந்தியா சுதந்திரம் பெறும்போது, காஷ்மீரை ஆண்ட மன்னர்கள் டோக்ரா வம்சத்தைச் சேர்ந்தவர்கள். அந்த வம்சத்தைச் சேர்ந்த ராஜா ஹரி சிங் காஷ்மீரின் அரசராக இருந்த காலகட்டத்தில் பிரிட்டிஷ் அரசின் வலியுறுத்தலின் பேரில் பிரதம அமைச்சர்களை நியமிக்கும் வழக்கம் துவங்கியது.

விரிவாக படிக்க:காஷ்மீரில் ஒரு தமிழர் பிரதமரானது எப்படி?

இரு தரப்பு வணிகத்தை துண்டிக்கிறது பாகிஸ்தான்

படத்தின் காப்புரிமை AFP

இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீருக்கு இருந்த சிறப்புரிமைகளை பறிக்கவும், அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கவும் இந்தியா முடிவெடுத்த நிலையில் அதற்கு பாகிஸ்தான் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளது.

இதையடுத்து அணு ஆயுத வல்லமை மிக்க இரு அண்டை நாடுகளின் உறவில் சிக்கல் தீவிரமடைந்துள்ளது.

இனி இந்தியாவுடன் இருதரப்பு வர்த்தகத்தை முற்றாகத் துண்டிப்பதும், தூதரக உறவைக் குறைப்பதும் அதில் சில.

விரிவாக படிக்க:இந்தியத் தூதரை வெளியேற்றுகிறது பாகிஸ்தான்: இரு தரப்பு வணிகத்தையும் துண்டிக்கிறது

அமைச்சர் மணிகண்டன்: தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கம்

படத்தின் காப்புரிமை TWITTER

தமிழக அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராகப் பதவி வகித்த மணிகண்டன், அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி பரிந்துரையின் பேரில் அமைச்சர் எம். மணிகண்டன் அந்தப் பதவியில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும் அந்தத் துறையை மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூடுதலாகக் கவனிப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க:தமிழக அமைச்சரவையில் இருந்து அமைச்சர் மணிகண்டன் நீக்கம் - காரணம் என்ன?

"தமிழ்நாட்டுக்கும் அச்சுறுத்தலாகும் சஹ்ரான் கருத்துப் பரப்பல்"

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமத் சஹ்ரான் ஹாஷிமின் செயற்பாடுகள் காரணமாக தமிழ்நாட்டிற்கு பெரியளவில் அச்சுறுத்தல் காணப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்.

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தும் நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) மாலை சாட்சியமளித்த சந்தர்ப்பத்திலேயே பிரதமர் இந்த கருத்தை வெளியிட்டிருந்தார்.

சஹ்ரானை நேரில் சந்திக்காத பலர், அவரது போதனைகளை கேட்டு அவர் பக்கம் திசை திரும்பியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

விரிவாக படிக்க: “தமிழ்நாட்டிற்கு அச்சுறுத்தலாகும் சஹ்ரான் கருத்துப் பரப்பல்” - ரணில் கருத்து

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்