அமேசான்: பற்றி எரிகிறது பிரேசில் காடுகள், எச்சரிக்கும் விஞ்ஞானிகள் - வன சுரண்டலின் கதை

படத்தின் காப்புரிமை Reuters

எரியும் அமேசான் காடு

வரலாற்றில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு பிரேசிலில் உள்ள அமேசான மழைக் காடுகள் இவ்வாண்டு பல முறை பற்றி எரிந்துள்ளதாக எச்சரிக்கிறது பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி முகமை.

படத்தின் காப்புரிமை Getty Images

2018 தரவுகளோடு ஒப்பிடுக்கையில் இவ்வாண்டு மழைக் காடுகள் பற்றி எரியும் நிகழ்வானது 83 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளதாக பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி முகமை கூறுகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

அதாவது இவ்வாண்டு இதுநாள் வரை 72 ஆயிரம் காட்டுத்தீ சம்பவங்கள் அமேசானில் நிகழ்ந்துள்ளன. பிரேசிலில் காடுகள் அழிக்கப்படுவது தொடர்பாக செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியானதை அடுத்து அண்மையில் அந்நாட்டு அதிபர் சயீர் பொல்சனாரூ பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி முகமை தலைவரை பணிநீக்கம் செய்தார். மேலுல், அந்தப் புகைப்படங்களை பொய்யானவை என்றார். இப்படியான சூழலில் இந்த தரவுகள் வெளியாகி உள்ளன.

படத்தின் காப்புரிமை Getty Images

தொடர்புடைய செய்தி: ஒரே ஆண்டில் அழிக்கப்பட்ட 7,900 சதுர கிலோ மீட்டர் அமேசான் மழைக்காடுகள்

ப.சிதம்பரம் முன்ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் அவரைத்தேடி வீட்டுக்கு வந்த சிபிஐ அதிகாரிகள்

படத்தின் காப்புரிமை Getty Images

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த இரண்டு முன் ஜாமீன் மனுக்களையும் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்.இந்நிலையில், டெல்லியில் உள்ள ப.சிதம்பரம் வீட்டுக்கு வந்த சிபிஐ அதிகாரிகள் அவரது உதவியாளரிடம் தகவல் விசாரித்துச் சென்றனர்.

விரிவாகப் படிக்க:ப.சிதம்பரம் முன்ஜாமீன் மனு தள்ளுபடி: வீட்டுக்கு வந்த சிபிஐ அதிகாரிகள்

புதிய கோள்களை கண்டறிந்த இலங்கை விஞ்ஞானிகள்

சூரிய குடும்பத்திற்கு வெளியில், இரண்டு கோள்களுடனான ஒரு புதிய கோள் மண்டலத்தை இலங்கை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.இலங்கையிலுள்ள விண்வெளி ஆய்வு நிறுவனமான ஆத்தர் சீ கிளார்க் நிறுவனத்தின் விஞ்ஞானிகளான மஹேஷ் ஹேரத் மற்றும் சராஜ் குணசேகர ஆகியோரே இந்த புதிய கோள் மண்டலத்தை கண்டுபிடித்துள்ளனர்.

விரிவாகப் படிக்க:புதிய கோள்களை கண்டறிந்த இலங்கை விஞ்ஞானிகள்

செளதி அரேபியா ஏன் இந்தியாவில் மிகப்பெரிய முதலீடு செய்கிறது?

படத்தின் காப்புரிமை Getty Images

ஆகஸ்ட் 14 ம் தேதி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரின் முசாபராபாத்தில் நடைபெற்ற சட்டமன்றத்தில் உரையாற்றியபோது, உலகின் ஒன்றரை பில்லியன் முஸ்லிம்கள் காஷ்மீர் விவகாரத்தில் ஒன்றுபட்டுள்ளனர், ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஆட்சியாளர்கள் அமைதியாக இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, முஸ்லீம் நாடுகள் ஓரணியில் திரளவேண்டும் என இம்ரான் கான் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறார். இதற்கிடையில், செளதி அரேபிய எண்ணெய் நிறுவனமான அரம்கோ இந்தியாவில் இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய முதலீட்டை செய்யப்போவதாக முகேஷ் அம்பானி அறிவித்தார்.

விரிவாகப் படிக்க:செளதி அரேபியா ஏன் இந்தியாவில் மிகப்பெரிய முதலீடு செய்கிறது?

கிறிஸ்தவ கல்வி நிலையங்கள் பற்றிய கருத்தை திரும்பப் பெற்றது சென்னை உயர்நீதிமன்றம்

இருபாலர் பயிலும் கிறிஸ்தவ கல்விநிலையங்களில் பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு பாதுகாப்பு அற்றவை என்ற பரவலான கருத்து இருப்பதாக கடந்த வாரம் தெரிவித்த தனது கருத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் திரும்பபெற்றுள்ளார்.

சென்னையில் உள்ள மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரியில் இருந்து பாலியல் புகாரில் பணிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து பேராசிரியர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவுசெய்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன் பேராசிரியரின் பணிநீக்கத்தை ரத்து செய்யமுடியாது என்று கூறிய அதேநேரத்தில், இருபாலர் பயிலும் கிருத்துவ கல்விநிலையங்களில் பெண் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து பெற்றோர் அச்சத்தில் இருப்பதாக ஒரு கருத்து உள்ளது என்ற கருத்தை தீர்ப்பில் சேர்த்திருந்தார்.

விரிவாகப் படிக்க:கிறிஸ்தவ கல்வி நிலையங்கள் பற்றிய கருத்தை திரும்பப் பெற்றது சென்னை உயர்நீதிமன்றம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: