அமெரிக்கா - தாலிபன்கள் இடையே புதிய ஒப்பந்தம் - டிரம்பின் முடிவுக்காக காத்திருப்பு மற்றும் பிற செய்திகள்

அமெரிக்கா - தாலிபன்கள் இடையே புதிய ஒப்பந்தம் படத்தின் காப்புரிமை Reuters

தாலிபன் தீவிரவாதிகளுடன் "கொள்கை அளவில்" எட்டப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்கா அடுத்த 20 வாரங்களுக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து தனது 5,400 துருப்புக்களை திரும்பப் பெறும் என்று வாஷிங்டனின் உயர்மட்ட பேச்சுவார்த்தையாளர் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் நல்லிணக்கத்திற்கான அமெரிக்காவின் சிறப்பு பிரதிநிதியான சல்மே கலீல்சாத், ஆப்கானிஸ்தான் அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஒப்பந்தம் குறித்த அறிவிப்பை தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் முதல் முறையாக வெளியிட்டார்.

இருப்பினும், இதுகுறித்த இறுதி முடிவை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பே எடுப்பார் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த நேர்காணல் ஒளிபரப்பாகிக்கொண்டு இருக்கும்போதே காபூலில் பயங்கர குண்டுவெடுப்பு நிகழ்ந்தது.

இந்நிலையில், வெளிநாட்டு படையினரை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக்கொள்வதாக தாலிபன்கள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் குறைந்தது ஐந்து பொது மக்கள் உயிரிழந்ததுடன், பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது: மனிதாபிமானமும் நீக்கப்படவேண்டுமா?

படத்தின் காப்புரிமை Getty Images

காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு மேற்கொண்ட பயணம் நம்மைப் பற்றி வலிமிகுந்த கேள்விகளை எழுப்புவதாக உள்ளது.

முற்றுகையிடப்பட்ட நிலையில் இருக்கும் தங்கள் நகரைப் பார்வையிட வந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 12 பேர் கொண்ட குழுவுக்கு அரசு அனுமதி அளிக்குமா என்பதை அறிய, கடந்த சனிக்கிழமை மதியம் ஸ்ரீநகரில் நாங்கள் வீட்டில் தொலைக்காட்சியை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தோம்.

விரிவாக படிக்க: காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது: மனிதாபிமானமும் நீக்கப்படவேண்டுமா?

'இலங்கை காதலை' கைவிடாத அமெரிக்க ரத்தின வணிகர்

படத்தின் காப்புரிமை COURTESY OF LEWIS FAMILY

கடந்த 35 வருடங்களாக இலங்கையுடன் மிகவும் நெருங்கிய உறவை பேணி வந்த அமெரிக்க பிரஜையான லுவிஸ் எலன், இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட ஒருவராக இருக்கிறார்.

மாணிக்கக்கல் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள லுவிஸ் எலன், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை இலங்கைக்கு வருகை தருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இலங்கையில் லுவிஸ் எலனுக்கு பல நெருங்கிய நண்பர்கள் இருக்கின்றனர்

விரிவாக படிக்க: ஈஸ்டர் தாக்குதலில் மனைவியை இழந்தாலும் 'இலங்கை காதலை' கைவிடாத அமெரிக்க வணிகர்

இந்தியாவின் வாகன உற்பத்தித்துறையில் கடும் வீழ்ச்சி - காரணம் என்ன?

படத்தின் காப்புரிமை SAM PANTHAKY

இந்தியாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில், ஒரு இளம் தம்பதியினர் , வாரஇறுதி வரைக்கும் சாப்பிட அவர்களுக்கு போதுமான அரிசி இருக்கிறதா என்பது குறித்து ஆலோச்சித்து கொண்டிருந்தார்கள்.

ஒரு சிறு குடிசை வீட்டில் இருந்து வெளியே எட்டிப் பார்த்த மனைவி, "நீங்கள் தவறான இடத்திற்கு வந்துவிட்டீர்கள். இங்கு சுற்றி காலியாக இருக்கும் தொழிற்சாலைகளை சென்று பாருங்கள்" என்று கூறினார்.

அவரது கணவர் ராம் மார்தியின் ஊதியத்தில்தான் அவரது குடும்பம் வாழ்கிறது. தற்போது கடினமான சூழல் நிலவுவதாக அவர் வருத்தத்துடன் தெரிவிக்கிறார்.

விரிவாக படிக்க: இந்தியாவின் வாகன உற்பத்தித்துறையில் கடும் வீழ்ச்சி - காரணம் என்ன?

பாகிஸ்தான் இஸ்ரேலுடன் நட்பாக இருக்க விரும்புவது ஏன்? - காஷ்மீர் விவகாரம்

படத்தின் காப்புரிமை Getty Images

காஷ்மீர் தொடர்பான நரேந்திர மோதி அரசாங்கத்தின் கொள்கை குறித்து பாகிஸ்தானில், இஸ்ரேலை சம்பந்தப்படுத்தி விவாதங்கள் எழுந்துள்ளன. காஷ்மீரில் இந்தியாவின் ஆக்கிரமிப்பு மற்றும் உறுதிக்குப் பின்னால் இஸ்ரேலுக்கு பெரிய பங்கு இருப்பதாக பாகிஸ்தானில் பேசப்படுகிறது.

பாகிஸ்தானுக்கும் இஸ்ரேலுக்கும் ராஜீய உறவுகள் இல்லை. காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக முஸ்லீம் நாடுகளின் ஆதரவை பெறவில்லை என்ற ஆதங்கம் பாகிஸ்தானுக்கு இருக்கும் நிலையில், இஸ்ரேலுடனான இராஜீய உறவுகளை பாகிஸ்தான் ஏன் மீட்டெடுக்கக்கூடாது என்று விவாதிக்கப்படுகிறது. மறுபுறம், இந்தியாவுக்கு அரபு நாடுகளுடன் நல்ல உறவு இருப்பதோடு, இஸ்ரேலுடன் ஆழமான நட்பும் உள்ளது.

விரிவாக படிக்க: காஷ்மீர் விவகாரம்: இஸ்ரேலுடன் பாகிஸ்தான் நட்பாக விரும்புவது ஏன்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்