கஜகஸ்தான் அரசுக்கு எதிராக களம் இறங்கிய கூகுள் மற்றும் மொசில்லா நிறுவனம் - ஏன் தெரியுமா?

படத்தின் காப்புரிமை Getty Images

கஜகஸ்தான் அரசுக்கு எதிராக கூகுள்

படத்தின் காப்புரிமை Getty Images

கூகுள் மற்றும் மொசில்லா நிறுவனம் கஜகஸ்தான் அரசுக்கு எதிராக ஒரு நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது, பயனர்களின் இணைய பயன்பாட்டை இடைமறிக்கும் கஜகஸ்தான் அரசின் செயல்பாட்டை அந்த நிறுவனம் தடை செய்துள்ளது.

என்ன நடந்தது?

கஜகஸ்தானில் இணைய சேவை அளிப்பவர்கள், தங்கள் சேவையை பயன்படுத்தும் மக்கள் அரசு அளிக்கும் மென்பொருள் ஒன்றை தங்கள் சாதனத்திலும், பிரவுசரிலும் நிறுவ கோரியது. இதனை அடுத்தே கூகுள் நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. அரசு இந்த மென்பொருள் இணைய பாதுகாப்புக்கு என்று கூறுகிறது. ஆனால், மக்களை கண்காணிக்கவே அரசு இப்படி செய்தவதாக கூகுள் கூறுகிறது.

ப. சிதம்பரம் சிபிஐ காவலில் எடுக்கப்பட்டார்

படத்தின் காப்புரிமை Getty Images

இந்தியாவின் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்வதில் இருந்து இடைக்கால விலக்கு அளிக்க மறுத்த டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சிதம்பரம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை இந்திய உச்ச நீதிமன்றம் அவசர வழக்காக விசாரிக்க மறுத்திருந்த நிலையில், அவர் இன்று, புதன்கிழமை இரவு, சிபிஐ அதிகாரிகளால் காவலில் எடுக்கப்பட்டார் .

விரிவாகப் படிக்க:பரபரப்புக்கு மத்தியில் சிபிஐ காவலில் எடுக்கப்பட்டார் சிதம்பரம்

சென்னை தினம் கொண்டாட ஏன் ஆகஸ்ட் 22 ஆம் தேதியை தேர்ந்தெடுத்தது ஏன்?

ஏன் ஆகஸ்ட் 22 ஆம் தேதியை சென்னை தினமாக கொண்டாடுகிறோம் தெரியுமா?

சென்னை வாங்கப்பட்ட தினம் இது. சென்னையின் பார்வையிலிருந்து சொல்ல வேண்டுமானால் சென்னை விற்கப்பட்ட தினம். இதைதான் சென்னை தினமென நாம் கொண்டாடுகிறோம்.

கோரமண்டல கடல் பகுதியில் காலூன்ற நினைத்த பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம், விஜயநகர ஆட்சியிலிருந்த இந்த நிலப்பரப்பில் தங்களுடைய வணிக செயல்பாடுகளை தொடங்க எண்ணியது.

அந்த சமயத்தில் பழவேற்காடு முதல் சாந்தோம் வரையிலான நிலப்பரப்பு வெங்கடப்ப நாயக்கர் கட்டுபாட்டில் இருந்தது.

விரிவாக தெரந்துகொள்ள:

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
சென்னை தினம் கொண்டாட ஏன் ஆகஸ்ட் 22 ஆம் தேதியை தேர்ந்தெடுத்தோம் தெரியுமா?

கார் ஓட்டிய 8 வயது சிறுவன்: 140 கி.மீ வேகத்தில் இயக்கி கண்ணீரில் முடிந்த கதை

படத்தின் காப்புரிமை PEEPO / GETTY

ஜெர்மனியில் பெற்றோருக்குத் தெரியாமல் காரை எடுத்துக்கொண்டு ஓர் எட்டு வயது சிறுவன் மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது என்று அந்நாட்டு காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.டோர்முன்ட் எனும் நகரை நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையின் ஓரத்தில் அந்தச் சிறுவன் காரை நிறுத்தி வைத்திருந்தபோது உள்ளூர் நேரப்படி, இன்று, புதன்கிழமை, அதிகாலை மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரிவாகப் படிக்க:பெற்றோருக்கு தெரியாமல் 140 கி.மீ வேகத்தில் காரை ஓட்டிய 8 வயது சிறுவன்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்