உலக அளவில் பூர்வகுடி மக்கள் எதிர்கொள்ளும் வாழ்வாதார அச்சுறுத்தல்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பூர்வகுடிகளின் பறிபோகும் உரிமைகள் - அச்சுறுத்தலில் நிலம், வளம், மொழி

உலகம் முழுவதும் சுமார் 37 கோடி பூர்வகுடிகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் வாழ்வாதாரம் பெரிதும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.

இப்போது நடந்து வரும் வணிக வளர்ச்சி மற்றும் காடுகளை அழிப்பதால் பூர்வகுடி மக்களின் நிலத்தை பாதுகாப்பது மிகப் பெரிய சவாலாக உள்ளது.

உலகின் 80 சதவீத பல்லுயிர் பெருக்கம் பூர்வகுடி மக்கள் வாழும் பகுதிகளிலேயே அமைந்துள்ளது.

உலகில் உள்ள 7000 மொழிகளில் பாதி அளவு மொழிகளை பூர்வகுடிகளே பேசுகின்றனர்.

ஒவ்வொரு இரண்டு வாரத்திற்கும் ஒரு பூர்வகுடி மொழி அழிந்து வருகிறது என ஐ.நாவின் தரவுகள் தெரிவிக்கின்றன.

உலக மக்கள் தொகையில் பூர்வகுடிகள் வெறும் 5%தான். ஆனால் உலகில் வறுமையில் வாடும் மக்களில் 15% பேர் பூர்வகுடிகளாக உள்ளனர்

இந்த பிரச்சனைகளை விளக்கும் காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: